Type Here to Get Search Results !

திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்ட விஷயங்கள்... பாஜக அதிரடி

 

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே சொல்லாமல் விட்ட விஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அவற்றின் நான்கு முக்கியமான விஷயங்களை பார்ப்போம்.. பூரண மதுவிலக்கு, கட்டாய மதமாற்ற தடை சட்டம், இந்து கோயில்களுக்கு தனிவாரியம், சென்னை மூன்றாக பிரிப்பு ஆகியவற்றை சொல்லலாம்.

பாரதிய ஜனதா கட்சி, தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.

அந்த அறிக்கையில், முக்கியமான விஷயம் பூரண மதுவிலக்கு. அதிமுக திமுக இரண்டுமே, பூரண மதுவிலக்கை வாக்குறுதியாக அளிக்கவில்லை. ஆனால் பாஜக அளித்துள்ளது. பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

டாஸ்மாக் பணியாளர்கள் வேறுதுறைக்கு பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


மதமாற்றம் தடை

கட்டாய மதமாற்ற தடை சட்டம்: பாஜகவின் அறிக்கையில், வழிபாட்டு உரிமை என்பது கட்டாயமாக மதம் மாற்றுகின்ற உரிமையாகாது, ஆசை வார்த்தை காட்டி மற்றும் அச்சுறுத்தி மதம் மற்றுவத கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டு கட்டாய மத மாற்றத் தடை சட்டம் கொண்டு வரப்படும். மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க நீதிபதி வேணுகோபால் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்து கோயில் நிர்வாகம்

மதச் சார்பற்ற அரசு இந்துக்களின் வழிபாட்டுத்தலங்களை மட்டும் தன்வசம் வைத்திருப்பதை மாற்றி, இந்து கோயில்களின் நிர்வாகம், இந்து ஆன்றோர், இந்து சான்றோர் மற்றும் துறவிகள் அடங்கிய தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்கப்படும். இந்து அல்லாதவர்களுக்கு வாடகை அல்லது குத்தகைவிடக்கூடாது என்ற விதியை முழுமையாகக் கடைப்பிடித்து ஆக்கிரமிப்பாளக்ள் அப்புறப்படுத்தப்படுவார்கள். கோயிலுக்கு சொந்தமான அனைத்து நிலங்களம் கட்டிடங்களும் மீட்டு ஆலயம் வசம் ஒப்படைக்கப்படும். கோயில்களில் தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பிரிப்பு

தலைநகர் டெல்லியில் உள்ளது போல் சென்னை மாநகராட்சியும் மூன்று மாநகராட்சிகளாகப் பிரிக்கப்படும். சென்னையில் ஓடும் கூவம் ஆறு சுத்தப்படுத்தப்பட்டு நீர்வழி போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வகையில் சீரமைக்கப்டும் என்று பாஜக கூறியுள்ளது. சென்னையில் மாநகராட்சி பிரிப்பு என்பது அதிமுக, திமுக இரண்டுமே நினைத்துக்கூட பார்க்காத விஷயம் ஆகும். இதேபோல் கோயில் நிர்வாகம் அரசிடம் இருந்து தனி வாரியத்திற்கு அளிப்பதையும் அதிமுக, திமுகஇரண்டுமே ஒரு காலத்திலும் ஏற்குமா என்பது தெரியவில்லை.

பஞ்சமி நிலம் மீட்பு

பாஜக அறிவித்த மேலும் சில அதிரடியாக அறிவிப்புகளை பார்ப்போம். அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பசுவினத்தைப் பாதுகாக்க பசுவதைத் தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். இறைச்சிக்காக கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பசுக்கள் கடத்தப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். மீட்கப்படும் பசுக்களை தமிழக கோவில்களில் கோசாலைகள் அமைத்துப் பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும். 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தேசிய கல்விக் கொள்கை முழுமையாக அமல்படுத்தப்படும். 12லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலன மக்களிடமே ஒப்படைக்கப்படும் உள்பட 25 பக்கத்திற்கு அறிவிப்புகளை பாஜக வெளியிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom