Type Here to Get Search Results !

விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமா? இந்த ஆன்மீக குறிப்புகளை செய்தால் போதும்மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வரவும், குபேரன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும்.

இதற்காக பலரும் நேரத்தையும் பணத்தையும் செலவு செய்து பல பரிகாரங்கள், ஹோமங்களை செய்வதுண்டு.

இதனை தவிர்த்து குபேரனை ஈர்த்து பண வரவு வர செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகப்படி ஜோதிடர்கள் கூறியுள்ளனர். தற்போது அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.


 • குபேரருக்குரிய வடக்கு திசையில் தொழில், வியாபார இடங்களிலும், வீட்டிலும் பணப்பெட்டியை வடக்கு நோக்கி வைப்பது சிறப்பாகும்.
 • கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
 • வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 • பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
 • செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமையில் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.
 • பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.
 • வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும்.
 • குபேர காலத்தில் குபேரனை வழிபட பணம் வரும். வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண்ட் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 • வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.
 • வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும்.
 • பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும். பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்.
 • பகல் 12 மணியளவில் அபிஜித் நட்சத்திரத்தில் திருநங்கைக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.
 • முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை பசுவிற்கும் பறவைக்கும் அளித்திட பணத்தடை நீங்கும்.பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப் பிரச்சனை தீரும்.
 • தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம் செய்வாள்.
 • குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
 • வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
 • ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம். ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.
 • கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும். மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
 • சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
 • வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும். வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
 • அதிகாலை விழித்தவுடன் பசுவையாவது, தன்முகத்தையாவது, தன் வலது உள்ளங்கையாவது முதலில் பார்த்து விட வேண்டும். இதனை செய்வதனால் கூட பணம் வரவு கிட்டும்.
 • தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும். ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.
 • குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.
 • துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் 5 முகம் கொண்ட குத்துவிளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
 • ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சனை செய்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
 • ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது. அதே போல சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் பெருகும்.
 • லட்சுமி குபேரர் படத்துடன் குபேர யந்திரத்துடன் 48 நாட்கள் பூஜிக்க செல்வம் பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பச்சை கற்பூரம், ஏலக்காய், சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு போட்டு வைக்கவும். பணம் பெட்டியில் மளமளவென பெருகுவதைக் காணலாம்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom