Type Here to Get Search Results !

புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி.... ஆட்சியமைக்க எதிர்கட்சிகள் தயக்கம்.... அதிகாரபூர்வ அறிவிப்பு.....


புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 

புதுச்சேரியில் திமுக ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அக்கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததையடுத்து, நாராயணசாமி அரசு பெருபான்மையை இழந்ததாக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, நேற்று பெருபான்மையை நிரூபிக்க முடியாததால் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார். சட்டப்பேரவையில் வெளியேறிய முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசையை சந்தித்து தனது அமைச்சரவையை ராஜினாமா செய்து கடிதம் அளித்தார்.

இதனிடையே, புதிய அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரவில்லை. சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில் அரசு அமைக்க எதிர்கட்சிகள் விரும்பவில்லை. மேலும், மாற்று அரசு அமைக்க எதிர்கட்சிகள் உரிமை கோரினால் ஒட்டு மொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கொறடா அனந்தராமன் கூறியுள்ளார்.  காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால் புதிய அரசு அமைக்க முடியாது.

இதனையடுத்து, ஆளுநர் உத்தரவின் பேரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததால் சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டு சட்டப்பேரவை செயலர் ஆளநரிடம் ஒரு அறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இந்த அறிக்கையை வைத்து ஆளநர் தமிழிசை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, குடியரத்தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி பரிந்துரை செய்துள்ளார்.  இதனையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத்தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்யும். இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom