Type Here to Get Search Results !

இந்தோ - பசிபிக் பிராந்திய நாடுகளுடனான உறவு குறித்து... டிரம்பின் கொள்கை தொடரும்


அமெரிக்கா அமைதி மையத்தின் சார்பில், வாஷிங்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், அந்த நாட்டின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் கலிவான் பேசியதாவது:அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா அடங்கிய, 'குவாட்' எனப்படும் கூட்டமைப்பு, 2017ல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த கூட்டமைப்பு, போர் பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளது. ஆதரவுபல்வேறு துறைகளிலும், இந்த நாடுகள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்தின் கொள்கை, இந்த கூட்டமைப்பின் அடிப்படையிலேயே இருக்கும்.அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் நடந்தபோது, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் உடனான உறவை, அப்போது அதிபராக இருந்த டிரம்ப் புதுப்பித்தார். அதற்கு, அப்போதே, ஜோ பைடன் ஆதரவு தெரிவித்தார்.விதைஅதனால், இந்தோ - பசிபிக் பிராந்தியம் தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளையே, ஜோ பைடன் நிர்வாகம் தொடரும்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான நட்புறவுக்கு, டிரம்ப் நிர்வாகம் விதைத்த விதை, தற்போது வளர்ந்துள்ளது; அதனால், அதுவே தொடரும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஜெய்சங்கருடன் பேச்சுஅமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுள்ள டோனி பிளின்கென், இந்திய வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருடன், தொலைபேசியில் பேசினார்.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:குவாட் அமைப்பு மூலமாகவும், இரு தரப்பு நட்பு மூலமாகவும், பல்வேறு பிரச்னைகளில் இணைந்து செயலாற்றுவது குறித்து, பிளின்கென் குறிப்பிட்டார். இந்தியா எப்போதுமே, அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom