Type Here to Get Search Results !

2021 புதிய தொழில் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!


தமிழகத்தில் தகுதி வாய்ந்த தொழில்களுக்கு முதல் நான்கு ஆண்டு காலம் செயல்பட தேவையான அனுமதியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் “FAST TN” என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021யை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனைத் தெரிவித்தார். 

பெரும் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைத்து தங்கள் தொழில்களை பெருக்கிட வழி செய்யும் பொருட்டு தமிழக அரசு, தொழில் கொள்கைகளை வெளியிட்டு வருகிறது. இதன் மூலம், சர்வதேச தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழக அரசு வழி செய்து தருகிறது. தொழில் புரிவதற்கான ஏற்ற சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி தருவதால் தொழில் நிறுவனங்களும் இங்கு தொழிற்சாலைகளை அமைத்திட ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காலத்திலும் தமிழக அரசு 61 ஆயிரம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும், நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021யை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். அபோது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் புதிய தொழில் கொள்கை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் விதமாக புதிய தொழில் கொள்கை அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளில் 6.53 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் 81 % பல்வேறு நிலைகளில் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.சி. சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு தனியாக தொழில் கொள்கை அமைத்து தமிழக அரசு புதிய சாதனை, முதல்வர் வெளியிட்ட புதிய தொழில் கொள்கை 2021 ல்  சிறு குறு நிறுவனங்களுக்கு பல்வேறு மானியங்கள் மற்றும் சலுகைகள் அறிவிப்பு. 

குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் மூன்று மடங்காக உயர்தப்பட்டு 1.5 கோடி ரூபாயாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குறு மற்றும் சிறு நிறுவனங்களின் தொழில்களை பெருக்கிட ஏதுவாக தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021யை வெளியிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் குறு, சிறு தொழில்களுக்கு என தனியாக தொழில் கொள்கையை வெளியிட்டு  தமிழக அரசு சாதனை புரிந்துள்ளது. 

பெரு தொழில் நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளின் சுமார் 40 சதவீத பணிகளுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நம்பியுள்ளது. பெரு நிறுவனங்களின் வளர்ச்சி என்பது சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்களையே நம்பி உள்ளது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டியை தொடர்ந்து கொரோனாவால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. மத்திய அரசும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் முதலீட்டு வரம்புகளை உயர்த்தி உத்திரவிட்டது. இருப்பினும், குறு மற்றும் சிறு நிறுவனங்களின் சீரமைப்பு என்பது போதிய அளவு இல்லை.  

இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுனங்களை பாதுக்காத்திடும் வகையில் தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021யை வெளியிட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வைப்பு நிதியில் நிறுவனங்களின் பங்கீட்டில் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு 2400 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு தனியாக தொழில் கொள்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom