Type Here to Get Search Results !

பிரச்சாரத்தின் போது மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக MP

 

அதிமுக மாநிலங்களவை எம்.பி. முகமது ஜான் பிரச்சாரத்தின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மாநில பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, திமுக சார்பில் போட்டியிட்ட ஆர். காந்தி என்பவரிடம் தோல்வியடைந்தார். இதனையடுத்து, தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் முகமது ஜான் பணியாற்றி வந்தவர்.

பின்னர், 2019ம் ஆண்டு சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாலாஜா அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழிலேயே உயிரழந்துவிட்டதாக கூறியுள்ளனர். பிரச்சாரத்தில் போது மாநிலங்களவை எம்.பி. உயிரிழந்த சம்பவம் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom