Type Here to Get Search Results !

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு



ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே கொல்லப்பட்ட விவகாரத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் பக்ரிசாதே, டெஹ்ரானில் அந்நாட்டின் மூத்த அணு விஞ்ஞானி பக்ரிசாதே காரை துப்பாக்கி ஏந்திய 5 நபர்கள் வழிமறித்து சரமாரியாக சுட்டனர். இதில் படுகாயமடைந்த பக்ரிசாதேவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தாக்குதலில் பக்ரிசாதேவின் மெய்காப்பாளர்களும் படுகாயம் அடைந்தனர். ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவத்தில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல் இஸ்ரேல் நாட்டின் பயங்கரவாதம் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, பக்ரிசாதேவின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்ததால், இந்த படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுத்து வருகிறது. அமெரிக்க அதிபராக தேர்வான ஜோ பைடன் வரும் ஜனவரியில் பதவியேற்கும் சூழலில், ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திட வைப்பதற்கான அவரது முயற்சிகள், இந்த படுகொலையால் வீணாகலாம் என கூறப்படுகிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom