Type Here to Get Search Results !

இந்தியாவுக்கு சவுதி அரேபியா அளித்துள்ள தீபாவளி பரிசு இது தான்....



சவுதி அரசு வெளியிட்ட புதிய கரன்சியில், பாகிஸ்தான் வரைபடத்திலிருந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகளை நீக்கியுள்ளது.

சவுதி அரேபியா தலைமையில், நவ., 21ல், 'ஜி - 20' மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி, சவூதி அரசு, உலக வரைபடம் அச்சிட்ட, 20 ரியால் கரன்சியை வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், அம்ஜத் அயூப் மிர்சா, 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: சவுதி அரேபியா, பாகிஸ்தான் வரைபடத்தில் இருந்து, அதன் ஆக்கிரமிப்பு பகுதிகளான, ஜம்மு - காஷ்மீர், கில்ஜித் - பல்திஸ்தான் ஆகியவற்றை நீக்கியுள்ளது. இது, இந்தியாவுக்கு சவுதி அரேபியா அளித்துள்ள தீபாவளி பரிசு. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom