Type Here to Get Search Results !

வேறு எந்த தலைவரும் பெறாத அவமானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார் சாதனை சாதனை



வேறு எந்த தலைவரும் சொந்த மாநிலத்தில் பெறாத அவமானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் பெற்றிருக்கிறார், எல்லாம் கடந்த காலத்தில் செய்த வினையின் எதிர்வினை என தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெறும் தேவர் குருபூஜையில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து கிளம்பி, மதுரை விமான நிலையம் சென்றார், அதன்பிறகு இன்று காலை பசும்பொன்னில் தேவர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு சென்னை திருப்புகிறார்.

இந்த நிலையில் தேசியமும் தெய்வீகமும் என வாழ்ந்த தேவர் விழாவில் நாத்திகரான ஸ்டாலின் கலந்து கொள்வது எந்த வகையில் நியாயம் என ஒரு தரப்பு ஸ்டாலினுக்கு எதிராக GOBACKSTALIN என கண்டனத்தை பதிவு செய்தனர், மறுப்பக்கம் மதுரை சென்ற ஸ்டாலின் மீண்டும் சென்னை பக்கம் திரும்ப கூடாது, எனவும் தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ள திமுக தலைவர் எங்களுக்கு வேண்டாம் என ஒரு தரப்பும் ட்விட்டரில் கருத்துக்களை பதிவு செய்ய தற்போது தமிழக அளவில் முதல் இடத்தில் GOBACKSTALIN ட்ரெண்ட் உள்ளது.



இந்திய பிரதமர் மோடி தமிழகம் வரும்போது எல்லாம் GOBACKMODI என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர், இன்று சொந்த மாநிலத்திற்குள்ளேயே ஸ்டாலினுக்கு GOBACKSTALIN கடும் எதிர்ப்பு கிளம்பியிருப்பது, முன்னாள் செய்த வினையின் எதிர்வினையாக பார்க்கப்படுகிறது. தற்போது GOBACKSTALIN ட்ரெண்ட் தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் பிரபலமாகிவருகிறது.


சொந்த மாநிலத்தில் இதுவரை எந்த தலைவரும் இப்படி அவமானப்பட்டது இல்லை, பசும்பொன்னிற்கு வரக்கூடாது என ஒரு அணியும், மதுரை பக்கம் சென்ற ஸ்டாலின் சென்னை திரும்பக்கூடாது என மாறி மாறி விரட்டி அடிக்கும் சம்பவத்தால் திமுகவினர் கதிகலங்கி நிற்கின்றனர்.


gobackmodi ட்ரெண்ட் ஆவதை மீண்டும் மீண்டும் சொல்லி பிரபலப்படுத்திய தமிழக ஊடகங்கள் தற்போது ஸ்டாலின் விரட்டி அடிக்கப்படுவதை ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom