மதுக்கொள்கை வழக்கில் இடைக்கால ஜாமீன் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் திகார் சிறையில் சரணடைவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடைகிறது.
இதனை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோவில், நாளை மறுநாள் திகார் சிறையில் சரணடைய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறை எவ்வளவு காலம் சிறையில் இருக்க வேண்டும் எனத் தெரியவில்லை என்று கூறியுள்ள அவர், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்குவேன் என்றும் கூறியுள்ளார்.