Type Here to Get Search Results !

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் செம ஜோர்...!


குமரி மாவட்டத்தி்ல் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பாசனத்திற்கான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த மாதத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டியுள்ளன. கன்னியாகுமரியில்

இன்று சூரிய உதயம் பார்ப்பதற்கு அதிகாலையிலேயே வெளிமாவட்டம், மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயில் ஆகியவற்றிலும் வழிபடுவதற்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் கடலில் உற்சாகமாக படகு பயணம் மேற்கொண்டனர்.

இதைப்போல் குமரி மாவட்டத்தில் சொத்தவிளை, சங்குத்துறை, குளச்சல், தேங்காய்பட்டணம் உட்பட கடற்கரை பகுதிகள், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை போன்ற சுற்றுலா மையங்களிலும் காலையில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக திற்பரப்பு அருவியில் மிதமைாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom