Type Here to Get Search Results !

கடந்த 24 மணி நேரத்தில் 6977 புதிய கொரோனா தொற்றுக்களுடன் உச்சத்தில் இந்தியா



இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,38, 845 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,977 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 154 பேர் உயிரிழந்துள்ளனர்.


மகாராஷ்டிரா தொடர்ந்து 50,231 வழக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,041 புதிய வழக்குகள் மற்றும் 58 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது 1,635 ஆக உயர்ந்துள்ளது. 50,231 வழக்குகளில் மொத்தம் 14,600 பேர் குணமாகியுள்ளனர்.
16,277 வழக்குகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும், குஜராத் 14,056 வழக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இறப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் 111 ஆகவும், குஜராத்தில் 858 ஆகவும் இருந்தது. டெல்லியில் 13,418 வழக்குகள் மற்றும் 261 பேர் உயிரிழந்துள்ளனர், 6,412 நோயாளிகள் இங்கு குணமாகியுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று( மே.,25) காலை 9 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ல் இருந்து 1,38, 845 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 3,867 ல் இருந்து 4,021 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54,441 ல் இருந்து 57, 721 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் 77, 103 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 6,977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநிலங்களின் பாதிப்பு விவரம்

மாநிலம்- பாதிப்பு- உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 50,231-1635
தமிழகம் - 16,277-111
குஜராத் - 14,056-858
டில்லி-13,418-261
ராஜஸ்தான்-7,028-163
ம.பி.,-6,665-290
மே.வங்கம்- 3,667-272
ஆந்திரா-2,823-56
பீஹார்-2,587-13
கர்நாடகா-2,089-42
பஞ்சாப்-2,060-40
தெலுங்கானா-1,854-53
காஷ்மீர்-1,321-21
ஒடிசா-1,336-7
ஹரியானா-1,184-16
கேரளா-847-4
அசாம்-378-04
ஜார்க்கண்ட்-317-03
உத்தரகண்ட்-317-3
சத்தீஷ்கர்-238-03
ஹிமாச்சல பிரதேசம்-203-03
திரிபுரா-191-0
கோவா-66-0
லடாக்-5209
புதுச்சேரி-41-0
அந்தமான்-33-0
மணிப்பூர்-32-0
மேகாலயா-14-01
தாத்ரா நாகர் ஹவேலி-2-0
மிசோரம்-01-0
நாகலாந்து-01-0
அருணாச்சல பிரதேசம்-01
சிக்கிம்-01-0