Type Here to Get Search Results !

நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்



நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 736 அணைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்காக, அணை புனர்வாழ்வு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.10,211 கோடியில், இந்த திட்டம், 2021 ஏப்., முதல் மார்ச் 2031 வரை செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் கூறுகையில், நாடு முழுவதும் அணைகளை புனரமைக்க ரூ.10 ஆயிரம் கோடி செலவிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அணைகள் பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவு செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், சர்க்கரை தவிர்த்து தானியங்கள், பருப்புகளை சணல் பைகளிலேயே மூட்டை கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது சணல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் சணல் பை தயாரிப்பாளர்கள் பயனடைய வாயப்பு ஏற்படும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையில், 20 சதவீதம் சணல் மூட்டைகளில் விநியோகம் செய்ய வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom