இந்த ஆண்டு இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதார நிபுணர் எஸ்.பி.சர்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு தடைகளை எதிர்கொண்டாலும், இந்தியப் பொருளாதாரம் 8.2 சதவிகிதம் சாதகமான வளர்ச்சியில் உள்ளது.
மேலும், நடப்பு 2024-25 நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2030ல் 7 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும் மாறும் என்று பொருளாதார நிபுணர் எஸ்.பி.சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.