Type Here to Get Search Results !

நாங்கள் கடைசியாக இந்த தொகுதிகளாவது தர வேண்டும் தேமுதிக உறுதி....!

 

தொகுதி குறித்து அதிமுக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேமுதிகவின் துணை செயலாளர் பார்த்தசாரதி, தேமுதிக சார்பில் போட்டியிட இதுவரை 2000க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு அளித்துள்ளார்கள். வரும் 6, 7, 8 ம் தேதி விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 3 பேர் இரண்டு கட்டமாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.

தேமுதிக தலைவர் கூறிய தொகுதிகளை நாங்கள் அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

அதிமுக நாங்கள் கேட்டதை விட குறைவாக ஒதுக்குவதாக தெரிவித்தார்கள். 2 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, தற்போது தான் ஒரு நிலைக்கு வந்துள்ளது. நாங்கள் கேட்கும் எண்ணிக்கைக்கு வந்தால், ஒப்பந்தத்தில் கையெழுதியிடுகிறோம் என்று தெரிவித்துள்ளோம் என கூறியுள்ளார்.

கடந்த 2019லிருந்து இதுவரைக்கும் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றும் இன்றுவரை அதிமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு பிறகு தான் தொகுதி குறித்து பேச முடியும். 2011ல் 41 தொகுதிகள் கேட்டோம், அதேபோல் இந்த முறையும் முதல் கட்டமாக 41 தொகுதிகள் தான் கேட்டோம் என கூறியுள்ளார்.

அதிமுக - தேமுதிக இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதி செய்யப்பட்டதும் நிச்சயம் அறிவிப்போம். நாங்கள் கடைசியாக 25 தொகுதிகளாவது தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.ஆகையால், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு நாட்களில் சுலபமான முடிவு எட்டப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு கூட்டணி என்றால் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி இருக்கத்தான் செய்யும். ஒரே கட்சி இருந்தால் சிக்கல் ஏற்படாதது, பல்வேறு கட்சியில் கூட்டணியில் இடம் பெற்றுள்ளதால், சற்று இழுபறி இருக்கத்தான் செய்யும் என தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom