பகத் வர்மா, ஹரி நிஷாந்த் மற்றும் ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை தலா ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணி தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். போட்டியில் இதுவரை விளையாடாத நியூசிலாந்து வீரர் ஜேமிசனுக்கு அடிப்படை தொகையாக ரூ. 75 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், ரூ. 15 கோடிக்கு பெங்களூரு அணி தேர்வு செய்துள்ளது.
இந்திய வீரர் புஜாராவை ரூ. 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.
தமிழக வீரர் ஷாருக் கானை ரூ. 5.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி. மற்றொரு தமிழக வீரர் எம். சித்தார்த்தை ரூ. 20 லட்சத்துக்குத் தேர்வு செய்துள்ளது தில்லி அணி.
சிஎஸ்கே முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்கை எந்த அணியும் தேர்வு செய்யவில்லை.
24 வயது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 14 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக விலைக்குத் தேர்வான வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் டேவிட் மலானை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது பஞ்சாப் அணி.
இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலியை ரூ. 7 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
ஆஸி. வீரர் மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்குத் தேர்வு செய்தது ஆர்சிபி அணி. சிஎஸ்கேவுடன் கடுமையாகப் போட்டியிட்டு மேக்ஸ்வெல்லை ஆர்சிபி தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் ஏலம்
*
*
*
*
புஜாரா - ரூ. 50 லட்சம் - சென்னைதுஷார்
*
*
*
*
*
*
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் ஏலம் சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.
கரோனா சூழல் காரணமாக சுருக்கமாக நடத்தப்படும் இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் 164 போ் இந்தியா்கள்; 125 போ் வெளிநாட்டு வீரா்கள். 3 போ் அசோசியேட் நாடுகளின் வீரா்கள்.
292 வீரர்களில் இருந்து 22 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 61 வீரர்களை அணிகள் தேர்வு செய்யவேண்டும்.
8 அணிகளிலுமாக மொத்தம் 61 இடங்கள் காலியாக உள்ளன. அதிகபட்சமாக ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரில் 11 இடங்களும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதில் 3 இடங்களும் காலியாக உள்ளன. கையிருப்பு தொகையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் ரூ.53.20 கோடியும், குறைந்தபட்சமாக சன்ரைசா்ஸ் ஹைதராபாதிடம் ரூ.10.75 கோடி உள்ளன.
அடிப்படைத் தொகை ரூ. 2 கோடியில் ஹர்பஜன் சிங், கெதர் ஜாதவ் உள்பட 10 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1.5 கோடியில் 12 வெளிநாட்டு வீரர்களும் ரூ. 1 கோடியில் 2 இந்திய வீரர்கள் உள்பட 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளார்கள். ஏலப்பட்டியலில் ஷாருக் கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், ஜி. பெரியசாமி, பாபா அபராஜித், எம். முகமது ஆகிய 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
No comments
Post a comment