Type Here to Get Search Results !

2011 மற்றும் 2016ம் ஆண்டு வெற்றி பெற்றார். 7வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டி

 

2011 மற்றும் 2016ம் ஆண்டு வெற்றி பெற்றார். 7வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜெயக்குமார் - ராயபுரம் 1991-ம் ஆண்டு முதல் முறையாக ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யபட்டார்.பின் 1996ம் ஆண்டு தோல்வியடைந்தார். பின்னர் 2001,2006,2011 ஆகிய சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.தற்போது 6வது முறையாக ராயபுரம் தொகுதியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சி.வி.சண்முகம் - விழுப்புரம் 2001ம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் 2006ம் ஆண்டும் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.2011 மற்றும் 2016ம் ஆண்டு விழுப்புரம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.தற்போது 5வது முறையாக விழுப்புரம் தொகுதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சண்முகநாதன் - ஸ்ரீவைகுண்டம் 2001ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2006ம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2011ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நின்று வெற்றி பெற்று அமைச்சரவையில் இடம் பெற்றார்.

2016ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றார். தற்போது 5வது முறையாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேன்மொழி - நிலக்கோட்டை ( தனி ) 2006ம் ஆண்டு முதல் முறையாக நிலக்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். 2016ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட தங்கதுரை டிடிவி தினகரன் ஆதரவு நிலப்பாடு எடுத்தமையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பின் 2019ம் ஆண்டு இடைத்தேர்தலில் தேன்மொழி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.மூன்றாவது முறையாக நிலக்கோட்டை தொகுதியில் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom