Type Here to Get Search Results !

“டாடா“ விரைவில் “ஏர்ஆசியா இந்தியா“ நிறுவனத்தின், 83.67 சதவீத பங்குளை வங்க திட்டம்


டாடா நிறுவனம், மலேசியாவின், 'ஏர்ஆசியா' நிறுவனத்துடன் இணைந்து, 'ஏர்ஆசியா இந்தியா' எனும் கூட்டு வணிகத்தை துவங்கியது.'ஏர்ஆசியா இந்தியா'வின், 51 சதவீத பங்குகள், தற்போது, டாடா சன்ஸ் நிறுவனத்தின் வசம் உள்ளன. மீதி, 'ஏர்ஆசியா' நிறுவனத்தின் வசம் உள்ளது. தற்போது, தன்னுடைய பங்கை, 83.67 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க, டாடா சன்ஸ் திட்டமிட்டு உள்ளது.

மலேசிய நிறுவனம், ஏற்கனவே, இந்தியாவில் அதன் வணிகத்திலிருந்து வெளியேறும் எண்ணத்தில் உள்ளது. டாடா சன்ஸ், 'ஏர் இந்தியா'வை ஏலத்தில் எடுக்கும் திட்டத்தில் இருக்கிறது. இவை இரண்டு காரணங்களால், 'ஏர்ஆசியா இந்தியா'வை கையகப்படுத்த, டாடா திட்டமிடுகிறது. இந்நிறுவனத்தை கையகப்படுத்தியதும், ரீ - பிராண்டு முயற்சியில் டாடா இறங்கும் எனத் தெரிகிறது.

ஏர் இந்தியாவை வாங்குவதில், டாடாவின் இன்னுமொரு கூட்டு தொழிலான, 'விஸ்டாரா'வின் கூட்டாளியான, 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனம், இன்னும் முடிவு எதையும் அறிவிக்கவில்லை. டாடா குழுமம், கடந்த 14ம் தேதி, 'ஏர் இந்தியா'வை வாங்க விருப்பம் இருப்பதாக, அரசுக்கு தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom