Type Here to Get Search Results !

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா...!


இவ்வாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் என்பது மிக முக்கியமான நிகழ்வாகும். அந்த ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தை தயாரித்து வழங்குவது மிகவும் சிக்கலான மற்றும் கடினமான ஒரு விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்தயாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? நம்மில் பலருக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1946 ஆம் ஆண்டில், பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் (Jawaharlal Nehru) தலைமையில் இந்தியா ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது. இதில் லியாகத் அலிகான் அகில இந்திய முஸ்லிம் லீகக்கின் சார்பில் முக்கிய பங்கு வகித்தார். இந்த இடைக்கால அரசாங்கத்தில், அவர் நிதி அமைச்சராக இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கினார்.

பிரதமர் நேரு தலைமையிலான இந்த இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் லியாகத் அலி தவிர, சர்தார் படேல், பீம்ராவ் அம்பேத்கர், பாபு ஜக்ஜீவன் ராம் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்தியாவின் முதல் பட்ஜெட் (Budget)  2 பிப்ரவரி 1946 இல் வழங்கப்பட்டது.

லியாகத் அலிகான் யார்?

லியாகத் அலிகான் நமது நாட்டின் வரலாற்றில் மிக முகிய பங்கு வகிப்பவர். முதலில், சுந்தந்திர போராட்டத்தில், பின்னர் இந்தியா-பாகிஸ்தான் பிரிவு, பின்னர் பாகிஸ்தான் பிரிவின் போது இந்து-முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு என அனைத்து சந்தர்பங்களிலும் அவர் முக்கிய பங்கு வகித்தவர். அன்றைய பஞ்சாபின் கர்னாலில் ஒரு அரச குடும்பத்தில் அவர் பிறந்தார். இது தற்போது ஹரியானாவின் (Haryana) ஒரு பகுதியாக உள்ளது. பின்னர், அவர் உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் தீவிரமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

அங்கு அவரது குடும்பத்திற்கு ஒரு பெரிய செல்வாக்கு கிடைத்தது. அவர் மீரட் மற்றும் முசாபர்நகரில் இருந்து உ.பி. சட்டசபைக்கு போட்டியிட்டார். சுதந்திர பாகிஸ்தானின் முதல் பிரதமர் இவர். மேலும், அகில இந்திய முஸ்லீம் லீக்கில் இருந்தபோது, ​​முகமது அலி ஜின்னாவிற்குப் பிறகு, அவர் இரண்டாவது மிக உயர்ந்த தலைவராக இருந்தார்.

1950 ல் இந்தியாவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது

லியாகத் அலிகான் பிரிந்த பாகிஸ்தானின் முதல் பிரதமரானார். அவர் ஆகஸ்ட் 14, 1947 முதல் அக்டோபர் 16, 1951 வரை இந்த பதவியில் இருந்தார். அக்டோபர் 16, 1951 அன்று, ஒரு கூட்டத்தில் ஒரு உரையின் போது அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தான் (Pakistan) பிரதமராக இந்தியாவுடன் 1950 ல் ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தில், இரு நாடுகளின் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்து பேசப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்களில் ஒன்று, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால யுத்தத்திற்கான வாய்ப்பை அகற்றுவதாகும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom