Type Here to Get Search Results !

புதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக்கு சரியான ஆதரவு தேவை..... மோடி அதிரடி பேச்சு


புதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக்கு சரியான ஆதரவு தேவை, அதை நாம் தருவோம், தகவல் தொழில்நுட்ப துறை, மருத்துவத்துறை, உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.  மருத்துவம், தொழிற் கல்வியை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என மோடி கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரைக்காக புதுச்சேரி வந்த அவர்,  லாஸ்பேட்டையில் பாஜகவின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது. புதுச்சேரி இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்கள், அவர்களுக்கு சரியான ஆதரவு தேவை, அதை நாம் தருவோம், தகவல் தொழில்நுட்ப துறை, மருத்துவத்துறை, உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும்.  மருத்துவம், தொழிற் கல்வியை தாய்மொழியில் கற்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆன்மிகச் சுற்றுலாவுக்கு புதுச்சேரி அற்புதமான பகுதி, என்னால் புதுச்சேரிக்கான தேர்தல் வாக்குறிதியை ஒரு சில வார்த்தைகளில் கூற முடியும், அதாவது வர்த்தகம், கல்வி, ஆன்மீகம், சுற்றுலா என புதுச்சேரியை மிகச்சிறந்த மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். மேற்கூறிய நான்கு துறைகளின் மையமாக புதுச்சேரியை உருவாக்குவோம் என்பதே எனது தேர்தல் அறிக்கை. 

நாட்டில் சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது,  சுற்றுலாத்துறை வளர்ச்சி மூலம் பொருளாதாரம் மேம்பாடு அடையும். கடல்சார் துறை கூட்டுறவுத் துறை ஆகியவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,  சாகர்மாலா திட்டங்கள் மூலம் மீனவர்களிடையே மாற்றத்தை கொண்டுவர முடியும்.  புதுச்சேரி இளைஞர்களுக்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும், உதவிகளையும் பாஜக அரசு செய்யும். கல்விக்கான உட்கட்டமைப்பு திட்டங்களையும்,  தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கவனம் செலுத்தும்.  புதுச்சேரியில் 2020 இல் தேசிய கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இது கற்றலுக்கான முறையில் மாற்றத்தை கொண்டுள்ளது. மேலும் இது பல கல்வி மையங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. முந்தைய நிகழ்ச்சியில் கூட மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். 

கல்வியில் மொழி ஒரு தடையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்,  மருத்துவம் மற்றும் பொறியியல்  கல்வியை உள்ளூர் மொழியில் தர முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.  இங்கு பல்வேறு மொழி கலாச்சாரங்களை கொண்டவர்கள் உள்ளனர். இது ஆன்மீகச் சுற்றுலா தளமாகவும்,  உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான தகுதியுடைய இடமாக புதுச்சேரி உள்ளது. புதுச்சேரியில் சூரிய ஒளி பெற்று இருக்கிறோம், இங்கு மணல் இருக்கிறது. கடற்கரை இருக்கிறது.  ஆன்மீக மையங்கள் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பணியாற்றி வருகிறது. கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் துறை வேகமாக வளர்ந்து இருக்கிறது,  உலகத்திலேயே சுற்றுலாத்துறையில்  68 வது இடத்தில் இருந்து நாம் 34 இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம். இவ்வாறு மோடி கூறினார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom