Type Here to Get Search Results !

அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவு‌‌‌‌‌..... எத்தனை தொகுதிகள்...?

 

அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற 2-ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் நாளை ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் சைக்கிள் சின்னம் பெறுவதற்கு 12 தொகுதிகள் கேட்டிருந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக - தமாகா கட்சிகள் இடையே சென்னை தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமாகா சார்பில் கோவை தங்கம், ராஜேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

அதிமுக தரப்பல் அமைச்சர் வேலுமணி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தற்போது முடிவடைந்துள்ளது.

தமாகா 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்த நிலையில் 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை கூட்டணி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையொழுத்து ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகறிது. பட்டுக்கோட்டை, அரியலூர், ஈரோடு, காங்கேயம், வால்பாறை போன்ற தொகுதிகளில் தமாகா-விற்கு ஆதரவு உள்ளதால் அங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதிமுக - தமாகா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில் மற்ற கூட்டணயி கட்சிகளுடனும் அதிமுக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom