Type Here to Get Search Results !

தற்போதைய சூழலில் அரசியலைவிட, எங்கள் தலைவரின் உயிரே மிக முக்கியம் : மதுரை ரஜினி ரசிகர்கள் கருத்து


ரஜினியின் தீவிர ரசிகர் சிவதாணுமூர்த்தி (மதுரை) கூறியது:

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, இருந்தே ரஜினிகாந்த் ரசிகர் . எங்கள் தலைவர் உடல்நிலை பாதித்து, ஏற்கெனவே ஒருமுறை உயிர் பிழைத்தார்.

மீண்டும் உடல் நிலை காரணமாக அரசியல் கட்சி தொடங்கும் நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார் என்பதைவிட, சூழலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

தமிழகததில் ''சிஸ்டம் சரியில்லை, இப்போது இல்லை எனில் எப்போதும் இல்லை, மாற்றத்திற்கான அலை உருவாக்கனும்,'' போன்ற ஆயிரம் தத்துவ வார்த்தைகளை அவர் வெளியிட்டு இருந்தாலும், மாற்றத்திற்கு கரோனா பரவல் என்ற சூழல் ஒன்றே போதும். சாதாரணமாக 100 பேர் கூடும் இடத்தியே 4 பேருக்கு தொற்று இருக்கிறது என்றால், கட்சி மாநாடு, மீட்டிங் போன்ற இடங்களில் அதிகமானோருக்கு பரவும் என்ற நிலையை கண்டு தலைவர் மாறியிருக்கிறார்.
 
செந்தில்பாபா, ரஜினி ரசிகர் சிவதாணுமூர்த்தி

சுயநலம் இல்லாத நபர்கள் இதையே விரும்புவர். எங்களது தலைவரும் மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடியவர் என்பதால் அரசியல் நிலைபாட்டை மாற்றி இருக்கிறார்.

ரசிகர் என்ற முறையில் அவரது உயிர் எங்களுக்கும், மக்களுக்கும் முக்கியம். அவர் அரசியலுக்கு வருவார், அதன்மூலம் பதவி, பணம் சம்பாதிக்கலாம் என, கருதிய சிலருக்கு வேண்டுமானால் ஏமாற்றம் அளிக்கலாம்.

என்னைப் போன்ற உண்மை ரசிகர்களுக்கு அவரது உயிரே அவசியம். அனைத்து தரப்பினரும் இதை ஏற்பர். பணமா, உயிரா என்றால் உயிருக்கு முக்கியத்தும் அளிப்போம். அவரே மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதை எல்லோரும் வரவேற்கிறோம், என்றார்.

ரஜினி மக்கள் மன்ற மதுரை மாநகர் 1-ம் பகுதிச் செயலர் செந்தில் பாபா (மதுரை); எங்களது தலைவரின் உடல் நிலை முக்கியம். அவர் நன்றாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நேற்று முன்தினம் கூட, அவர் கட்சி அறிவிக்கலாம் என்ற நிலையில் இருந்திருக்கிறார்.

மருத்துவர்களின் ஆலோசனைகளை ஏற்று அவரது முடிவை மாற்றியிருக்கலாம். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகளுக்கு மாற்று என்ற நிலையில் அவரது உயிர் பழிகடாவாகிவிடக்கூடாது. மக்களின் மனநிலை புரிந்து, தொடர்ந்து தலைவரின் வழி காட்டுதலில் மக்கள் பணி செய்வோம்.

நாங்கள் விரும்புவது என்னவென்றால் தலைவர் உடல் நிலை நன்றாக இருந்தால் மட்டுமே மக்களுக்கான செயல்பாடும் இருக்கும். நாங்களும் நல்லா இருக்க முடியும். ஆண்டுதோறும் திரையில் அவரைப் பார்க்கவேண்டும். அவரது திரைப்படம் வெளியாகும் போதும்,

அவரது பிறந்தநாளிலும் தொடர்ந்து மக்கள் பணி செய்ய வோம். அவர் அரசியலுக்கு வந்தாலும், வரவிட்டாலும் சந்தோஷம். அவர் எப்போதும் சூப்பர் ஸ்டார் தான்.

அவர் உயிருடன் இருந்து ஊடகங்கள் மூலம் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவதோடு, தினமும் மீடியாக்களுக்கும் அவர் தலைப்பு செய்தி. ஓபிஎஸ், இபிஎஸ் என்ன சொல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பதைவிட, ரஜினி காந்த் என்ன வார்த்தை சொல்கிறார் என, உலக நாடுகளே எதிர் பார்க்கின்றன.

நாங்கள் அவரது சொல்லை மந்திரமாக பார்க்கிறோம். அவரது கட்டளையை நிறைவேற்றும். அரசிய லில் அவரது குரலுக்கு கட்டுப்படுவோம். மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என, அவருக்கு தெரியும்.

அதை அவரும் தெரிவிப்பார். அரசியல் தொடர்பாக அவர் ''இப்ப இல்லயினா எப்போவும் இல்ல, சிஸ்டம் சரியில்லை, மாற்றுத்திற்கான அலையே உருவாக்கனும்'' போன்ற வார்த்தைகளை வெளியிட்டார். இதற்கு நிச்சயமாக பதில் கிடைக்கும் வகையில் அறிக்கை வெளியிடுவார். அதுவும் புத்தாண்டில் அந்த அறிக்கையை எதிர்பார்க்கிறோம், என்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom