Type Here to Get Search Results !

ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோவில் 15,000 பக்தர்கள் வருகை தர அனுமதி



ஜம்மு காஷ்மீரின் வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15000ஆக உயர்த்தி ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரபல வைஷ்ணவி தேவி குகைக் கோவிலுக்கான யாத்திரைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

யாத்திரை பதிவு மையங்களில் பக்தா்கள் கூட்டம் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு பதிவு செய்தவா்கள் மட்டுமே யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

முகக் கவசம் அணிந்து வருவதும், யாத்திரை நுழைவுப் பகுதிகளில் பக்தா்கள் முழு உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதும் கட்டாயமாக்கப்பட்டது.

தொடக்கத்தில் நாளொன்றுக்கு 2000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் 5000 எனவும் அதனைத் தொடர்ந்து 7000 எனவும் உயர்த்தப்பட்டது. 

இந்நிலையில் பண்டிகைக்காலங்களை முன்னிட்டு நவம்பர் 1 முதல் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 15 ஆயிரமாக அதிகரிக்கப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom