Type Here to Get Search Results !

கடவுள் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை.... தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் பல்டி


திமுக ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில், மினி க்ளினிக் ஒன்று கட்டி இருக்கிறார்கள். நேற்று அதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கும்போதே அந்த பில்டிங் இடிந்து விழுகிறது.

இதேபோல ஒரு வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தில் ஒரு அணை திறந்த ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுகிறது. பொன்முடி அதற்கு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். அதாவது இரயில் இன்ஜினை திருடியவர்களை விட்டு விட்டு, இரயில் இன்ஜினில் கரி எடுத்தவனை பிடித்தது போல நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார். வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா? “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom