Type Here to Get Search Results !

தலிபான் முகாம் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 58 தலிபான்கள் கொல்லப்பட்டனர்


ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹாரில் தலிபான் முகாம் மீது நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 58 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காந்தஹார் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு படையினர் திடீர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தலிபான் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 52 தலிபான்கள் கொல்லப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 19 குண்டுகள், பதுங்கு குழிகள், 3 வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை அழித்தனர். 

அதேபோல் வியாழக்கிழமை மாலை பாலா புலூக் மாவட்டத்தின் ஷெவன் பகுதியில் தலிபான்களின் வாகனத்தின் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom