Type Here to Get Search Results !

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ‘மோடி’ கோஷம், action-ல் இறங்கிய நெட்டிசன்கள்: உண்மையில் என்ன நடந்தது?


வியாழக்கிழமை, பாக்கிஸ்தானின் (Pakistan) தேசிய சட்டமன்றத்தில் ஒரு சூடான விவாதம் நடந்தது. இது இந்தியாவிலும் எதிரொலித்தது. ஏன், எப்படி என்று இங்கே பார்க்கலாம்!!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகிய பிறகு அனைத்தும் துவங்கின. ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பியதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பெயரை முழக்கமிட்டதாகவும் பலர் கூறினர். பல ஊடக வலைத்தளங்களும் குறிப்பிடத்தக்க பிரபல நபர்களும் இதையே கூறினர். இது இம்ரான் கான் அரசாங்கத்திற்கு ஒரு கேவலமான விஷயம் என்றும் பலர் தெரிவித்தனர்.

‘மோடி, மோடி’ என்ற ஹேஷ்டேக் விரைவில் சமூக ஊடகங்களில் டிரெண்டாகத் தொடங்கியது. பல மீம்களுன் ஜோக்குகளும் உருவாகத் தொடங்கின.

உண்மையில் நடந்தது என்ன?

இருப்பினும், சமூக ஊடக கூற்றுக்களுக்கு மாறாக, ‘மோடி’ கோஷங்கள் எதுவும் அங்கு எழுப்பப்படவில்லை. வீடியோ கிளிப்பை கவனமாகக் கேட்டால், பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘voting, voting’ என்று கோஷமிடுவதை கேட்கலாம்.

இரண்டு சொற்றொடர்களும் ஒரே மாதிரியாக ஒலிப்பதால், இதை இணையத்தில் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.

குறிப்பாக, சார்லி ஹெப்டோ சம்பவம் மற்றும் இஸ்லாமோஃபோபியா குறித்து வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி பேசத் தொடங்கிய பின்னர் ‘voting’ கோஷங்கள் எழுப்பப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோவை நன்றாக கேட்டால், உறுப்பினர்கள் முழக்கமிடுவதை நிறுத்தி ஒருவருக்கொருவர் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று சபாநாயகர் கூறுவதையும் கேட்கலாம். "வாக்களிப்பு கண்டிப்பாக நடக்கும்," என்று அவர் உறுதியளிப்பது தெரிகிறது.

டான் அறிக்கையின்படி, ஒரு முஸ்லீம் தீவிரவாதியால் ஒரு பிரெஞ்சு ஆசிரியர் கொலை செய்யப்பட்டதை அடுத்து, உலகின் சில தீவிர மனப்போக்கு கொண்ட நபர்கள், வன்முறை, அவதூறு மற்றும் இஸ்லாமியவாத தீவிர செயல்களை மீண்டும் துவக்குவதை கண்டிக்கும் தீர்மானத்தில் எம்.பி.க்கள் வாக்களிக்கக் கோரினர்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom