Type Here to Get Search Results !

வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை வாய்ப்பு



சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு : தமிழக கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலில், வளிமண்டல சுழற்சி காரணமாக, வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யும். தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களிலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், இன்று சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், லேசான மழை பெய்யும். அதிக பட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகம், 11; ராமநாதபுரம் மண்டபம், சென்னை அண்ணா பல்கலை, 6; எண்ணுார், வாலிநோக்கம், பெரம்பூர், ஆலந்துார், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, 5.பெரியகுளம், சோழிங்கநல்லுார், சோழவரம், சென்னை எம்.ஜி.ஆர்.நகர், கூடலுார், 4; வானுார், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ராதாபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom