Type Here to Get Search Results !

எனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், என்னுடையது அல்ல- ரஜினிகாந்த்



எனது அறிக்கை போல சமூக வலைத்தளங்களில் பரவும் கடிதம், தன்னுடையது அல்ல - ரஜினிகாந்த்

தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசித்து அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு தெரிவிப்பேன் - ரஜினிகாந்த்

சமூக வலைத்தளத்தில் பரவும் கடிதத்தில், தன்னுடைய உடல்நிலை, மருத்துவர்கள் ஆலோசனை பற்றி கூறப்பட்டுள்ள தகவல்கள் உண்மையே - ரஜினிகாந்த்

இதனை மறுத்து டுவிட்டரில் ரஜினி வெளியிட்ட பதிவு: என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவி கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு டாக்டர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom