Type Here to Get Search Results !

பிரதமர் மோடி பகவதியம்மன் (வாலை) கோவிலில் சுவாமி தரிசனம்...!

 கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார்.

கன்யாகுமரியில் தியானம் செய்ய பிரதமர் மோடி வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

பிரதமர் மோடியின் தியானம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து கன்யாகுமரி சென்ற பிரதமர் மோடி, பகவதிம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் ஆன்மிக தலங்களுக்குச் சென்று தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் பிரதமர் மோடி. இந்த முறை கன்யாகுமரியில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை தியானம் செய்வதற்கு ஏற்ற இடமாக பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார்.

இதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்யாகுமரிக்கு விஜயம் செய்தார். அங்கு முதலில் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்குச் செல்லும் பிரதமர், விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு தியான மண்டபத்துக்குச் சென்று மாலை 6 மணிக்கு தியானத்தைத் தொடங்குகிறார். அங்கு 3 நாட்கள் தங்கி தியானம் செய்ய உள்ளார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் 3 நாட்கள் தியானம் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் தியானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. பிரதமரின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் கன்யாகுமரி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார். இந்நிலையில், பிரதமர் தியானம் செய்யும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.