Responsive Ad Slot

மீண்டும் காங்கிரஸ் தலைவராக (பப்பு) ராகுல் காந்தி.... டெல்லி காங்கிரஸ் அறிவிப்பு

No comments

Sunday, 31 January 2021


காங்கிரஸ் கட்சியின் அமைப்பு முறைத் தேர்தல் வரும் மே மாதத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தியையே கட்சியின் தலைவராக நியமிக்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுபற்றி தில்லி காங்கிரஸ் தலைவர் சௌதரி அனில் குமார் தெரிவிக்கையில், 'நாட்டில் நிலவும் அபாயகரமான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி போன்ற வலிமையான தலைவர் தேவை' என்றார்.

தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

"மோடி அரசின் தவறுகளை அம்பலப்படுத்துவதில் ராகுல் காந்தி தீர்க்கமான போரை நடத்தி வருகிறார். காங்கிரஸ் நிர்வாகிகளின் நம்பிக்கையையும், மனஉறுதியையும் ஊக்குவிக்க காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி கட்சியை வழிநடத்துவது உடனடி தேவையாக உள்ளது."

விவசாயிகளின் பேரணியை கையாளத் தெரியாமல் அது வன்முறையில் முடிந்ததால் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலகக் கோரியும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஸ்டாலின் பெயரை கரி பூசி அழித்த திமுகவினர்...! அதிர்ச்சியில் ஸ்டாலின்....!

No comments

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து எழுதப்பட்ட சுவரை அதே கட்சியை சேர்ந்தவர்கள் கரி பூசி அழித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்டாலினுக்கு பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லைகளில் வாழ்த்து தெரிவித்து சுவர் விளம்பரங்கள் செய்துள்ளனர். அதே போன்று களியக்கவிளை பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் உள்ள சுவர் விளம்பரங்களை அக்கட்சியை சேர்ந்த ஒரு பிரிவினர் கரி மற்றும் ஆயில் ஊற்றி அழித்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து திமுகவை சேர்ந்த திருவட்டார் ஒன்றிய துணை செயலாளர் கலை கிரி தலைமையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கட்சியில் ஒற்றுமை இல்லாமல் உள்ளனர். இவரது தலைவர் தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

No comments

தேசிய போலியோ சொட்டு மருந்து தினத்தை, ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று ஜனவரி 30ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். ‘போலியோ ஞாயிறு’ என்று அழைக்கப்படும் தேசிய போலியோ சொட்டு மருந்து தினமான இன்று, நாடு முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 89 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன.

7 லட்சம் இடங்களில் நடைப்பெற்ற, போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில், 12 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 1.8 லட்சம் மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

அடுத்த 2 முதல் 5 நாள்களில், வீடு வீடாக சென்று, விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெறவுள்ளது.

தடுப்பு மருந்து பெறுவதில் இருந்து ஒரு குழந்தையும் விடுபடக் கூடாது என்பதற்காக, பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்களில் போலியோ சொட்டுமருந்து குழுவினர் பணியமர்த்தப்பட்டனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறுகையில், ‘‘10 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை பராமரிப்பது, இந்தியாவின் பொது சுகாதார வரலாற்றில் மிகப் பெரிய சாதனை என்றார்.

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா உறுதி

No comments

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,38,340 ஆக அதிகரித்து உள்ளது. 

இன்று கொரோனா உறுதியானவர்களில், 316 பேர் ஆண்கள், 192 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,06,678 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,31,628 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 523 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 430 ஆக உள்ளது.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 6 பேர் உயிரிழந்தனர். அதில், 2 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 4 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,356 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,554 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வூஹானின் கடல் உணவு சந்தையை உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் பார்வையிட்டனர்.

No comments

உலகையே ஸ்தம்பிக்கச் செய்த கொரோனா வைரசுக்கு ஒரு வயது ஆகிறது. உலக சுகாதார நிறுவனம் தற்போது தான் அதன் தோற்றுவாயை ஆராய்ச்சி செய்து வருகிறது. முதன் முதலில் சீனாவின் வூஹான் நகரில் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆரம்பகட்ட தகவல்களை வெளியிடாமல் சீனா மறைக்க முயற்சித்தது. இதனை அந்நாட்டு அரசு மருத்துவர்கள் சிலரே தெரிவித்தனர். பின்னர் சீனாவில் வைரஸ் தோன்றவில்லை இத்தாலி, இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகள் மீது பழி போட்டது.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் சீனாவின் வூஹான் நகருக்கு சென்றுள்ளனர். 2 வார தனிமைப்படுத்தல் முடிந்த பிறகு தற்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். உலக சுகாதார நிறுவன குழுவில், கால்நடை மருத்துவர்கள், வைரஸ் ஆய்வாளர்கள், தொற்றுநோய் நிபுணர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் மிகப்பெரிய இறைச்சி சந்தையை பார்வையிட்டனர். அங்கு ஏராளமான கடைகள் உள்ளன. கடல் உணவு சந்தையில் ஆய்வு செய்தனர். முன்னதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையை பார்வையிட்டனர்.

தேர்தலில் எதிர்கட்சிகளுடன் போராடி வெற்றிப்பெற வியூகம் அமைக்க வேண்டும்... பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

No comments

தமிழகத்தில் பாஜக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று பேசினார். அப்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக சந்திக்கும் என அறிவித்தார்.
 
முன்னதாக தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக உயர்மட்டக்குழுவுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்களை சந்தித்தார். மாலையில் பொதுக்கூட்டம் முடிந்த பிறகு நேற்றிரவு கட்சி நிர்வாகிகளுடன் நட்டா ஆலோசனை நடத்தினார்.


அப்போது நட்டா பேசுகையில், அரசியலில் பாஜகவினர் மற்ற கட்சியினரை விட வித்தியாசமாக செயல்பட வேண்டும். பாஜகவினர் மக்களை வித்தியாச முறையில் அணுகி மத்திய அரசின் சாதனைகளை சொல்ல வேண்டும்.
தேர்தலின் போது பாஜகவினர் செயல்பாடுகளை கூட்டணி கட்சியினரிடமும் கேட்டு தெரிந்து கொள்வேன். கட்சிக்குள்ளே அரசியல் செய்யாமல் எதிர்கட்சிகளுடன் போராடி தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் அமைத்து செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர், மதுரையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றார்.

வேலூர் இப்ராஹிம்.... ராமர் கோயில் கட்ட நிதி திரட்ட வந்த என்னை காவல்துறை தடுக்கின்றனர் என்ன காரணம்..?

No comments

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று(31-ம் தேதி ) நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்டவும், மத்திய பாஜக அரசை ஆதரித்து தொடர்ந்து பேசி வருபவரும், ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவருமான வேலூர் இப்ராஹிம் இன்று கோவைக்கு வந்தார்.

தனியார் ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனியாக எங்கும் செல்ல வேண்டாம் , நிதி வசூல், மேட்டுப்பாளையத்துக்குசெல்ல வேண்டாம் என அவரை காவல்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால், அதை மீறி வெளியே செல்ல அவர் முயன்றார். இதையடுத்து செட்டிபாளையம் போலீஸார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் இப்ராஹிம்மை இன்று கைது செய்தனர். சிறிது நேரம் தங்களது பாதுகாப்பில் காவல்துறையினர் வைத்திருந்தனர். பின்னர், பிணையில் அவரை விடுவித்தனர். அதன் பின்னர், அவர் சேலத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

மதநல்லிணக்கத்துக்கு சவால்

முன்னதாக கைது செய்யப்பட்ட போது, வேலூர் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறும்போது,‘‘ கோவையில் ராமஜென்ம பூமியின் கோயில் வசூலுக்காக, மத நல்லிணக்க அடிப்படையில் நான் வந்தேன். காவல்துறையினர் என்னை செல்ல விடாமல் தடுக்கின்றனர்.

காரணம் கேட்டால் உயிருக்கு அச்சுறுத்தல் எனத் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுக்க இதையே கூறுகின்றனர். மத நல்லிணக்கத்துக்கு பெரிய சவாலாக தமிழகம் இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று பாடுபட்டு கொண்டிருக்கும் போது, இங்கு அரசியல் வாக்கு வங்கிக்காக சிலர் அமைப்புகள் தொடர்ந்து எனக்கு அச்சறுத்தல் விடுகின்றனர்.

காவல்துறையினர் அவர்களை ஒடுக்குவதற்கு பதில், என்னை ஒடுக்குகின்றனர். கோயில் வசூலுக்காக செல்லும் போது, காவல்துறையினர் என்னை கைது செய்தனர். என்னை விடுவிக்கும் போது மீண்டும் வசூல் செய்வேன். மத நல்லிணக்கம் என்பது தமிழகத்தில் தேவை.

இதை அப்படியே விட்டுவிட்டால், தமிழகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து. நிச்சயம் மதநல்லிணக்க பூமியாக தமிழகம் தொடர்வதற்கு நான் தொடர்ந்து பணியாற்றுவேன்,’’ என்றார்.

சென்னையில் நடைபெறும் 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதி

No comments

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் ஆட்டம் பிப்ரவரி 13-ம் தேதியும் தொடங்குகிறது.

முதலிரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பிப்ரவரி மாதத்துக்கான கரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு குறிப்பிட்டிருந்தது. இதனால், சென்னை டெஸ்ட் ஆட்டங்களில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்த பேச்சுகள் மீண்டும் எழுந்துள்ளன.

இதுபற்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியது:

"புதிய வழிகாட்டுதலின்படி 50 சதவிகித ரசிகர்களை அனுமதிக்கலாம். எனவே, எங்களது செயலாளர் மூலம் இதுகுறித்து பிசிசிஐ-யிடம் பேசவுள்ளோம். அதன்பிறகே ஒரு முடிவு எட்டப்படும். எனவே, நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

பிசிசிஐ-யிடமிருந்து ஒப்புதல் கிடைத்தால் தமிழக அரசின் உத்தரவுப்படி 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஆனால், அனைத்தும் பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் முடிவைச் சார்ந்துதான் உள்ளது. எனவே, இதுகுறித்து நாளை ஒரு பார்வை கிடைக்கும்."

தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம்.... தேதி அறிவிப்பு...!

No comments

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். 

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் படம் திரையரங்குகளில்வெளியாகவுள்ளதாக படக் குழு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இந்த அறிவிப்புடன் தேதி அறிவிப்பு டீசர் ஒன்றையும் படக் குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என மாரி செல்வராஜ் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் நம்பிக்கை கூடாது என்று சொல்லவில்லை.... தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் பல்டி

No comments

திமுக ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டையில் நடைபெற்ற, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது பேசிய அவர், கரூர் மாவட்டத்தில், மினி க்ளினிக் ஒன்று கட்டி இருக்கிறார்கள். நேற்று அதனை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அவ்வாறு திறந்து வைக்கும்போதே அந்த பில்டிங் இடிந்து விழுகிறது.

இதேபோல ஒரு வாரத்திற்கு முன்பு, விழுப்புரத்தில் ஒரு அணை திறந்த ஒரு மாதத்திற்குள் இடிந்து விழுகிறது. பொன்முடி அதற்கு போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது சில அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டார்கள். அதாவது இரயில் இன்ஜினை திருடியவர்களை விட்டு விட்டு, இரயில் இன்ஜினில் கரி எடுத்தவனை பிடித்தது போல நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கோவிலை திறந்து வைத்துப் பேசிய பழனிசாமி, திருத்தணியில் நான் வேல் வைத்திருந்ததை விமர்சித்துள்ளார். வேல் எனக்கு பரிசளிக்கப்பட்டது. மாவட்டக் கழகச் செயலாளர், பொதுமக்கள், கோயில் பூசாரிகள் எனக்கு வழங்கினார்கள். அதை நான் வைத்திருந்தேன். கடவுள் நம்பிக்கை கூடாது என்று நாம் சொல்கிறோமா? “கோயில்கள் கூடாது என்பதல்ல; கோயில்கள் கொடியவர்களின் கூடாரமாகி விட கூடாது என்பதற்காக” என்று பராசக்தி திரைப்படத்தில் தலைவர் கலைஞர் எடுத்துக் கூறியிருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ்வுடன் ஜே.பி.நட்டா கூட்டணி பேச்சுவார்த்தை.... “ஒளிரட்டும் புதுவை”

No comments

கூட்டணிக்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ் அதிமுகவுடன் பாஜ தேசியத்தலைவர் நட்டா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவாகவில்லை.

புதுவைக்கு அரசியல் பயணமாக இன்று வந்த நட்டாவுடன், பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள் நட்சத்திர ஹோட்டல் மதிய உணவு அருந்தினர். இதில் என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி தலைமையில் ஜெயபால் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன், மருத்துவர் நாராயணசாமி, டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., அதிமுக தரப்பில் புதுவை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், மேற்கு மாநில செயலர் ஓம்சக்திசேகர், கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர், அசனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதிய உணவுக்குப்பின் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் புதுவை பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக நட்டா ஆலோசனை நடத்தினார். கூட்டம் முடிந்து வெளியே வந்த ரங்கசாமியிடம் பேச்சுவார்த்தை குறித்து கேட்டபோது, " மரியாதை நிமித்தமாகவே சந்தித்தோம்" என்று குறிப்பிட்டார்.

கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டதற்கு, " அது குறித்து பின்னர் பேசி முடிவுசெய்யப்படும்" என்று புறப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏவிடம் கேட்டதற்கு, "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும் தான்" என்று புறப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக்கூடும் என பேச்சு எழுந்துவரும் நிலையில் அதை முன்னாள் முதல்வரான ரங்கசாமி ஏற்பாரா என்ற சிக்கல் நிலவுகிறது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான்... கே.பி.முனுசாமி அதிரடி பேச்சு

No comments

அதிமுக-அமமுக இணைக்கப்படுமா என்கிற கேள்விக்கு கே.பி.முனுசாமி அளித்த பதிலில், டிடிவி தினகரன் மன்னிப்புக் கடிதம் தந்தால் அதுபற்றி தலைமை பரிசீலனை செய்யும். 

அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு தினகரன் மன்னிப்புக் கடிதம் தர வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான், மற்றவர்கள் சுயநலத்திற்காக கூறுகின்றனர். 

அதிமுகவில் இல்லாத சசிகலா, கட்சிக் கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது. பல்வேறு கோணங்களில் அதிமுகவை கைப்பற்ற தினகரன் முயற்சி செய்து பார்த்தார். 

தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் டிடிவி.தினகரன். இவ்வாறு அவர் கூறினார். 

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம்.... எடப்பாடியார்

No comments

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், வடநெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த காண்டியப்பன் என்பவரின் மகன் சங்கர் என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பியில் கை பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், மேடவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் திரு. சாமிநாதன் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அரியலூர் மாவட்டம் மற்றும் வட்டம், அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பிரகாசம் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவர் மின் எர்த் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. ராஜ் என்பவரின் மகன் சிலம்பரசன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த திருமதி அல்லி என்பவரின் கணவர் அழகர்சாமி என்பவர் எதிர்பாராத விதமாக மின் கம்பியை தொட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சோமரசம்பேட்டை, அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மகன் கிஷோர் என்பவர் மின் மோட்டாரை இயக்கிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், பள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் என்பவரின் மகன் மனோகரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் செய்தியையும்;

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், நல்லபெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி ரஞ்சிதம் என்பவரின் கணவர் தேவசகாயம் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வாடிப்பட்டி வட்டம், மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த பால்சாமி என்பவரின் மனைவி பேச்சியம்மாள் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருமங்கலம் வட்டம், அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மகன் அக்கினிவீரன் என்பவர் இரும்பு கம்பியை கட்டும் பொழுது, எதிர்பாராத விதமாக உயர் அழுத்து மின்கம்பியில் பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

மேலூர் வட்டம், சருகுவலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த சாத்தம்மாள் என்பவரின் கணவர் செந்தில் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பேரையூர் வட்டம், தொட்டணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் முருகன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், காட்டுவிளையைச் சேர்ந்த பொன்னுமணி என்பவரின் மகன் முருகராஜ் என்பவர் திருமண நிகழ்ச்சியின் போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கவுண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழனியப்பகவுண்டர் என்பவரின் மகன் காளியண்ணன் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், வீரட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரின் மனைவி அந்தோணியம்மாள் என்பவர் மின்கம்பத்தின் அருகிலிருந்த மின் கம்பியை தொட்டதில், எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், காக்காவேரி கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரின் மகன் செல்வன் கோகுலன் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், பெரியசேமூர் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகள் செல்வி மோனிஷா என்பவர் வீட்டின் அருகே பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 17 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு எடப்பாடியார் கூறியுள்ளார்.

நாளைக்கே சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போஸ்டர் ஒட்டுவார்கள் ... அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்

No comments

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிலர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் கருத்து தெரிவிப்பது, போஸ்டர் அடிப்பது, முகநூல் பதிவு வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ''அதிமுகவினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடிப்பது என்பது ஒரு பெரிய விஷயமா?  நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போஸ்டர் ஒட்டுவார்கள்  என  ஆவேசமாக பேசியுள்ளார்.

மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது.... மம்தா, தனது உறவினருக்காக ஆட்சி செய்து வருகிறார்.... அமைச்சர் அமித்ஷா

No comments

மேற்கு வங்க மாநில மக்களை முதல்வர் மம்தா தோற்கடித்து விட்டார். திரிணமுல் தலைவர்கள் ஒவ்வொருவரும் பா.ஜ.கவில் இணைந்து வருகின்றனர். தேர்தல் வரும் போது மம்தா தனித்து விடப்படுவார். மாநில மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறார். பல துறைகளில் மாநிலத்தை பின்னோக்கி தள்ளியுள்ளார். அவரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். மோடி அரசு மக்களுக்காக உழைத்து வருகிறது. ஆனால், மம்தா அரசு, உறவினருக்காக உழைத்து வருகிறது. இவ்வாறு அவுர் பேசினார்.

இந்த பேரணியில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், சுயநலத்திற்காக மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதுடன், தங்களுக்குள்ளே மோதிக்கொள்ளும் கட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவமதிக்கும் கட்சியில் தேசபக்தி மிக்க ஒருவர், ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்கள். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கின் போது, பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு 8 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இங்கு திரிணமுல் தலைவர்கள் அதில் முறைகேட்டில் ஈடுபட்டனர். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் செம ஜோர்...!

No comments

குமரி மாவட்டத்தி்ல் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பாசனத்திற்கான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து விநாடிக்கு 1000 கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த மாதத்தில் இருந்து குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் களைகட்டியுள்ளன. கன்னியாகுமரியில்

இன்று சூரிய உதயம் பார்ப்பதற்கு அதிகாலையிலேயே வெளிமாவட்டம், மற்றும் பிற மாநில சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருப்பதி தேவஸ்தான வெங்கடாசலபதி கோயில் ஆகியவற்றிலும் வழிபடுவதற்கு பயணிகள் கூட்டம் அலைமோதியது. முதன்மையான பொழுதுபோக்கு அம்சமாக திகழும் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு செல்வதற்கு சுற்றுலா பயணிகள் கடலில் உற்சாகமாக படகு பயணம் மேற்கொண்டனர்.

இதைப்போல் குமரி மாவட்டத்தில் சொத்தவிளை, சங்குத்துறை, குளச்சல், தேங்காய்பட்டணம் உட்பட கடற்கரை பகுதிகள், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், வட்டக்கோட்டை போன்ற சுற்றுலா மையங்களிலும் காலையில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக திற்பரப்பு அருவியில் மிதமைாக கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலிட்டு மகிழ்ந்தனர்.

திரையரங்குகள் நாளை முதல் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம்... மத்திய அரசு தகவல்

No comments

திரையரங்குகள் 100 சதவீத பார்வையாளர்களுடன் முழு அளவில் செயல்படலாம். கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துதல் மற்றும் கொவைட் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தியேட்டருக்குள் இருக்கும் அரங்குகளில் உணவு பொருள்களை மக்கள் வாங்கி கொள்ளலாம். கொவைட் காரணமாக அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவடையும் தருவாயில் உள்ளன’’ என்றார். 

திரையரங்குகளை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையடுத்து இந்த நிலையான செயல்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தொற்றுக் கட்டுப்பாட்டு மண்டலங்களில், திரைப்படங்கள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை. 

அங்கு களஆய்வு மதிப்பீட்டின் படி மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்கள் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றி  முடிவு செய்துக் கொள்ளலாம் என நிலையான செயல்பாட்டு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்ற இடங்களில், 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. திரையரங்கு வளாகத்துக்குள் கொவைட் தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என நிலையான செயல்பாட்டு விதிமுறையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
 
முகக்கவசம் அணிவது, திரையரங்குக்கு வெளியே, பொது இடங்கள், காத்திருப்பு பகுதிகளில் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பொதுவான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட வேண்டும். 
பொது இடங்களில் எச்சில் துப்ப தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்ய சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி... பிப்ரவரி 28 க்குள் யாரும் அக்கட்சியில் இருக்க மாட்டார்கள்..... சுவேந்து ஆதிகாரி

No comments

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மே மாதங்களில் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிணமூலை எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்று பாஜக கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோரை பாஜக தன் வசம் இழுத்து வருகிறது.

சமீபத்தில் மிட்னாபூருக்கு பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா வந்திருந்தார். அமித் ஷா முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட 34 பேர் பாஜகவில் இணைந்தனர். இதில் ஒரு எம்.பி., 8 எம்எல்ஏக்கள் அடங்கும்.

நேற்று (சனிக்கிழமை) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முகுல் ராய் மற்றும் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோர் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் மேற்கு வங்க அமைச்சர் ராஜீப் பானர்ஜி, எம்எல்ஏக்கள் பைசாலி டால்மியா மற்றும் பிரவீர் கோஷல், முன்னாள் ஹவுரா மேயர் ரதின் சக்ரவர்த்தி மற்றும் பெங்காலி நடிகர் ருத்ரனீல் கோஷ் ஆகியோரும் புதுடெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சரின் இல்லத்தில் பாஜகவில் இணைந்தனர்.

இதுவரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி., இடதுசாரி கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹவுரா நகரில் உள்ள துமூர்ஜாலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கலந்துகொண்டார்.

இதில் கலந்துகொண்டு சுவேந்து அதிகாரி பேசுகையில், " திரிணமூல் கட்சியிலிருந்து பலரும் விலகி வந்துவிட்டனர். கிட்டத்தட்ட முழுமையாகவே அங்கிருந்து விலகி பாஜகவுக்கு வந்துவிடுவார்கள். இனிமேல் திரிணாமூல் காங்கிரஸ் என்பது ஒரு கட்சியாக இருக்காது. அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி. பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் டிஎம்சி பிரைவேட் லிமிடெட் கம்பெனி காலியாகிவிடும், யாரும் அங்கிருக்க விரும்ப மாட்டார்கள்'' என்று தெரிவித்தார்.

பாஜகவில் இணைந்த பின்னர் தனது முதல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராஜீப் பானர்ஜி, "மேற்கு வங்கத்தில் எங்களுக்கு இரட்டை இயந்திர அரசாங்கம் வேண்டும். சோனார் பங்களாவுக்கான மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டிலும் பாரதிய ஜனதா கட்சி வேண்டும்" என்று கூறினார்.

மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது..... சர்ச்சை நீதிபதி புஷ்பா கனேதிவாலா மீண்டும் ஓரு தீர்ப்பு....!

No comments

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில், நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி வருகிறார். இவர் தான் தற்போது இந்திய அளவில் அதிகமாக பேசப்படுபவர். சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பு வழங்கி பேசுப்பொருளாக மாறியுள்ளார். போக்சோ' சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட ஒரு வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா, 'உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்' என, சமீபத்தில் தீர்ப்பளித்தார்.

அதுமட்டுமல்லாமல், மற்றொரு வழக்கில், 'சிறுமியின் கையை பிடித்திருப்பதும்; பேன்ட், 'ஜிப்' திறந்திருப்பது ஆகியவை, பாலியல் அத்துமீறலாகாது' என, தீர்ப்பளித்தார். மேலும் ஒரு பாலியல் வழக்கில், 'பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்திருந்தால், இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவரின் உடலில் காயங்கள் இல்லை என மருத்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதால், இருவரின் விருப்பதிலேயே சம்பவம் நடந்துள்ளதாக' கூறி, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இப்படியாக அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். புஷ்பாவின் தீர்ப்புகளுக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததால், மும்பை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை உச்சநீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றது.

இந்நிலையில், நீதிபதி புஷ்பாவின் அதிரடி தீர்ப்புகள் முடிந்தபாடில்லை. மனைவியிடம் கணவன் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது என தீர்ப்பு வழங்கி மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

கடந்த 1995ம் ஆண்டு பிரசாந்த் ஜாரேவை திருமணம் செய்துக்கொண்ட பெண், கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் 2004ல் தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து பெண்ணின் தந்தை அளித்த புகாரை விசாரித்த மும்பை யவத்மால் அமர்வு நீதிமன்றம், ஐபிசி பிரிவு 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), ஐபிசி பிரிவு 498ஏ (கணவர் அல்லது கணவரின் உறவினரின் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. 306 பிரிவின்படி 3 ஆண்டுகளும், 498 பிரிவின்படி ஓராண்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாரே வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா கனேதிவாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஐபிசி பிரிவு 498ன் படி, மனைவியிடம் வரதட்சணை கேட்பது துன்புறுத்தல் ஆகாது,' என்று கூறி, குற்றவாளி பிரசாந்த் ஜாரேவை விடுதலை செய்திருக்கிறார் புஷ்பா கனேதிவாலா. மேலும், 'ஜாரேவின் மகள், தனது தாயை அடித்து, துன்புறுத்தி வலுக்கட்டாயமாக விஷமருந்த செய்ததாக தெரிவித்தும், போலீசார் தற்கொலை என வழக்குப் பதிந்தது ஆச்சரியமளிக்கிறது,' எனவும் கருத்து தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா டிடிவி.தினகரன் உறுதி... காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமை உண்டு

No comments

பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்த எல்லா உரிமையும் உள்ளது. அதில், எந்த சர்ச்சையும் இல்லை. வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்பதால் தான் காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது. சட்டப்போராட்டம் தொடரும். அதிமுகவை ஜனநாயகமுறையில் மீட்டெடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அமமுகவை ஆரம்பித்ததே ஜனநாயகமுறையில் தேர்தலில் வென்று அதிமுகவை மீட்டெடுக்கத்தான் என விளக்கமளித்துள்ளார். 

மேலும், பெங்களூர் புறநகர் பகுதியான தேவனஹள்ளி அருகே உள்ள கோடாகுருக்கி பண்ணை வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். சசிகலாவை ஒரு வாரம் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து, பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.

நாராணசாமி புதுச்சேரி மிகப்பெரிய துரோகம் செய்தது ஏன்..? ஆதாரத்துடன் பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு

No comments

புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவிற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் நட்டா பேசியதாவது: புதுச்சேரியில் 35 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 52 சதவீத மக்கள் இன்னும் வறுமை கோட்டிற்கு கீழ் தான் வாழ்கின்றனர். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் புதுச்சேரிக்கு 70 சதவீதம் மானிய உதவி வழங்கப்பட்டது. தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமி, மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்த மானிய உதவி 30 சதவீதமாக குறைக்கப்பட்டது.

மேலும், அவர் அமைச்சராக இருந்தபோது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ரூ.5 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். ஆனால், தற்போது புதுச்சேரி முதல்வராக இருக்கும் அவர், எந்தவித கடனையும் தள்ளுபடி செய்யாமல், புதுச்சேரி மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். புதுச்சேரியில் பா.ஜ ஆட்சி விரைவில் மலரும். அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். உங்களின் (புதுச்சேரி மக்களின்) உற்சாக வரவேற்பை பார்க்கையில் வரும் சட்டசபை தேர்தலில் 23க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று புதுச்சேரியில் விரைவில் பா.ஜ., ஆட்சி மலரும் என்பது தெளிவாக தெரிகிறது. வளர்ச்சியும், ஊழலற்ற ஆட்சியையும் புதுச்சேரியில் பார்ப்பீர்கள். புதுச்சேரியில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

ஓடிடி.,யில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்... அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

No comments

ஓடிடி.,யில் வெளியாகும் தொடர்கள், படங்களுக்கு கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: திரையரங்குகளில் நாளை (பிப்.,01) முதல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 100 சதவீத இருக்கைகளையும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திரையரங்குகளில் மாஸ்க் அணிவது, உடல் வெப்ப பரிசோதனை செய்வது கட்டாயம். தியேட்டர் டிக்கெட் முன்பதிவில் ஆன்லைன் முறையை ஊக்குவிக்க வேண்டும். விரிவான வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்படும்.

ஓடிடியில் வெளியாகும் சில தொடர்கள், படங்களுக்கு எதிராக ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, ஓடிடி படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டுதல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பிப்.,8 ம் தேதி வகுப்புகள் திறப்பு

No comments

முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினாலும், பொது மக்கள் ஒத்துழைப்பினாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது 4,629 பேர்கள் சிகிச்சை என்ற நிலையில் உள்ளது. ஜன.,31 வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. ஆய்வு கூட்டத்தின் அடிப்படையிலும், ஜன.,29ல் நடந்த மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடந்த ஆலோசனை அடிப்படையிலும், உருமாறிய கொரோனா வைரசை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, பல்வேறு கட்டுப்பாடுகளில், கீழ்கண்ட தளர்வுகளுடன் பிப்.,28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கீழ்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது:

* கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான (பட்டய படிப்பு உட்பட) அனைத்து வகுப்புகளும் பிப்.,8 முதல் துவங்கவும், மாணவர்களுக்காக விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* பள்ளிகள் ( 9 மற்றும் 11ம் வகுப்புகள் மட்டும்) பிப்.,8 முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது

* இரவு 10:00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள் நேரக்கட்டுப்பாடின்றி இயங்கலாம்.

* நீச்சல் குளங்கள் செயல்படலாம்

* அனைத்து திரையரங்குகளும் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி பிப்.,1 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* கண்காட்சி கூடங்கள் செயல்படலாம்

* உள் அரங்குகளில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சம் 600 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள் மற்றும் இவை தொடர்பான கூட்டங்கள் பிப்., 1 முதல் நடத்தலாம். திறந்த வெளியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளை பொறுத்தவரை அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகளுடன் நடத்த ஏற்னவே அனுமதிக்கப்பட்ட அனுமதி தொடரும்.

* கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர் அமர்ந்து பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

* உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி போன்ற பொது மக்கள் சார்பான நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ராமேஸ்வரம் தீர்த்தமாடுதல் நிகழ்ச்சி அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடைமத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

* தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வன்முறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி.... பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது...!

No comments

இந்த ஆண்டின் முதல் ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: ‛மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசும் போது, உங்களோடு, உங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நமது சிறுசிறு உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள் வாழ்க்கையின் வளமான அனுபவங்கள், நிறைவான வாழ்க்கை வாழும் உத்வேகத்தை அளிப்பது என்பதன் பெயர் தான் மனதின் குரல்.

வெளிநாடுகளில் வாழும் தனது பல நண்பர்களும் , இந்தியாவிற்கு தங்கள் நன்றிகளை தனக்கு செய்தி அனுப்பி தெரிவித்துள்ளதாக மதுரையை சேர்ந்த கீர்த்தி என்பவர் ‛நமோ' செயலியில் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா பிற நாடுகளுக்கு உதவி செய்தது, இந்தியா பற்றி அவர்களின் மனங்களில் மரியாதையை அதிகரிக்க செய்துள்ளது என்று அவர்கள் தனக்கு செய்தி மூலம் தெரிவித்துள்ளதாக கீர்த்தி தெரிவித்துள்ளார். நாடு பாராட்டப்படுவதை கண்டு, மன் கி பாத் நேயர்களும் பெருமைப்படுவார்கள்.

மனித நேயத்திற்காக பங்களித்தவர்கள்,சாதனையாளர்கள், சிறந்த பணியாற்றியவர்கள் பத்ம விருது மூலம் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த மாதம் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தும் நல்ல செய்தி வந்துள்ளது. நமது கிரிக்கெட் அணி, துவக்கத்தில் ஏற்பட்ட சிரமங்களுக்கு பிறகு, அதில் இருந்து மீண்டு ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றுள்ளது. நமது வீரர்களின் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் முன்மாதிரியாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், குடியரசு தினத்தன்று மூவர்ண கொடி அவமதிக்கப்பட்டதை கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வன்முறை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது. வேளாண் துறையை நவீனமாயமாக்க அரசு எடுக்கும் பல்வேறு முயற்சிகள் தொடரும். நாம் இனி வரும் காலங்களை நம்பிக்கை புதுமை ஆகியவற்றால் நிரப்ப வேண்டும்.

கடந்த ஆண்டு, அசாதாரணமான சுயகட்டுப்பாடு மற்றும் மனஉறுதியை வெளிப்படுத்தினோம். இந்த ஆண்டும் நாம் நமது கடும் உழைப்பு வாயிலாக நமது உறுதிப்பாடுகளை மெய்ப்பித்து காட்ட வேண்டும். நம்முடைய தேசத்தை விரைவாக, நாம் முன்னேற்றி செல்ல வேண்டும்.

இந்த ஆண்டின் துவக்கத்தோடு, கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் ஓராண்டை நிறைவு செய்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு தடுப்பூசிகள் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடந்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் இருந்தது போல், நமது தடுப்பூசி திட்டமும் உலக நாடுகளுக்கு எடுத்து காட்டாக உள்ளது. மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்துடன், உலகிலேயே, மிக விரைவாக நாம், நமது குடிமக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்தி வருகிறோம். 15 நாட்களில், இந்தியாவில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் 18 நாட்களும், பிரிட்டனில் 36 நாட்களும் ஆனது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, நமது நாட்டின் தற்சார்புக்கு எடுத்துக்காட்டு என்பது மட்டுமல்லாமல்,நமது நாட்டின் சுயகவுரவத்திற்கும் ஒரு உதாரணமாக உள்ளது. பிரச்னையான காலத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா உதவியது. மருந்து துறையில் தன்னிறைவு பெற்ற இந்தியா, உலக நாடுகளுக்கு உதவி வருகிறது.

இந்தியா 75வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது.1932ம் ஆண்டு பிப்.,15ல் பிரிட்டிஷார், வந்தே மாதரம் என குரல் எழுப்பிய தேச பக்தர்களை இரக்கமின்றி கொன்றனர். வீரமரணம் அடைந்த அந்த தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் சுதந்திரத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக இளைஞர்கள் கட்டுரை எழுத வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவை சேர்ந்த 4 பெண் பைலட்கள், சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து பெங்களூருவுக்கு இடையில் எங்கும் நிற்காமல் விமானத்தை இயக்கினர். குடியரசு தினத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த 2 பெண்கள் சாதனை படைத்துள்ளனர். எந்த துறையாக இருந்தாலும் பெண்களின் பங்களிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

சிலி நாட்டின் தலைநகர் சான்டியாகோவில் 30 யோகா பள்ளிகள் உள்ளன. நவ.,4ம் தேதியை தேசிய யோகா தினமாக அந்நாட்டு பார்லிமென்ட் அறிவித்துள்ளது.அந்நாட்டு செனட்டின் துணை தலைவராக உள்ளவர் ரபிந்தரநாத் குயின்டெரோஸ். ரபிந்தரநாத் தாகூர் மீது அவருக்கு பற்று அதிகம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும்....பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டம்

No comments

''கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும். தேர்தலுக்கு குறைந்த நாள்களே இருப்பதால், கூட்டணி பேச்சுவார்த்தையை தாமதிப்பதால் யாருக்கும் பலனில்லை.

கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக தாமதிக்காமல் தொடங்க வேண்டும். இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில் தான் அதிமுக இருக்கிறது.

பொதுக்குழு கூட்டணி தொடர்பாக தேமுதிக செயற்குழு இறுதி முடிவு எடுக்கும். திமுக கொடுத்துவரும் பொய் வாக்குறுதிகளை மக்கள் கவனித்து வருகின்றனர்.

எந்த கட்சியும் கூட்டணி குறித்து அறிவிக்காததால் மூன்றாவது அணி குறித்து தற்போது கருத்து கூற இயலாது.

சசிலகா வருகை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சசிகலாவிற்கு எங்களது ஆதரவு உண்டு'' என்று கூறினார்.

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.. அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்...!

No comments

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா, சிறைக்குச் சென்ற பின்னர் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்று முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் தெரிவித்தனர். 

இந்நிலையில் இன்று சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது குறித்து, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்றும் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் இருந்த சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். 

சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.... அவர் செல்லும் காரின் முகப்பில் அதிமுக கொடி....!

No comments

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் இருந்த சசிகலா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 

தொடர்ந்து அதே மருத்துவமனையில் சசிகலா சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரது உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு தற்போது கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர் இன்று(ஜன. 31) காலை 11.45 மணியளவில் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 11 நாள்கள் அவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்றுள்ளார். 

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் சில நாள்கள் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் சில நாள்கள் பெங்களூருவில் தங்கி ஓய்வு பெற்று வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் இருந்து பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்கின்றனர். இதில் சசிகலா சென்ற காரின் முகப்பில் அதிமுக கொடி இடம்பெற்றிருந்தது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்கமான தோழியாக இருந்த சசிகலா, சிறைக்குச் சென்ற பின்னர் அதிமுகவில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வாய்ப்பில்லை என்றும் அவர் அதிமுகவுக்கு உரிமை கொண்டாட முடியாது என்றும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். சசிகலா பொதுச் செயலாளராக உள்ள அமமுக என்ற டிடிவி தினகரன் தொடங்கிய கட்சி உள்ள நிலையில், அவரது காரில் அதிமுக கொடி இடம்பெற்றுள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைமை செயலாளர் சண்முகம் இன்றுடன் ஓய்வு.... புதிய தலைமைச் செயலாளராக ராஜூவ் ரஞ்சன் நியமனம்..!

No comments

தமிழக அரசில் இதுவரை 46 தலைமை செயலாளர்கள் பணிபுரிந்துள்ளனர். தற்போது தலைமை செயலாளராக பணியாற்றும் க.சண்முகம் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில் அவருக்கு பதிலாக புதிய தலைமை செயலாளராக தற்போது மத்திய அரசு பணியில் மீன்வள, கால்நடை மற்றும் பால்வள அமைச்சக செயலாளராக பணியாற்றும் ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தமிழக அரசு பணிக்கு அனுப்புமாறு, தமிழக அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று, நேற்று அவரை மத்திய அரசு பணியில் இருந்து விடுவித்து, கேபினட் நியமனக்குழு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் ரஞ்சன் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 1961-ம் ஆண்டு பிறந்த அவர், எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. பட்டங்களை பெற்றுள்ளார். இதுதவிர அறிவுசார் சொத்துரிமையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருத மொழிகளில் நல்ல புலமை மிக்கவர்.

அவருக்கு, வருகிற செப்டம்பர் மாதம் வரை பதவிக்காலம் இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின், சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் சிறப்பு செயலாளராக பணியாற்றியவர். இவர் சிறந்த நிர்வாகத்திறமை பெற்றவர். இந்நிலையில், தமிழக அரசின் 47வது புதிய தலைமைச் செயலாளராக ராஜூவ் ரஞ்சன் நியமிக்கப்படுவதாக தமிழக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது

No comments

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை அடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை துவங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டிக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் முன்னிலை வகித்தார்.

அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கத் தலைவர் பழனிசாமி வரவேற்றார். இப்போட்டியை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை, திருச்சி, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் இருந்து  600க்கும் மேற்பட்ட காளைகளும், 700க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

வாடிவாசல் இருபுறமும் 5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் கேலரி வசதி அமைக்கப்பட்டுள்ளது.  விழாவிற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 7 இடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறுவோருக்கு தங்க காசு, மோட்டார் பைக், ஸ்கூட்டர், பாத்திரம், கட்டில் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விழாவில் காங்கேயம் சட்டப் பேரவை உறுப்பினர் தனியரசு, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் சிவாச்சலம், ஒன்றிய அதிமுக செயலாளர் பல்லடம் சித்துராஜ், உகாயனூர் பழனிச்சாமி, காட்டூர் பிரகாஷ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் பாரிவேந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்

பாஜக-அதிமுக கூட்டணி.... பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை...!

No comments

கடந்த 18ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடியின் சந்திப்பின் போது வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல், கல்லணை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் தொடங்கி வைக்க தமிழகம் வரவேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பிரதமர் அலுவலகம் ஏற்கனவே இந்த தகவலை உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடி பிப்ரவரி 14ம் தேதி தமிழகம் வருகிறார். அப்போது, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்  உள்ளிட்ட அரசு சார்ந்த திட்டங்களை நேரடியாக தமிழகம் வந்து தொடங்கி வைக்கிறார். 

பின்னர், தமிழக பாஜக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும், பல்வேறு முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் தமிழகம் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பிரதமர் மோடி முதன் முறையாக தமிழகம் வருகிறார்.இதற்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தமிழகம் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,052 பேருக்கு கொரோனா உறுதி

No comments

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,052 பேருக்கு கொரோனா  உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,46,183-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 13,965  போ் குணமடைந்தனா். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,23,125-ஆக அதிகரித்தது. 

கொரோனா தொற்றுக்கு மேலும் 127 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,274 -ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கையில்  இந்தியா 4-ஆவது இடத்தில் உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,68,784 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19,65,88,372 கோடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,50,964 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

"நாடு முழுவதும் சனிக்கிழமையுடன் பிதினைந்து நாள்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது"  என்று சுகாதார அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக - பாமக கூட்டணி தொடருமா..? அடுத்து நடப்பது என்ன...?

No comments

வன்னியர் சமுதாயத்துக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். பொங்கலுக்கு முன்பாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக நெருக்கடி கொடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இதற்கிடையே கடந்த 23-ம் தேதியன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியிடமும் தைலாபுரம் தோட்டத்துக்கு வந்தனர். ஆனால், இட ஒதுக்கீடு நிறைவேறும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது என்று அவர்களிடம் டாக்டர் ராமதாஸ் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

இதற்கிடையே தொடர் போராட்டங்களை நடத்திவரும் பாமகவின் கோரிக்கை மீது அதிமுக பெரிய ரியாக்‌ஷன் காட்டவில்லை என்ற கோபத்தில் டாக்டர் ராமதாஸ் உள்ளார். அதிமுகவிடமிருந்து சாதகமான பதில் வராத நிலையில், அரசியல் ரீதியான முடிவை அறிவிப்போம் என்று பாமக மிரட்டி வருகிறது. இந்நிலையில் பாமக சார்பில் இன்று அவசர நிர்வாக குழு கூட்டம் காணொலி காட்சி மூலம்  நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பாமக முடிவெடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கூட்டணியை விட்டு விலகும் முடிவை பாமக எடுத்துவிடக் கூடாது என்பதற்காக பாமகவை சரிகட்டும் பணியில் அதிமுகவும் களமிறங்கியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை திண்டிவனம் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் நேற்று இரவு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

கூட்டணியைவிட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் அதிமுக சார்பில் பாமகவை வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாமகவின் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அப்போது ராமதாஸ் அமைச்சர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், பாமக இறுதியான முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்துக்குப் பிறகு கூட்டணிகள் இறுதி செய்வது, தொகுதிகள் ஒதுக்கீடு, பிரசாரம் எனப் பல கட்டப் பணிகள் இருப்பதால், பாமக இன்று இறுதியான முடிவை எடுக்கும் என்று அக்கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது. எனவே, இன்றைய கூட்டத்தில் பாமக கூட்டணி குறித்து இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஒன்றிய இளைஞரணி தலைவர் சசிகலாவை வரவேற்று போஸ்டர்.... அதிமுக அதிர்ச்சி

No comments

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் கொரோனா, சுவாசப் பிரச்சனை காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் சிலர் அவரை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகின்றனர். 

நெல்லை போஸ்டர் ஒட்டியதாக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்ரமணியராஜா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதேபோல் திருச்சி புறநகர் மாவட்டம் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி புலியூர் இரா.அண்ணாதுரையும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக ஒன்றிய இளைஞர் அணித் தலைவர் பண்ணை சின்னராஜா, மாவட்ட இளைஞர் பாசறைத் தலைவர் ஏ.புதுராஜா ஆகியோர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதில், தமிழ்நாட்டை வழி நடத்த வரும் அதிமுக பொதுச் செயலாளர் தியாகத்தின் மறு உருவம் எங்களின் ராஜமாதாவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா, நடராஜன், தினகரன் ஆகியோரது படங்கள் இடம் பெற்றுள்ளன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்தும் கட்சி நிர்வாகிகள் பொருட்படுத்தாதது அதிமுக தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடக்கம்

No comments

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 70.26  லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கரோனா பாதிப்பு, அறிகுறிகள் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd