Responsive Ad Slot

தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக காமெடி பேச்சு..‌‌....பிரேமலதா

No comments

Sunday, 28 February 2021

 

தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறியதை, நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவுக்கு கெஞ்சிப் பழக்கமில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசினார்.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேமுதிக மண்டலப் பொறுப்பாளர் இளங்கோவன் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா பேசியதாவது:

''தமிழகத்தின் நம்பர் ஒன் கட்சி தேமுதிக. யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.

மக்களைச் சந்திக்க குறுகிய காலமே உள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து வெற்றி பெற்றால் என்ன செய்வோம் என்பதை விளக்கிக் கூற கால அவகாசம் வேண்டும் என்பதால்தான் சில நாட்களுக்கு முன்பு கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்து விரைந்து பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என அக்கறையோடு கூறினேன்.

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பிரேமலதா.

ஆனால், தற்போது தேர்தல் தேதி திடீரென்று அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவுக்கு குறுகிய நாட்களே இருப்பதை, அப்போது ஏளனமாக பேசியவர்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள். நான் அவரசப்படுகிறேன், டென்ஷன் ஆகிறேன், கெஞ்சுகிறேன் என்றெல்லாம் விமர்சனம் செய்தனர். தேமுதிகவிற்கு கெஞ்சிப் பழக்கமில்லை. எந்தக் காலத்திலும் டென்ஷன் இல்லை. தேமுதிக 234 தொகுதிகளிலும் தனித்துக் களம் கண்ட கட்சி. இருப்பினும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கி இருப்பதால் கூட்டணியை நாட வேண்டியுள்ளது. நிச்சயம் நமக்கான காலம் வரும். அப்போது விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி அமையும்.

இவ்வாறு பிரேமலதா பேசினார்.

விஜயகாந்தை அமைச்சர்கள் நேரில் சந்திப்பு

No comments
 

தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதையடுத்து, கூட்டணியை உறுதி செய்வதில் அதிமுக மும்முரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாமகவுடனான தொகுதிப் பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி சந்தித்துள்ளனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருந்தார்.... எடப்பாடியார்

No comments

Saturday, 27 February 2021

 

4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தனக்கு ஓபிஎஸ் உறுதுணையாக இருந்ததாக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இதனிடையே, சட்டப்பேரவை நடைபெற்ற அனைத்து நாட்களும் வந்த ஒரே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே! எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு மாதம்தான் இருக்கும், மூன்று மாதங்கள்தான் இருக்கும், ஆறு மாதங்கள்தான் இருக்குமென்று அவதூறான, உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை செய்து வந்தார்கள்.

அதையெல்லாம் முறியடித்து, நான்காண்டு காலம் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை என் தலைமையிலான மாண்புமிகு அம்மாவின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. நான் பதவியேற்றதிலிருந்து இன்று வரை நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கியதன் மூலம், தமிழகம் இன்றைக்கு ''வெற்றி நடைபோடும் தமிழகம்'' என்ற அளவிற்கு உயர்ந்து ஏற்றம் பெற்றிருக்கிறது. எதிர்க்கட்சியினர்கூட மூக்கின் மேல் விரலை வைத்து பாராட்டுகிற அரசு அம்மாவின் அரசு என்பதை நாங்கள் எடுத்துக்காட்டியுள்ளோம்.

இந்தச் சிறப்புமிகு ஆட்சிக்கு உறுதுணையாக விளங்கிய மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரித்துக் கொள்கிறேன். அதேபோல, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தங்கள் துறைகளில் திறமையாக செயல்பட்டு அதன் மூலம் தேசிய அளவில் விருதுகளைப் பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்து, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கியமைக்கு மனமார, உளமார இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ''எனக்குப் பின்னாலும் கழகம் நூறாண்டு காலம் ஆளும்'' என்று சட்டமன்றத்தில் சூளுரைத்தார்கள். அதற்கேற்ப, இந்த சோதனையான நேரத்தில், நான்காண்டு காலம் நிறைவுபெற்று ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு சிறந்த ஆட்சி, நிர்வாகம் அமைவதற்கு உறுதுணையாக விளங்கிய கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல, ஆளும் கட்சி, எதிர்க் கட்சியிடையே சூடான விவாதங்கள் நடைபெற்றபோது, நடுநிலையாக இருந்து, பக்குவமாக, ஆளுமையாக, திறமையாக செயல்பட்டு, தமிழக சட்டமன்றம் ஒரு முன்மாதிரி சட்டமன்றம் என்று விளங்குகிற அளவிற்கு, அவையை நடத்திய மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன். அவருக்குத் துணையாக இருந்த சட்டப்பேரவை துணைத் தலைவர் அவர்களுக்கும், அரசுக் கொறடா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், மாண்புமிகு அம்மாவின் அரசு சிறப்பாக செயல்படுவதற்கு அனைத்து வழிகளிலும் துணை நின்ற உயர் அதிகாரிகளுக்கும், அரசின் திட்டங்களை நாட்டு மக்களுக்கு செவ்வனே எடுத்துச் சென்று அரசுக்கு நற்பெயரை தேடித் தந்த அரசு அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, மாண்புமிகு அம்மா அரசின் திட்டங்கள் சம்பந்தமாக ஒவ்வொரு துறையிலிருந்து வருகின்ற கோப்புகளை என்னிடத்தில் வேகமாக, துரிதமாக, உரிய நேரத்தில் சமர்ப்பித்து, அனுமதி பெற்று அனுப்பி வைத்த என்னுடைய துறை செயலாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு அம்மாவின் அரசு நான்கு ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறபோது, பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளோம். 50 ஆண்டு காலம் தீர்க்கப்படாத காவேரி நதிநீர்ப் பிரச்சனையை சட்டப் போராட்டம் நடத்தி தீர்ப்பைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவின் அரசு. டெல்டா பாசன விவசாயிகள் பாதிப்படுகின்ற சூழ்நிலை வந்தபோது, மாண்புமிகு அம்மாவின் அரசு டெல்டா பாசன விவசாயிகளுக்கு அரணாக இருந்து, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிப்பைக் கொடுத்து, வேளாண் பெருமக்களை பாதுகாத்த அரசும் அம்மாவின் அரசுதான். அதேபோல, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். புயல், வெள்ளம் வந்தபோதும், பருவம் தவறி மழை பெய்தபோதும் வேளாண் பெருமக்கள் பாதிக்கப்பட்டபோது, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளை அரவணைத்து, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதுபோல, விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் சேதமடைகின்றபோது, நாட்டிலேயே அதிகமாக இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தந்த அரசும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். இன்றைக்கு மாண்புமிகு அம்மாவின் அரசு வேளாண் பெருமக்களை கண்ணை இமை காப்பது போல காத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

ஒரு மாநிலம் வளர்ச்சி பெறுவதற்கு தடையில்லா மின்சாரம் வேண்டும். அந்த தடையில்லா மின்சாரத்தை வழங்கி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கிய அரசும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதேபோல, கல்வியில் வளர்ச்சி, புரட்சியை ஏற்படுத்தியதும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். அதிகமான சட்டக் கல்லூரிகளை திறந்திருக்கின்றது. ஓரே நேரத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கின்றோம். 3 கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடங்கி சாதனை படைத்திருக்கின்றோம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி என அதிகமான கல்லூரிகளைத் திறந்து, இன்றைக்கு உயர்க்கல்வி படிப்பதில் நாட்டிலேயே முதல் மாநிலம் என்ற பெருமையை நாங்கள் பெற்றிருக்கின்றோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டுவந்து, மாண்புமிகு அம்மாவின் கனவை நனவாக்கிய அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.

அதுமட்டுமல்லாமல், தேசத்திற்காக உழைத்து மறைந்த ஒப்பற்ற தலைவர்களுக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக, அவர்களுக்கு மணிமண்டபங்கள், திருவுருவச்சிலைகள் அமைத்தும், அரசு விழாக்கள் எடுத்தும், அவர்களுக்கு புகழ் சேர்க்கின்ற விதமாக சட்டமன்றத்தில் அவர்களுடைய திருவுருவப் படங்களை திறந்தும் பெருமை சேர்த்த அரசு மாண்புமிகு அம்மாவின் அரசு.

எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களையெல்லாம் இங்கே அமர வைத்த எங்களுடைய இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு பிரம்மாண்டமான நினைவு மண்டபத்தை அமைத்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான். மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வாழ்ந்த, கோயிலாக திகழக்கூடிய வேதா நிலையத்தை அரசு இல்லமாக அறிவித்ததும் மாண்புமிகு அம்மாவின் அரசுதான் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, இப்படி மாண்புமிகு அம்மாவின் அரசு நான் முதலமைச்சராக ஏற்ற காலத்திலிருந்து இன்று வரை பல்வேறு சாதனைகளைப் புரிந்து, சாதனை படைத்த அரசாக திகழ்கிறது என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்ந்து, பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவுகளை நனவாக்குகின்ற விதமாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் அம்மாவின் அரசு அமைப்போம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் தெரிவித்து, எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருக்கு நன்றி தெரிவித்து அமைகிறேன்.

நன்றி, வணக்கம்.

அதிமுக-பாமக கூட்டணி உறுதியானது.... எத்தனை தொகுதிகள்....!

No comments
 

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடிந்து தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகள் தலைமையில் கட்சிகள் அணிவகுத்து நிற்கின்றன. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக நிற்கின்றன. அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமார் அதிலிருந்து வெளியேறியதாக அறிவித்துள்ளார். அதேபோன்று திமுக கூட்டணியில் இருந்த ஐஜேகே கட்சியும் வெளியேறியுள்ளது.

அதிமுக கூட்டணிக்குள் வர வன்னியருக்கு 20% உள் இட ஒதுக்கீடு அளிக்கும் கட்சியுடன் கூட்டணி என ராமதாஸ் கூறினார்.

நேற்று 10.5% உள் ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிட்டு, பாமகவைக் கூட்டணியில் தக்கவைத்தது அதிமுக தலைமை.

10.5% உள் ஒதுக்கீடு காரணமாக சந்தோஷத்தில் இருந்த பாமக தலைவர்கள் இன்று மதியம் நடத்திய பேச்சுவார்த்தையில் 23 தொகுதிகள் பேசி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது அதிமுக தலைமை. இதை அன்புமணி ராமதாஸும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்தார்.

கூட்டணி உறுதியானதை சென்னையில் உள்ள நடசத்திர ஓட்டலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளும், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட தலைவர்களும் கலந்துக்கொண்டனர்.

ஒப்பந்தம் பற்றி அறிவித்த ஓபிஎஸ் கூறியதாவது:

'அதிமுக-பாமக கூட்டணி அமைத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதிமுக-பாமக இடையே ஏற்பட்ட ஒப்பந்த அடைப்படையில் அதிமுக கூட்டணியில் அமைந்துள்ள கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன், தொகுதி எண்ணிக்கை மட்டுமே தற்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது, அதன் பின்னர் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் உட்கார்ந்து எந்த மாவட்டத்தில் எந்த தொகுதி என பேசி முடிவெடுக்கப்படும்'.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு வெளியீடு

No comments
 

சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சி மத்தியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் இருந்து இந்திய ஜனநாயக கட்சியும், சமத்துவ மக்கள் கட்சியும் விலகி இரு கட்சிகளுக்கும் இடையே சட்டப்பேரவை கூட்டணி உறுதியானது.

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில், அதிமுக பாமக மற்றும் பாஜக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், அதிமுக -பாமக இடையே சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது. பாமக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை முதல்வர், துணை முதல்வர் சற்றுநேரத்தில் அறிவிக்கவுள்ளனர். இன்று மாலை 5 மணி அளவில் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர்.

20-27 தொகுதிகள் வரை பாமகவிற்கு அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம்.... கமல்ஹாசன் அறிவிப்பு

No comments
 

தங்கள் கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ' முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ளார். அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். பழ.கருப்பையாவை மக்கள் நீதி மய்யத்துக்கு உளமாற வரவேற்கிறேன்.

மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது. அவர்களுடன் இணைந்து தேர்தலை களம் காணவிருக்கிறோம். மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்றும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் வேட்பாளர் நேர்காணலை பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம் மற்றும் சுரேஷ் ஐய்யர் ஆகியோர் நடத்தவுள்ளனர்,'என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து சக்கர நாற்காலி தொடர்பான நிரூபர்களின் கேள்விக்கு பதிலளித்துபேசிய அவர், 'சக்கர நாற்காலி விவகாரத்தில் கேலி செய்யும் விதத்தில் தாம் பேசவில்லை. சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்திருந்தபோது அதனை பிடித்து தள்ளிக் கொண்டு வந்த கூட்டத்தில் நானும் ஒருவன். வயோதிகத்தையும் சக்கர நாற்காலியையும் கேலி செய்யும் விதமாக நான் பேசும் வாய்ப்பே கிடையாது. கலைஞர் மீது தமக்கு மரியாதை உள்ளது. என்னுடைய முதுமையை பற்றித்தான் சொல்லிக் கொண்டு இருந்தேன்.கலைஞர் இருந்திருந்தால் நான் சொல்வதை புரிந்திருப்பார்,' என்றார். மேலும் மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் தாம் தான் என்று கூறிய கமல், கூட்டணிக்கு அமமுக வந்தால் வரவேற்போம் என்றார்.

புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

No comments

இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி' என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அர்ஜுன மூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த அர்ஜுன மூர்த்தி சனிக்கிழமை (பிப்.27) புதிய கட்சியை தொடங்கினார்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில்,

தனி அரசியல் கட்சித் தொடங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது முடிவு.... சரத்குமார்

No comments
 

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக-விலிருந்து கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அங்கிருந்து விலகினேன் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மற்றும் இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகளும் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு, சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், அதிமுக கூட்டணியுடன் கடந்த பத்து ஆண்டுகளாக பயணித்துள்ளோம்.


எங்களுக்கு என ஒரு மரியாதையும் வாக்கு விகிதாச்சாரமும் இருக்கிறது என்பதால்தான் கூட்டணி அமைத்திருந்தனர். மதிப்பில்லாமல் யாரையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தற்போது தேர்தல் நெருங்குகிறது. ஆனால் அதிமுகவிலிருந்து கூட்டணி பற்றி யாரும் அழைத்துப் பேசவில்லை. தொடர்ந்து பயணித்தவர்களை அழைத்துப் பேசியிருக்கலாமே என்று கூறினார்.

மக்களுக்காக நாம் சேவை செய்ய வேண்டும் என்றால் ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதாலும், கூட்டணி குறித்து அழைப்பு வராததால், அதிலிருந்து விலகினேன். நல்ல எண்ணங்கள் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கருதியதால் கமலுடன் பேசினோம். மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பாக கமலிடம் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

எங்கள் கூட்டணி வெற்றி பெற்ற பிறகே முதல்வர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றார் சரத்குமார்.

இறுதியாக, பணத்தை வாங்கிக் கொண்டு யாரும் வாக்களிக்காதீர்கள். இந்த ஒரு முறை பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்க மாட்டோம் என்று முடிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

பாஜக-அதிமுக இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை....!

No comments
 

அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வருடன் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். முதல்வர் பழனிசாமியுடன் பேசிய பின்னர் பாஜக குழு துணைமுதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து பேசுகின்றனர்.

இஜக., கட்சியும் சமக., கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு....!

No comments
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக, இந்திய ஜனநாயகக் கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் சென்னை வடபழனியில் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது, தங்கள் கட்சிகள் இணைந்து சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளதாக இரு தலைவர்களும் அறிவித்தனர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்காத, சாதிமத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையில் ஒருமித்த கருத்து உள்ள கட்சிகள் இணைந்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார். திமுக மிகச்சிறந்த கட்சி என்றும் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு கௌரவத்தையும் அளித்ததாகவும் ரவி பச்சமுத்து குறிப்பிட்டார்.


அதே நேரத்தில், தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக ரவி பச்சமுத்து கூறினார்.

அதிமுக கூட்டணியில் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தாததால், அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சரத்குமார் கூறினார். மக்கள் சேவை என்ற கொள்கையில் இருக்கும் கமல்ஹாசன் தங்கள் கூட்டணியில் இணைவார் என்று எதிர்ப்பார்ப்பதாகக் கூறிய சரத்குமார், ரஜினி மக்கள் மன்றத்தினரும் தங்களுடன் கரம் கோர்க்குமாறு அழைப்பு விடுத்தார். மாற்றத்துக்கான முதல் கூட்டணி என்று சரத்குமார் குறிப்பிட்டார். மக்கள் சேவை என்ற நிலைப்பாட்டில் உள்ள மேலும் சில முக்கிய கட்சிகளை கூட்டணிக்கு வர உள்ளதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

அமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தணும்..! திருநள்ளாறில் தீயாய் வேலை செய்யும் பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகர்

No comments

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்பாகவே, பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

இதையடுத்து புதுச்சேரியில் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக செயல்பட்டுவருகிறது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் அதே தினமான, ஏப்ரல் 6ம் தேதியே நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். 

ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, பாஜக புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து, களப்பணியை ஏற்கனவே தீவிரமாக தொடங்கிவிட்டது. மத்திய இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மற்றும் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் ஆகிய புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர்கள் புதுச்சேரியில் தீவிரமாக பணியாற்றிவருகின்றனர்.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரமாக பாஜக மேற்கொண்டுவருகிறது. கடந்த 25ம் தேதி புதுச்சேரிக்கு வந்து, முடிவுற்ற நலத்திட்டங்களை திறந்துவைத்து, புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிவிட்டு சென்றார். இந்நிலையில், வரும் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காரைக்காலில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பரப்புரை செய்கிறார்.

அதற்கான ஏற்பாடுகள் காரைக்காலில் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சுமார் 15 ஆயிரம் பேரை திரட்ட பாஜக தீர்மானித்துள்ளது. அமித் ஷா வருகைக்கான பணிகளையும் பொதுக்கூட்ட ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு ஒருசில தினங்களுக்கு முன், தேர்தல் பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மேக்வால் காரைக்காலில் பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் பாஜக செயல்வீரர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றார்.

பாஜக எம்பியான ராஜீவ் சந்திரசேகர், காரைக்கால் மற்றும் திருநள்ளார் பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்களுடன்  கூட்டம் நடத்தி ஆலோசனை நடத்துவதுடன், அமித் ஷா வருகையை அமர்க்களப்படுத்தவும், புதுச்சேரியில் ஆட்சியமைக்கவும் களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

குஷிப்படுத்திய எடப்பாடியார்... எடப்பாடியை குஷிப்படுத்த ராமதாஸ் முடிவு..!

No comments


வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக ஆளும் அதிமுகவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தது. அதை ஏற்றுக்கொண்ட அதிமுக அரசு, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தது. மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். இதனையடுத்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்க இந்த சட்டம் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பால் பாமக முகாமில் மகிழ்ச்சி கரைபுரள்கிறது. சொன்னப்படி சாதித்ததாகவும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றிய மகிழ்ச்சியில் தேர்தலை எதிர்கொள்ளவும் பாமக - அதிமுக தயாராகிவருகிறது. இந்நிலையில் இதுபற்றி பாமக தலைவர் ஜி.கே. மணி கூறுகையில், “வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது டாக்டர் ராமதாஸுக்கு கிடைத்த இடைக்கால வெற்றியாகும்.  இந்த அறிவிப்புக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.  தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் இன்று (பிப்.27) அறிவிப்பார்” என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.

ஏழை எளிய மக்களின் நகைக்கடன்கள் தள்ளுபடி.... எடப்பாடியார் அதிரடி அறிவிப்பு

No comments

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக,  கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கொரோனா ஊரடங்கினால் வாழ்வதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் டிசம்பர் மாதம் வரை இலவசமாக வழங்கப்பட்டது. ஊடரங்கு காலத்தில் ஏழை எளிய மக்களின் இதர தேவைகளை கருத்தில் கொண்டு நிவாரண உதவியாக 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஏழை மக்களும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்புடன்  2, 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து நிவர் மற்றும் புரெவி போன்ற புயல்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை திரும்பி தொடங்கிடும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்து அறிவித்தார். கடன் தள்ளுபடி மூலம் தங்களது வாழ்கையை மறுபடியும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளதாக கூறி விவசாய சங்கங்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தன.

இதேபோல், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கிகளில் 6 பவுன் நகைகளை வைத்து பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட சபையில் தெரிவித்தார். நகைக்கடன் தள்ளுபடி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தங்களது வாழ்க்கையை மீட்டு கொடுத்துள்ளதாக ஏழை எளிய மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். இதன் மூலம் விவசாயிகள் மட்டும் அல்லாது ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருவதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீரூபித்துள்ளார். 

எடப்பாடியாரின் ஒரே அறிவிப்பால் ஆனந்த கண்ணீரில் டாக்டர் ராமதாஸ்......

No comments

“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் மிக மிக பின்தங்கிய சமூகமான வன்னியர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்கான எனது 40 ஆண்டு போராட்டத்திற்கு முதற்கட்டவெற்றி கிடைத்துள்ளது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான இந்த அறிக்கையை ஆனந்தக் கண்ணீரில் நனைந்து கொண்டுதான் எழுதுகிறேன். மருத்துவர் அன்புமணியும் கிட்டத்தட்ட இதே மனநிலையில்தான் இருக்கிறார். சட்டப்பேரவையில் இடப்பங்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது தொடர்பான செய்தியை என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டபோது, ஆனந்தக் கண்ணீரை அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதார். அவரது அழுகையை நிறுத்தவைக்க என்னாலும் முடியவில்லை. சரிப்பா.... சரிப்பா என்று தேற்றினேன். எங்களின் ஆனந்தக் கண்ணீருக்குக் காரணம்... மிக மிக மோசமான நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தின் நிலை இதனால் உயரும் என்பதுதான்.

இரண்டரை கோடிக்கும் கூடுதலான வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் அவர்களின் சமூகநிலையும் வாழ்க்கைத் தரமும் உயரவில்லை. அரசு நிர்வாகத்தின் உயர்பதவிகளை அனுபவிக்க முடியாமல், உயர்கல்வி கற்க முடியாமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த அந்த அப்பாவி ஊமை சனங்களுக்கு உரிய சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் 40 ஆண்டுகளாக இடைவிடாமல் போராடி வருகிறேன். வன்னியர் சமுதாயமும் என் தலைமையை ஏற்றுக் கொண்டு போராடி வருகிறது. எனது 40 ஆண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு இந்த சட்டத்தின் மூலம்தான் மனநிறைவு அளிக்கும் வகையில் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது.

வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. 1987-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருவாரகால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கிடைத்துள்ள இந்த நேரத்தில் 21 பேரின் தியாகத்தை போற்றுகிறோம். இத்தகைய போராட்டம் மற்றும் தியாகங்களைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் என்னை அழைத்துப் பேசிய அப்போதைய முதல்வர் கருணாநிதி, வன்னியர்களுக்கு மட்டும் 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு பதிலாக 108 சமுதாயங்களை ஒன்றிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவை உருவாக்கி 20% இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் வன்னியர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்தார். அதன் விளைவாக வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுக்க இன்னும் 32 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு 32 ஆகும் போதிலும் கூட வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் முதல் தொகுதி பணிகளில் ஒன்று அல்லது இரண்டு விழுக்காடு பிரதிநிதித்துவம் மட்டுமே கிடைக்கிறது. குரூப்-2 பணிகளில் 4% மட்டுமே வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது. குரூப்-3 பணிகளில் அதிகபட்சமாக 5 விழுக்காடும், குரூப்-4 பணிகளில் 5 முதல் 6 விழுக்காடு மட்டுமே வன்னியர்களுக்கு கிடைக்கிறது. இதனால், வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் தான், 40 ஆண்டுகளாகத் தொடரும் வன்னியர்களுக்கான இடப்பங்கீடு போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டியிருந்தது.
தொடர்ந்து 3 கட்டங்களாக தமிழக அரசு குழு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி குழுவினரிடையே பேச்சுகள் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக நான், மருத்துவர் அன்புமணி ராமதாசு, ஜி.கே. மணி உள்ளிட்டோருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையே பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுக்கள் நடத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாகவே வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள பிற சமூகத்தினருக்கு 2.50%, சீர் மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அனைத்து சாதியினருக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் பாமக கொள்கை என்ற வகையில் இந்தத் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை நான் வரவேற்கிறேன்.

வன்னியர்களின் சமூகநீதிக்கான போராட்டம் இன்னும் முடிவடைந்து விடவில்லை. வன்னியர்களுக்கு அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கை. இதுகுறித்து தமிழக அரசிடமும் வலியுறுத்தி உள்ளோம். அரசும் அடுத்த 6 மாதங்களுக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடப்பங்கீடு வழங்க உறுதியளித்திருக்கிறது. சட்டப்பேரவையிலும் இந்த உத்தரவாதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அளித்திருக்கிறார். சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அந்த இலக்கையும் பாமக வென்றெடுக்கும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தையே நடுங்க வைக்கும் தமிழகம்..... தீவிர நடவடிக்கையில் அதிகாரிகள்...!

No comments

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும், மார்ச் 19-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைகிறது.  மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு மனு பரிசீலனை,  மார்ச் 22 வேட்புமனுவை திரும்பப் பெறுதல், என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. 

5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். இந்நிலையில் மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.  

முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அவர் விரிவாக பேசியதாவது: கொரோனா காலம் கருதி முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் தேர்தல் நடக்க உள்ளது. கொரோனா இருந்தாலும் சுகாதாரத்துறை மூலம் பிரச்சனைகளை சமாளித்து வருகிறோம். தேர்தல் சிறப்பாக நடைபெற சுகாதாரத்துறை மற்றும் தேர்தல் அதிகாரிக்கு பெரும் பங்கு உண்டு. தற்போது முதல் உடனடியாக  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 

கொரோனா காலத்திலும் பீகார் சட்டமன்ற தேர்தலை நடத்தியது மிக சவாலாக இருந்தது. தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கப்பட்டது, தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது, தமிழகத்தில் 234 தொகுதிகள் உள்ள நிலையில் 44 எஸ்.சி தொகுதிகளாகவும், 2 எஸ்டி தொகுதிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தமிழகம் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரி  30, கேரளா 140,  மேற்குவங்கம் 294, அசாம் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88.936 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. 
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் 1 கோடியே ஒரு லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34. 73 சதவீத அதிக வாக்கு பதிவு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது. அனைத்து வாக்குப்பதிவு மையங்களும் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் வாக்குப்பதிவு நேரம் ஐந்து மாநிலங்களிலும் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டோர் விரும்பினால் தபால் வாக்கு செலுத்தலாம், தபால் வாக்கு என்பது கட்டாயமில்லை. வாக்குப்பதிவு மையங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்,  வேட்புமனுத் தாக்கலுக்கு இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் துணை இராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர்.வேட்புமனுத் தாக்கலுக்கு அதிகபட்சம் இரண்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். 

அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவு மையங்களில் இருக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.  தமிழகத்தில் அதிக தேர்தல் செலவு நடைபெறும் என்பதால் முக்கியமாக கண்காணிக்கப்பட உள்ளது. விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தர்மேந்திர குமார், அலோக் வர்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.  குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் அதுபற்றி  விவரங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.....

No comments

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா கூறியுள்ளார். 

2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எச்.வசந்தகுமார் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆகஸ்ட் 28-ம் தேதி காலமானார். இதனால்  கன்னியாகுமரி தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று டெல்லியில் அறிவித்தார். அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. 

அதேபோல கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்ரல் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் முடிவு மே 2ம் தேதி வெளியாக உள்ளது. 

முன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்......!

No comments

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல  கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். 

இந்நிலையில் மாநிலங்களில்  தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.  மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  வாக்கு எண்ணிக்கை மே- 2 தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும், 

மார்ச் 19-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைகிறது.  மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு மனு பரிசீலனை,  மார்ச் 22 வேட்புமனுவை திரும்பப் பெறுதல், என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம், புதுவை,  கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிட தக்கது. தேரதல் முடிவுக்கு 26 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு வெரும் 37 நாடுகள் மட்டுமே உள்ளதால் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்பதால் இது அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.  

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

No comments

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ஆம் தேதி உடன் முடிவடைகிறது.  மே மாதம் 24ம் தேதியுடன் தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகிறது.  கொரோனா தொற்று அச்சத்தால் மிகுந்த எச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகிறோம். sஉமார் 88000 வாக்குச்சாவடிகள் தமிழகத்தொ; அமைக்கப்பட உள்ளன.  ஐந்து மாநிலங்களிலும் மொத்தம் 18 கோடி. விருப்ப்ம் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தபால் வாக்கு முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். 5 மாநிலங்களி 824 சட்ட மன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது 5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18 புள்ளி 68 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஒரே கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது  ஏப்ரல் 2ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் மே-2ம் தேதி வாக்கு என்ண்ணப்படும்.  தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். வேட்புமனு தாக்க மார்ச் 12ம் தேதி. வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் பரிசீலனை மார்ச் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் திரும்பபெற மார்ச் 22ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.  தமிழகம் 234 புதுச்சேரி  முப்பது கேரளா 240 மேற்குவங்கம் 294 அசாம் 126 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 88 புலி 936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல்.தமிழகத்தில் மொத்தம்88 936 வாசிப்பதில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஒன்று கூடிய ஒரு லட்சம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் 34. 73 சதவீத அதிக வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளது.அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் தரைத்தளத்தில் இருப்பதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நேரம் ஐந்து மாநிலங்களிலும் ஒரு மணி நேரம் அதிகரிப்பு. வீடு வீடாக 5 பேர் மட்டுமே தேர்தல் பரப்புரையில் ஈடுபட நிபந்தனை’’ என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா தெரிவித்தார்.

ராமதாஸ் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர்... அடித்து தூக்கும் எடப்பாடியார்...!

No comments

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் நோற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நோற்று தாக்கல் செய்தார். மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் நோற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது. 7 சதவீத உள்ஒதுக்கீட்டைப் பெறவுள்ள சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. 

இதனிடையே, வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என்றும் 6 மாதத்திற்கு பின் மசோதா மாற்றியமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அனைவரும் காணப் போகிறீர்கள்.... ஸ்மிருதி இரானி

No comments

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பாஜக  எம் பி ஸ்மிருதி இரானி கட்சி தொண்டர்களுடன் இருசக்கர பேரணியில் கலந்து கொண்டார். அதில் அவர் உற்சாகமாக ஸ்கூட்டி ஓட்டும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சாலையில் ஸ்கூட்டி  ஒட்டிய நிலையில் ஸ்மிருதி இரானியும் அதே பாணியில் ஸ்கூட்டி ஓட்டி ரோட் ஸோ நடத்தியுள்ளார்.  தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய ஐந்து  மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் சுமார் 294 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் எப்படியேனும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 

அதற்காக பாஜகவின் முன்னணித் தலைவர்களான மோடி, அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்டோர் மேற்கு வங்கத்திற்கு அடுத்தடுத்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எப்படியேனும் திர்ணாமுல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அக்காட்சியின் எம்பி ஸ்மிருதி இரானி  பாஜகவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டுள்ளார்.  வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெற்ற இந்த பேரணியில் ஸ்மிருதி இரானி தலையில் ஹெல்மெட் அணிந்து ஒய்யாரமாக ஸ்கூட்டி ஓட்டினார். இப்புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு ஸ்கூட்டி ஓட்டினார். அது வெகுவாக அம்மாநில மக்களின் கவனத்தை பெற்றிருந்தது. 

இந்நிலையில் ஸ்மிருதி இரானியும்  ஸ்கூட்டி ஓட்டி உள்ளது அதிக கவனம் பெற்றுள்ளது. இருவரும் ஸ்கூட்டி ஓடியதற்கு உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மம்தா பானர்ஜி ஸ்கூட்டி ஓட்டினார், ஆனால் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரத்திற்காக ஸ்கூட்டி ஓட்டியுள்ளார்.  இப்பேரணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்மிருதி இராணி, மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கினார்,  வங்காளத்தில் ஏராளமான மக்கள் மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டதற்காகவும், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கட்சியில் இணைந்ததற்காகவும் அவர் தனது சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

இந்த முறை வங்கத்தில் முதல்முறையாக தாமரை பூப்பதை அனைவரும்  காணப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள்தான் இவை என்றார், மம்தா பானர்ஜியின் ஆட்சி வன்முறை ஆட்சி, அதிகார மமதையில் அவர் வன்முறை ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார், இந்தத் தேர்தலில் வங்கத்தில் ஜனநாயகக் குரல் ஒலிக்கப்போகிறது. இந்தமுறை திர்ணாமுல் காங்கிரஸுக்கு மக்கள் முடிவு கட்டப் போகிறார்கள். இவர் அவர் கூறினார்.

குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கல்...!

No comments

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதிகளில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.

சென்னையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் வரலாற்றில் பேசப்படும் தொகுதி. 1977 முதல் இந்த தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார். தி.மு.க.வுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதியாக கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுதாக்கல் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குஷ்பு களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார். இதுபற்றி குஷ்புவிடம் கேட்டபோது, ’’இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேனா? என்பதை கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் சந்தோஷம்’’ என்றார்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெறுவது தொகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. குஷ்பு, உதயநிதி இருவரும் நட்சத்திர பிரபலங்கள், இருவரும் தங்கள் தொகுதியில் போட்டியிடுவதை நினைத்து தொகுதி மக்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். திரையிலும், டி.வி.யிலும் பார்த்த இருவரும் தங்கள் தெருக்களிலும், வீடு வீடாகவும் வருவதால் தொகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளார்கள். குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாக சென்று கலக்கி வருகிறார்.

எங்களிடம் 1 கோடி வாக்குகள் உள்ளது....! எடப்பாடியாரையே மிரட்டி பார்க்கும் தனியார் பள்ளிகள்....!

No comments

9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என முதலமைச்சர் அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நர்சரி,  பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த கல்வியாண்டின் பெரும்பாலான நாட்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்தன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவருக்கும் தேர்வின்றி 100% தேர்ச்சி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்தார். தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், மாணவ, மாணவிகளின் அறிவுத்திறன் மற்றும் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து அவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பள்ளிகளைத் திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தி தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நந்தகுமார், 110 விதியின் கீழ் முதலமைச்சர் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்திருப்பது தங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையும் அளித்திருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்பால் மாணவர்களின் கல்வித் தரமும், வாழ்க்கைத் தரமும் பாதிக்கப்படும் எனவும் மாணவர்களின் உயர் படிப்புகள் குறித்த எதிர்காலக் கனவுகள் கேள்விக் குறியாக மாறும் எனவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டதாக கூறய ஆவர், இந்த ஆண்டும் அதே அறிவிப்பை வெளியிட்டால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். மேலும், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து மாதிரி வினாத் தாள்கள் தயாராக்கி, மாணவர்களும் தேர்வுக்கு தயாராக உள்ள நிலையில் அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிடுவதில் ஞாயமில்லை எனவும் அவர் கூறினார். மேலும், ஏற்கனவே 10 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் அதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கினால் ஆசிரியர்களும் வேலையின்றி அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என தெரிவித்த அவர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றார்.  

அரசியல் காரணங்களுக்காக இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடும் அரசு தங்களிடமும் 1 கோடிக்கும் மேல் வாக்குகள் உள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது எனவும், அடுத்து யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி தங்களிடகும் உண்டு என்பதை அரசு கருத்தில்கொண்டு செயல்படவேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காத பட்சத்தில் வரும் திங்களன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும், ஆட்சியர் அலுவலகங்களிலும் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். 

மேட்டூர் அணையின் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

No comments

Friday, 26 February 2021


மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை (பிப்26) தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மேட்டூர் அணையின் இடதுகரையில் உள்ள திப்பம்பட்டி பகுதியில் தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு சேலம் மாவட்டம், மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் போது அந்த நீரை 100 வறண்ட ஏரிகளுக்கு எடுத்துச் சென்று நிரப்பும் திட்டத்தை தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

பின்னர் இந்தத் திட்டத்திற்கு ரூ.565 கோடியில் நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் போது அணையின் இடது கரையில் இருந்து உபரி நீர் கால்வாய்கள் மூலம் திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பின்னர் அங்கிருந்து  940 குதிரை திறன் கொண்ட 10 மின் மோட்டார்கள் மூலம் நீரேற்றம் செய்து குழாய்கள் வழியாக வினாடிக்கு 126 கன அடி வீதம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எம் .காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.  இதன் பிறகு அங்கிருந்து 23 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும். 

இந்த திட்டத்திற்காக  வெள்ளாளபுரம் ஏரியில் துணை நீரேற்று நிலையம் மற்றும் கண்ணந்தேரியில் துணை நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தை வெள்ளிக்கிழமை காலை மேட்டூர்  திப்பம்பட்டி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் ரூ. 62 கோடியே 63 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் ரூ.5 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு வைத்தார்.

நீரேற்று திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பொதுப்பணித்துறை ஏரிகள் மற்றும் ஒரு நகராட்சி, 4 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. மொத்தம் 4 ஆயிரத்து 238 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்த திட்டத்திற்காக திப்பம்பட்டியில் இருந்து  எம். காளிப்பட்டி ஏரி வரை 12 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணி முடிவடைந்து விட்டது. 

திப்பம்பட்டியில் மிக பிரம்மாண்ட நீரேற்று நிலையங்களும் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரேகரன், மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செம்மலை, மேட்டூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் லலிதாசரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி..! நெகிழ்ச்சி சம்பவம்

No comments

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை(25ம் தேதி) புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து புதுச்சேரிக்கு சென்று புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்ததுடன், புதிய திட்டங்களுக்கான அடிக்கல்லையும் நாட்டினார்.

புதுச்சேரியிலிருந்து கோவை சென்ற பிரதமர் மோடி,  தமிழகத்திற்கான பல்வேறு நலத்திட்டங்களை திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.  கோவை கொடிசியா மைதானத்தில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றினார் பிரதமர் மோடி.

தனது பிசியான பணிகளுக்கு இடையேயும், உயர்ந்தோரை மதிக்கவும் தவறவில்லை பிரதமர் மோடி. அப்படி பிரதமர் மோடியின் இன்றைய ஒரு சந்திப்பின் புகைப்படம் தான் வைரல். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 105 வயதான பாப்பம்மாள் என்ற மூதாட்டி, கடந்த 30 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து ஆரோக்கியமான உணவு பொருட்களை உற்பத்தி செய்து உண்டு ஆரோக்கியமான வாழ்வு வாழ்ந்துவருகிறார். அவசரமான உலகில், துரித உணவுகளை உண்டு வியாதிகளுக்கு உள்ளாகும் மனிதகுலத்தில், இயற்கை விவசாயம் செய்து 105 வயதிலும் ஆரோக்கியத்துடன் வாழும் பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்திருந்தது மத்திய அரசு.

அந்த 105 வயது பத்மஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இதுமாதிரியான நெகிழ்ச்சியான நிகழ்வுகளை நிகழ்த்த தவறுவதேயில்லை. அந்தவகையில், பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோரையும் ஆட்சியாளர்களையும் சந்தித்துவிட்டு சென்றுவிடாமல், பாப்பம்மாள் பாட்டியை நேரில் சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸும் மகிழ்ச்சியும் அளித்தார் பிரதமர் மோடி. 

பாப்பம்மாள் பாட்டியின் கைகளை பிடித்து பணிவுடன் வணங்கிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அந்த சந்திப்பு குறித்த மகிழ்ச்சியை பிரதமர் மோடி வெளிப்படுத்த, அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலாகிவருகிறது.

இரவு முதல் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... குடியரசுத் தலைவர் அதிரடி ஒப்புதல்..!

No comments

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. நாராயணசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த இந்த மோதலால் நலத்திட்டங்கள் முடங்கின. இந்நிலையில் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பதவியிலிருந்து விலகினர். திமுக எம்.எல்.ஏ. ஒருவரும் பதவி விலகினார்.

 இதனால் நாராயணசாமி அரசு மெஜாரிட்டி இழந்தது. எனவே சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி முதல்வர் நாராயணசாமிக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார். இதனையத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி தோல்வியடைந்தது. இதனால், நாராயணசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதை ஏற்றுக்கொண்ட ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை செய்தார். இந்தநிலையில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 
அந்தக் கோப்புக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd