Responsive Ad Slot

திமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை : தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்

No comments

Saturday, 31 October 2020பெண்கள், தலித் மக்களுக்கு எதிரானவர்களை பாதுகாக்கும் திமுகவின் முகத்திரையை அகற்றவே வேல் யாத்திரை நடத்துகிறோம் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. முன்னதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசும்பொன் ஒரு கோவில். சித்தர் பீடம். அங்கு பின்பற்றப்படும் வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆனால் திமுக தலைவர் பசும்பொன்னில் கொடுத்த விபூதியை தட்டிவிட்டுள்ளார். அவரது செயல் அனைவரையும் வேதனைப்படுத்தியுள்ளது. இதற்காக ஸ்டாலின் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பெண்கள் மற்றும் தலித் மக்களையும் வேலமாகப் பேசவதை பாதுகாக்கிறார் ஸ்டாலின்.

அவரின் போலி சமூக நீதியை மக்கள் புரிந்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மக்கள் அவருக்கு பதிலடி கொடுப்பார்கள். தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களுக்கு பின்னால் திமுக இருக்கிறது. இதில் தொடர்புடையவர்களுக்க திமுக சட்டப்பிரிவு சட்ட உதவிகளை செய்து வருகிறது. திமுகவின் முகத்திரையை கிழிக்கவே வேல் யாத்திரை நடத்துகிறோம்.

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. யாத்திரையால் ஆதரவு மேலும் அதிகரிக்கும். வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன. இதனால் யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்கின்றனர். தடை விதித்தாலும் வேல் யாத்திரை நடைபெறும். வேல் யாத்திரை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

மனு தர்மம் என ஒன்று இல்லை. அம்பேத்கார் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின்படியே இந்தியா இயங்கி வருகிறது. ஆனால் இல்லாத மனு தர்மத்தை தடை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்துவது வேடிக்கையாக உள்ளது. ஆர்எஸ்எஸ் கூட பல நேரங்களில் மனு தர்மத்தை எதிர்த்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில துணைத் தலைவர் ஏ.ஆர்.மகாலெட்சுமி, புறநகர் மாவட்டத் தலைவர் மகா சசீந்திரன் உடனிருந்தனர்.

கிறிஸ்தவ சகாயம் மதத்தைப் பரப்ப வேண்டும் என பதவி : இல.கணேசன்

No comments


சென்னை கிண்டியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பாஜக சார்பில், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் தலைமையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் அக்கட்சியின் மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இல.கணேசன் கூறுகையில், சுதந்திரத்திற்காக நடைப்பெற்ற போராட்டத்திற்கு தலைமைத்தாங்கி வெற்றிகரமாக நடத்தப்பட்ட காரணத்தால் சர்தார் என்று அழைக்கப்பட்டார். மேலும், மனதளவில் மிக உறுதியானவர். ஆண்டு தோறும் அவர் பிறந்த நாளில் மரியாதை செலுத்துவது வழக்கம். அந்த வகையில் தான் பா.ஜ.க சார்பில் இன்றும் மரியாதை செலுத்தப்பட்டது.

பாஜக சார்பில் வேல் யாத்திரை நீண்ட நாட்களுக்கு முன்பே திட்டமிட்டுவிட்டோம். திருமாவளவனைச் சார்ந்தவர்கள் கலவரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். எனவே இதற்கு அரசு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறிய அவர், யாத்திரை கட்சி அமைப்பு ரீதியான திட்டமிடப்பட்டுள்ளது. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் அரசிற்கு இதை தடுக்க எந்த காரணமும் இல்லை என்ற அவர், நாங்கள் பேசி இதற்கு அனுமதி வாங்குவோம் என்றார். அதுமட்டுமின்றி பாஜகவிற்கு மக்கள் மத்தியில் அதிகம் புகழ் கூடி விடுமோ என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருக்கிறது என்றும் அவர் சாடினார்.

எந்த கேள்விக்கும் பதில் கூற முடிந்த என்னால், ரஜினிக்காக மட்டும் பதில் கூற முடியாது என்றார். மேலும், ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து யாராலும் கணிக்க முடியாது என்றும் அவரே கூறினால் மட்டும்தான் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் ரஜினி எது செய்தாலும் சரியாகத்தான் செய்வார். எனவே, பதில் கூற வேண்டியவர் ரஜினி தான் என இல.கணேசன் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், சகாயம் ஐ.ஏ.எஸை அரசாங்கம் அனுப்பவில்லை. அவர் அதிகாரத்தில் இருக்கும் போதே கிறிஸ்துவ மதத்தை பரப்பியவர். தற்போது முழுமையாக மதத்தைப் பரப்ப வேண்டும் என பதவி விலகுகிறார் என நினைக்கிறேன் என்றார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்

No comments


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றவர்களின் மத நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அங்கு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியது அதிர்ச்சியளிக்கிறது. அவருக்கு இறை நம்பிக்கை இல்லாவிட்டாலும், மற்றவர்களின் நம்பிக்கையை அவமதிக்கக்கூடாது.

பெரியாரை விட கடவுள் மறுப்பாளர் யாரும் இல்லை. ஆனால் அவரே ஆன்மிக நிகழ்வில் வழங்கப்பட்ட விபூதியை நெற்றியில் பூசிக் கொண்டார். இதனால் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்.

வேல் யாத்திரை டிச.6-ல் முடிகிறது. அந்த தினம் பாஜகவுக்கு புனித நாள். அம்பேத்காரின் பிறந்த நாள். இதனால் அன்று வேல் யாத்திரையை முடிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

வேல் யாத்திரை எதிர்கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ரஜினி தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகையால் பாதிப்பை சந்திக்கும் கட்சிகள் அவர் தொடர்பான அவதூறு அறிக்கையை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

2021 சட்டப் பேரவை தேர்தலில் பாஜக இரண்டு இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

திமுக துண்டு சீட்டு ஸ்டாலின் போட்டியில் பங்கேற்பாரா? : குறிப்பையும் பார்க்காமலும் துண்டு சீட்டு இல்லாமலும் உரையாற்றினார் : செய்த பிரதமர்

No comments


இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்திவருகின்றனர்.

பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர். 

இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பிரதமர் பார்வையிட்ட பிரதமர் மோடி அதன் பிறகு உரையாற்றினார்.

தனது உரையில் தமிழ் கவிஞர் பாரதியாரின் கவிதைகளை குறிப்பிட்டார் :- மன்னும் இமயமலை எங்கள் மலையே;
மாநிலமீததுபோல் பிறிதில்லையே!
இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே;
இங்கிதன் மாண்பிற்கு எதிர் ஏது வேறே?
பன்னரும் உபநிட நூல்எங்கள் நூலே;
பார்மிசை ஏதொரு நூலிது போலே!
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே;
போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே! என எந்த வித குறிப்பையும் பார்க்காமலும் துண்டு சீட்டு இல்லாமலும் உரையாற்றினார்.


பிரதமர் மோடியின் தாய் மொழி குஜராத்தி அப்படி இருக்கையில் தமிழ் கவிதையை எந்தவித பிழையும் இன்றி துண்டு சீட்டு குறிப்புகள் ஏதும் இல்லாமல் முழு கவிதையும் கூறியிருப்பது ஆச்சர்யத்தை வரவைத்துள்ளது, இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலினை குறிப்பிட்டு பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழ் தெரியாத பிரதமர் மோடி பாதிரியார் கவிதைகளை பிழையில்லாமல் துண்டு சீட்டு இல்லாமல் குறிப்பிட்டு பேசியுள்ளார், நீங்களும் இதே கவிதையை அல்லது வேறு ஒரு பாதிரியார் கவிதையை துண்டு சீட்டு இல்லாமல் பேசமுடியுமா என சவால் விடுத்து வருகின்றனர். எப்போதெல்லாம் பிரதமர் திருக்குறள் அல்லது தமிழ் இலக்கியங்களை சுட்டிக்காட்டி பேசுகிறாரோ அப்போதெல்லாம் இதுபோன்று ஸ்டாலின் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார்.

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஸ்டாலின் ஏதேனும் ஒரு பாதிரியார் கவிதையை பிழையில்லாமல் பேசி விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் இனியும் ஓடி ஒழிய கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது, பிரதமர் தமிழ் இலக்கியங்கள், திருக்குறள், தற்போது பாதிரியார் கவிதைகள் என சுட்டிக்காட்டி சிறப்பான சம்பவங்கள் செய்துவரும் வேலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மறைமுகமாக கிண்டல் செய்யப்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் இன்று 3,848 பேர் டிஸ்சார்ஜ் : புதிதாக 2,511 பேருக்கு கொரோனா

No comments

தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,511 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2,511 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,24,522 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மேலும் 680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 31 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 11,122 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 3,848 பேர் ஒரேநாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 6,91,236 பேர் குணமடைந்துள்ளனர். 22,164 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 70,767 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 99,56,210 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க அனுமதி : நவ. 16-முதல் பள்ளிகள் திறக்க அனுமதி

No comments


தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று நிறைவடைந்த நிலையில் மேலும் தளர்வுகளுடன் நவ.30 வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நவ. 16-முதல் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அக். 31 நள்ளிரவு 12:00 மணி வரை அமலில் இருக்கும் என கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி ஊரடங்கு இன்று இரவு நிறைவடைகிறது.

ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினருடன் இன்று ஆலோசனை நடந்தது. அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் தமிழக அரசு இன்று மேலும் சில தளர்வுகளுடன் நவ. 30 வரை ஊரடங்கை நீட்டித்து பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு

* நவ. 16-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க அனுமதி.

* நவ.10-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் வணிக வளாகங்கள், மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் மற்றும் தியேட்டர்கள் திறக்க அனுமதி.

* மதம் சார்ந்த கூட்டங்கள், கலாச்சார ,பொழுது போக்கு நிகழ்ச்சிகள், திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை பங்கேற்லாம்.

* நவ. 16 முதல் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்விநிறுவன விடுதிகள் அனைத்தும் திறக்க அனுமதி.

* புற நகர் மின்சார ரயில் போக்குவரத்து சேவைகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி செயல்பட அனுமதி.

* சின்னத்திரை மற்றும் திரைப்பட படிப்பிடிப்புகளில் 150 பேர் வரை பங்கேலாம்.

* பொழுது போக்கு பூங்காங்களும் திறக்க அனுமதி.

*கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு இ. பதிவு முறை தொடர்ந்து அமல்.

*சென்னை கோயம்பேட்டில் நவ. 2, 3 தேதிகளில் வியாபாரம் செயல்பட அனுமதி.

பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மும்பை அணி அதிக விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

No comments


டில்லிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் அசத்திய மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷான் அரைசதம் விளாசினார்.

எமிரேட்சில், 13வது ஐ.பி.எல்., சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் போலார்டு, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
டில்லி அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (25), ரிஷாப் பன்ட் (21) ஆறுதல் தர, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்தது. மும்பை சார்பில் பவுல்ட், பும்ரா தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

சுலப இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு இஷான் கிஷான் (72*), குயின்டன் டி காக் (26), சூர்யகுமார் யாதவ் (12*) கைகொடுக்க, 14.2 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டில்லி சார்பில் நார்ட்ஜே ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் கூறுபவர்களை சிறையில் அடையுங்கள் : சஞ்சய் ராவத்

No comments


இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்க வேண்டும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கடந்த 11ம் தேதி ஆங்கில டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், 'சீனாவின் ஆதரவுடன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 மீண்டும் கொண்டுவரப்படும் என நான் நம்புகிறேன்' எனக் கூறினார்.

அதேபோல் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி கடந்த 23ம் தேதி செய்தியாளர்களிடம், ‛ஜம்மு காஷ்மீர் கொடியை ஏற்றினால் தான் இந்திய தேசியகொடியை ஏற்றுவோம்,' என கூறினார். இருவரின் கருத்துகளும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது, பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பரூக் அப்துல்லாவோ அல்லது மெஹபூபா முப்தியோ யாராக இருந்தாலும் இந்திய அரசியலமைப்பிற்கு சவால் விடும் வகையில் சீனாவின் உதவியை நாடுவோம் என கூறுபவர்களை கைது செய்து, 10 ஆண்டுகள் அந்தமான் சிறையில் அடைக்கப்பட வேண்டும். அப்படி பேசுபவர்கள் எப்படி சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணாமலை சன் நியூஸ் நிருபருக்கு கொடுத்த அதிர்ச்சி பதில்..! இனி யாரும் அந்த கேள்வியை கேட்கமாட்டார்கள் !

No comments


தமிழக பாஜக துணை தலைவர் அண்ணாமலை சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் மீண்டும் மீண்டும் அண்ணாமலையுடன் எதிர்க்கட்சி காரரை போல கேள்வி கேட்ட நிருபரை பங்கம் செய்துள்ளார் அண்ணாமலை.

அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்பின் போது அரசு மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீடு, 8 வழி சாலை உள்ளிட்ட கேள்விகளை நிருபர்கள் முனவைத்தனர் அதற்கு அண்ணாமலை உரிய முறையில் பதிலடி பதில் கொடுத்தார். மேலும் நடைமுறை விளக்கங்களையும் அளித்தார்.

ஆனால் ஒரு நிருபர் மட்டும் மீண்டும் மீண்டும் 8 வழி சாலை அமைக்க வேறு 100 இடங்களை காமிப்பதாக வீண் விவாதம் செய்தார், இந்த நிலையில்தான் அண்ணாமலை வழக்கமாக கொடுக்கும் பதிலை காட்டிலும் தனது மற்றொரு ஸ்டைலில் பதில் கொடுத்தார், உங்கள் வீட்டில் தண்ணி அடைத்து விட்டால் காரணம் பாஜக, நீட் காரணம் பாஜக, திமுக காரன் வீட்டில் கொண்டி உடைந்தால் காரணம் பாஜக என குற்றம் சுமத்துவதை விடுங்கள் நீங்கள் ஆக்க பூர்வமாக கேள்வி கேட்டால் நானும் ஆக்க பூர்வமாக பதில் அளிப்பேன் என குறிப்பிட்டார்.

அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பு முற்று பெற்றது, இதற்கு முன்னர் நேர்காணல் ஓன்றில் அண்ணாமலை தன்னை கேள்வி கேட்ட நெறியாளர் ஒருவரை ப்ளூ சட்டை போட்டால் இப்படி கேள்வி கேட்க தோணுமா என கிண்டல் செய்தது வைரலான நிலையில் தற்போது சன் நியூஸ் நிருபருக்கு அண்ணாமலை கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : தேர்தல் விதிமுறை மீறல் இல்லை

No comments


பீஹாரில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பீஹாரில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என பா.ஜ., தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாகேத் கோகலே என்ற சமூக ஆர்வலர், இந்த வாக்குறுதி தவறானது. தேர்தல் நேரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது எனக்கூறி தேர்தல் கமிஷனில் புகார் செய்தார்.

இதனை விசாரித்த தேர்தல் கமிஷன், பா.ஜ.க வாக்குறுதியில், தேர்தல் விதிமுறைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது. மேலும், வாக்குறுதிகள் குறித்த விதிமுறைகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

வேல்யாத்திரை எதிர்ப்பது ஏன்..? விடுதலை சிறுத்தை கட்சியினர் அதிர்ச்சி தகவல் : திருமாவளவன் கதறல்...!

No comments

தமிழகத்தில் பாஜக சார்பில் வருகின்ற நவம்பர் 6 ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது, இதற்காக மத்திய அமைச்சர்கள், தேசிய பாஜக தலைவர்கள் பங்கேற்கும் நாட்கள் இடங்கள், பேசவேண்டிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பணியில் மும்முரமாக பாஜக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இதற்கிடையில் திடீர் என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் வேல் யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி கொடுக்க கூடாது என தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர், மேலும் திருமாவளவன் தனது கட்சி சார்பில் சென்னையில் தற்போது ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் வேலயாத்திரையை மாநில அரசு அனுமதித்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும் எனவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார், இதற்கிடையில் ஏன் திருமாவளவன் வேல்யாத்திரையை தீவிரமாக எதிர்க்கிறார் என்ற பதில் கிடைத்துள்ளது, சமீபத்தில் திருமாவளவன் இந்து பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய சம்பவம் மிக பெரும் கொந்தளிப்பை பெண்கள் இடையே ஏற்படுத்தியது.

அதை தொடர்ந்து திருமாவளவனுக்கு சொந்த கட்சியை சேர்ந்தவர்கள் இடையே அதிக எதிர்ப்பை உண்டாக்கியது, இந்நிலையில்தான் திருமாவளவனை கண்டித்து கட்சி துண்டை தீவைத்து கொளுத்திவிட்டு பாஜகவில் இணைந்தார் பெரியவர் ஒருவர், இவர் திருமாவளவன் இந்து பெண்களை தவறாக பேசியதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில் சொந்த சமூகத்தினர் இடையே திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, முருகன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலும் பாஜக பக்கம் திரும்பி வருகின்றனர், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்,

பாஜகவில் இணைந்த பலரும் கூறியது தேனி மாவட்டம் பொம்மிநாயகன் பட்டியில் எங்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இறந்த பெண்ணின் உடலை தங்கள் பகுதியில் கொண்டு செல்லக்கூடாது என இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், பின்னர் கலவரம் வெடித்தது, எங்கள் வீடுகள் சூறையாடப்பட்டன ஆனால் எங்கள் பக்கம் நிற்கவேண்டிய திருமாவளவன் சம்பவம் நடந்து பல நாட்களுக்கு பிறகு இரண்டு தரப்பையும் சமாதான படுத்தும் முயற்சியில் சந்தித்தார் அன்றே எங்கள் சமூகத்தை விட திருமாவளவனுக்கு இஸ்லாமியர்கள்தான் முக்கியம் என்பதை உணர்ந்தோம் எனவே அவரை விடுத்து இப்போது பாஜகவில் இணைவதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது வேல் யாத்திரை நடைபெறும் பெரும்பாலான இடங்கள் பட்டியல் சமூக மக்கள் இருக்கும் இடங்களில் நடைபெறவுள்ளன என்பதும் அதில் பல பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் முன்னெடுக்க இருப்பதால், எங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூடாரம் காலியாகிவிடும் என்பதால் திருமாவளவன் இப்போது வேல் யாத்திரையை தடை செய்ய சொல்லி கதறுவது தெளிவாகியுள்ளது.

ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்பார்கள் அது போல் கிராமம் முழுவதும் குறிப்பாக பட்டியல் சமூகத்தினர் பாஜக நோக்கி திரும்புவது தற்போது கட்சி கொடியை கொளுத்தி பாஜகவில் இணையும் முதியவர் மூலம் தெளிவாக தெரியவந்துள்ளது.

நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த 2வது நிர்வாகம் : முதல்வர் பழனிசாமி பெருமிதம்

No comments


நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி, மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.

பி.ஏ.சி. எனப்படும் பொது விவகாரங்களுக்கான 2020 குறியீடு என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கனை தலைவராக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மாநிலங்களில் சமநிலை, வளர்ச்சி, நிலைத்தன்மை ஆகியவற்றில் நிர்வாக செயல்திறன் அடிப்படையில் சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்களில் கேரளா 1.388 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தமிழகம் 0.912 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: தமிழகம் இந்தியாவின் சிறந்த நிர்வாக மாநிலங்களில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நமது அயராத முயற்சியின் விளைவாகவும், மாநிலத்தின் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பின் விளைவாகும். நம் மாநிலத்தை இந்தியாவில் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்ய தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம், கடினமாக உழைப்போம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்து மத நம்பிக்கையை அவமதித்து வரும் கட்சி திமுக : தமிழக அரசியலே மாறுகிறது, வெளியானது அதிர்ச்சி வீடியோ

No comments


திமுக இந்து மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து அவமதித்து வரும் கட்சி என பாஜக பல ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறது, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் திமுக எந்த இடத்திலும் வாய் தவறி கூட இதுவரை எந்த இந்துக்கள் பண்டிகைக்கும் வாழ்த்து தெரிவித்தது இல்லை.

இந்நிலையில் வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு எதிராக இந்து வாக்குகள் திரள வேண்டும் என்றால் அதற்கு இதுவரை திமுக இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியது, அதே சமயத்தில் மற்ற மத பண்டிகை விழாக்களில் கலந்து கொண்டு இந்து மதத்தை இழிவுபடுத்தியது என அனைத்தையும் மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லவேண்டும் என பாஜக தீயாக வேலை செய்து வந்தது.

திமுகவை பொறுத்தவரை இந்து ரீதியாக வாக்குகள் ஒன்றிணைந்தால் அது வெற்றி வாய்ப்பை குலைத்துவிடும் என கணக்கிட்டு, மொழி சார்ந்த அரசியலைமுன்னெடுத்து சென்றது ஆனால் தற்போது மிக பெரும் மாற்றங்கள் உருவாகிவிட்டன, திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

ஆனால் தொண்டர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக திமுக கூறிவந்த நிலையில் 20 ஆண்டுகளாக திமுகவில் இருந்த தொண்டர்கள் கூட இப்போது பாஜகவில் இணைந்து வருகின்றனர், அதிலும்குறிப்பாக சமீபத்தில் திமுகவில் இருந்து விலகிய ஒருவர் சொன்ன பதில் ஒட்டு மொத்த திமுகவையும் ஆட்டம் கான செய்துள்ளது.

என் பெயர் மோகன சுந்தரம் நான் 20 ஆண்டுகளாக திமுக உறுப்பினராக இருந்திருக்கிறேன், திமுக நடத்தும் கூட்டங்களில் மாற்று மதத்தினரை அருகில் வைத்து கொண்டு இந்துக்களை இழிவு படுத்துவது பிடிக்காமல் அக்கட்சியில் இருந்து விலகி இந்து முன்னணியில் இணைந்தேன் அதன் பிறகு பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக ஒரு திமுக பல கால உறுப்பினர் இந்து முன்னணியில் இணைவது என்பது சாதாரண நிகழ்ச்சி இல்லை அதன் பிறகு பாஜகவில் இணைந்திருக்கிறார், இந்நிலையில் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது, இத்தனை ஆண்டுகளாக ஏற்படாத விழிப்புணர்வு தற்போது திமுக தொண்டர்கள் இடையே உண்டாகி இருப்பதும்.

அவர்கள் நேரடியாக இந்து முன்னணி போன்ற இயக்கங்கள் பக்கம் செல்வதும், இத்தனை ஆண்டுகாலம் திராவிடம் பேசிவந்த திமுக தலைமையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்ற கவலையில் ஆழந்துள்ளதாம் திமுக, இந்துக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என பாஜக செய்த பிரச்சாரங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் அந்த கட்சிக்கு பலனை கொடுத்துள்ளன.

ஆனால் திமுகவிற்கு எதிர்ப்பை உண்டாக்கியுள்ளன இந்நிலையில் பாஜக நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரையை தமிழகத்தில் தொடங்க இருக்கிறது இதன் முடிவில் பல்வேறு அரசியல் மாறுதல்கள் உண்டாகலாம் என கூறப்படும் நிலையில் 2021 தேர்தலில் பாஜக தனது முத்திரையை பதிக்கும் என்று திடமாக நம்பப்படுகிறது.

ஒரே இந்தியாவாக வேண்டும், ஒற்றுமையை வேண்டும் என்பதையும் : பாரதியாரை மேற்கோள் காட்டி பிரதமர் பேச்சு

No comments


தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலை பகுதியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‛‛மன்னும் இமயமலை எங்கள் மலையே : மாநிலமீததுபோல் பிறிதில்லையே!'' என்ற மகாகவி பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத்திற்கு வந்துள்ளார். இன்று, தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு, சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கெவாடியாயில் அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் விழாவில் பேசும் போது, இந்தியா, ஒரே இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதையும், ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக மகாகவி பாரதியார் எழுதிய ‛‛மன்னும் இமயமலை எங்கள் மலையே; மாநிலமீததுபோல் பிறிதில்லையே! என்ற கவிதையை மேற்கோள் காட்டி பேசினார்.

மதம் மாறுவதை ஏற்க முடியாது : அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...! இந்து அமைப்புகள் கொண்டாட்டம்...!

1 comment


திருமணத்திற்காக மட்டும் மதம் மாறுவதை ஏற்க முடியாது என அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்புக் கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அந்தப் பெண் திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறினார் என்று குறிப்பிட்ட நீதிபதி, திருமண நோக்கத்திற்காக மதம் மாற்றுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று குறிப்பிட்டு அந்தத் தம்பதி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஒருவர் மதம் மாற வேண்டும் என்றால் அந்த மதம் குறித்து தெளிவு பெற வேண்டும் 2014- ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் இஸ்லாம் குறித்து எந்த ஒரு நம்பிக்கை குறித்து அறியாத ஒரு பெண் திருமணத்தை காரணம் காட்டி மதம் மாறுவது தவறு, இது திட்டமிட்டு மதம் மாற்றம் செய்யும் நிலைக்கு உள்ளாகும் செயல் எனவே திருமணத்தை காரணம் காட்டி மதம் மாற்ற படுவதை ஏற்க முடியாது என தீர்ப்பு வழங்கினார்.

இதையடுத்து அந்த பெண் வேறு மதத்திற்கு மாறியது செல்லாது என உறுதியாகியுள்ளது, தொடர்ந்து இந்தியாவில் காதல் பெயரில் இந்து பெண்கள் வீழ்த்தப்பட்டு மதம் மாற்ற படுவது தொடர்கதையாக மாறிவரும் சூழலில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்பை பெற்றுள்ளது, சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த இளம்பெண்ணை கல்லூரி வளாகத்திலேயே தவுபிக் என்ற இளைஞன் சுட்டு கொன்றது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து அதிகரித்துவரும் லவ்ஜிஹாத் வழக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்தியாவில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவருவது என்பது மட்டுமே ஒரு தீர்வு என இந்து அமைப்புகளும் லவ் ஜிஹாத்தில் சிக்கி வாழ்க்கையை இழந்து தற்போது பெற்றோருடனும், காப்பகத்திலும் வாழ்ந்து வரும் பெண்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்வைத்து இதே போன்று பல வழக்குகளில் தீர்ப்புகள் மாறலாம் என்பதால் இந்த தீர்ப்பை நாடுமுழுவதும் உள்ள இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது

No comments


காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியலில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு, குஜராத் மாநிலம் கெவாடியாயில் அமைந்துள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நாட்டிலேயே முதன்முறையாக ஒற்றுமை சிலையை காண கடல் விமான (சீ பிளேன்) சேவையை மோடி தொடங்கி வைத்தார். இந்த சேவையை ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு நபருக்கு சுமார் 4,800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 19 பேர் வரை பயணம் செய்ய முடியும் என்ற போதிலும், 12 பேர் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முதற்கட்டமாக ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றில் இருந்து நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு இந்த சீ பிளேன் செல்லும்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, சபர்மதி ஆற்றங்கரையில் இருந்து கெவாடியா வரை ஒரு சீப்ளேன் சேவை தொடங்கப்படுகிறது. இது சுற்றுலாவை அதிகரிக்க உதவும். கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் 130 கோடி இந்தியர்கள் இணைந்து கொரோனா வீரர்களை கவுரவித்தனர். இன்று, காஷ்மீர் ஒரு புதிய வளர்ச்சிப் பாதையில் நகர்ந்துள்ளது. இன்று நாடு ஒற்றுமையின் புதிய பரிமாணங்களை நிறுவுகிறது.

இன்று, உலகின் அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும். பயங்கரவாதம் மற்றும் வன்முறையால் யாரும் பயனடைய முடியாது. இந்தியா எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியது. புல்வாமா தாக்குதலின் போது பாதுகாப்புப் படையினர் தியாகம் செய்ததில் சிலர் வருத்தப்படவில்லை என்பதை நாடு ஒருபோதும் மறக்க முடியாது. அந்த நேரத்தில், இந்த மக்கள் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருந்தார்கள்.
தேசத்தின் நலனுக்காக இதுபோன்ற அரசியலை செய்ய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் உள்ள தொடர்பை பாகிஸ்தான்ஒப்பு கொண்டுள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் அரசியல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தியாவின் எல்லை உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது வலுவாக உள்ளன. எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

இளம்பெண்ணிடம் மயங்கிய இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! நிர்வாண புகைப்படங்களை எடுக்கும் கும்பலின் பின்னணி...

No comments


இளைஞனை மயக்கி ஹொட்டலுக்கு வரவழைத்த இளம்பெண் தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் இருந்த பணம், செல்போன், காரை கொள்ளயடித்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் முவட்டுபுழா என்ற ஊரை சேர்ந்த இளைஞனிடம் பேசி அவரை மயக்கி சில தினங்களுக்கு முன்னர் இரவு சொகுசு ஹொட்டலுக்கு வரவழைத்தார்.

அங்கு வந்த அந்த இளைஞனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் அங்கு முகமது யாசின், அஸ்வின், ஆசிப், ரிஸ்வான் என நான்கு பேர் இருந்தனர். பின்னர் இளம்பெண் ஆர்யா அந்த இளைஞனை கட்டாயப்படுத்தி நிர்வாணமாக தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதையடுத்து புகைப்படத்தை வெளியில் கசியவிடாமல் இருக்க ரூபாய் மூன்றரை லட்சம் கேட்டு அனைவரும் மிரட்டினர்.

ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என இளைஞன் கூறிய நிலையில் அவரின் கார், மொபைல் போன், ஏடிஎம் கார்டை திருடிய கும்பல் அந்த இளைஞனையும் காரில் ஏற்றி கொண்டு இரவு முழுவதும் சாலையில் சுற்றி வந்தது.

அப்போது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 35,000 பணத்தை எடுத்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என இளைஞன் கூறிவிட்டு காரில் இருந்து கீழே இறங்கி தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.

அவர் குரலை கேட்ட ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர், மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

துருக்கியில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் பலி

No comments


துருக்கியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆகப் பதிவானது.

ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 16.5 கிலோ மீட்டர் ஆகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் இஸ்மிர் நகரில் நிலநடுக்கம் காரணமாகப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

துருக்கி மட்டுமல்லாது கீரிஸிலும் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கு 20-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து முற்றிலும் சேதடைந்தன. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும், முதற்கட்டமாக 14 பேர் உயிரிழந்ததாகவும், 419 பேர் காயம் அடைந்ததாகவும் துருக்கி அரசு தெரிவித்தது.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளது. ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

நிலநடுக்கம் மட்டுமல்லாது துருக்கியின் கடற்கரையை ஓட்டிய பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளன. இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டு உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதிலும் கட்டிடங்கள் பல குலுங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தனைப் பின்னதிர்வுகள் ஏற்பட்டுள்ளன என்பதால் மூல நிலநடுக்கத்தின் தீவிரத்தன்மை அங்குள்ள புவியியல் நிபுணர்களையே ஆட்டம் காணச்செய்துள்ளது.

துருக்கியில் 1999 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு 17,000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் கொரோனா 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு தொற்று உறுதி

No comments


நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 லட்சத்தைத் தாண்டியது. 

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 81,37,119-ஆக அதிகரித்தது. 

அதே கால அளவில், நாடு முழுவதும் 59,454 போ் தொற்றில் இருந்து குணமடைந்தனா். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 74,32,829-ஆக அதிகரித்தது. கொரோனா தொற்றுக்கு மேலும் 551 போ் உயிரிழந்தனா். இதனால், இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,21,641-ஆக அதிகரித்தது.  

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 6 லட்சத்தைவிட குறைந்துள்ளது. நாடு முழுவதும் 5,82,649 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலை வணங்கி மகிழ்கிறேன் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி

No comments


இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்று, அவரை வணங்கி மகிழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சுட்டுரையில், “புதிய ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்கிய ’இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல் அவர்தம் பிறந்தநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேலில் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்தார் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி

No comments


சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார்.

சர்தார் வல்லபாய் படேலின் 145ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தில்லியில் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலரஞ்சலி செலுத்தினார். 

இதேபோல் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் படேலுக்கு மரியாதை செலுத்தினர்.

சர்தார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை : 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

No comments


சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

கொரோனா பரவல் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி முதன்முறையாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று (அக்.,30) சென்றார். நேற்று நடந்த நிகழ்ச்சியில் நர்மதை மாவட்டத்தின் கெவாடியாவில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்தின் கீழ் 17 திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.


புதிய படகு வழித்தடம், புதிய கோரா பாலம், கருடேஸ்வர் அணை, அரசு குடியிருப்புகள், பேருந்து நிறுத்தம், ஒற்றுமை நர்சரி, கல்வானி சுற்றுச்சூழல் சுற்றுலா, பழங்குடியின விடுதி போன்ற திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். ஒற்றுமை படகு சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்நிலையில், இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த 'ராஷ்டிரிய ஏக்தா திவாஸ்' அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். பெண் ராணுவ கமாண்டோக்களின் மிடுக்கான அணிவகுப்பு அனைவரையும் கவர்ந்தது.

அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை

No comments


இந்திய விமானப் படைக்கு வலுசோ்க்கும் விதமாக, வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக இந்திய விமானப்படை வட்டாரங்கள் கூறியது:

தமிழகத்தின் தஞ்சையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய விமானப் படைத் தளத்துக்குச் சொந்தமான எஸ்யூ-30 எம்கேஐ விமானம், பஞ்சாபில் உள்ள படைத்தளத்தில் இருந்து இயக்கப்பட்டது. அந்த விமானம் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணையை தாங்கிச் சென்றது. 3 மணி நேரத்துக்கும் மேலாக அந்த விமானம் பயணித்து தொலைதூரம் சென்ற பின், ஏவுகணை செலுத்தப்பட்டது. இதையடுத்து வங்கக் கடலில் இருந்த இலக்கை பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்தது என்று தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு மே மாதம் முதல்முறையாக வானில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை செலுத்தி இந்திய விமானப் படை வெற்றிகரமாக சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை நிலத்திலோ, கடலிலோ தொலைதூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது. இந்த ஏவுகணையை பகல், இரவு என இருவேளைகளிலும் இலக்கை நோக்கி செலுத்த முடியும். மோசமான வானிலையிலும் இலக்கைத் தாக்கி அழிக்கும்.

இந்திய விமானப் படையின் போா் திறனை அதிகரிக்கும் நோக்கில் 40-க்கும் மேற்பட்ட சுகோய் போா் விமானங்களில் பிரமோஸ் சூப்பா்சோனிக் ஏவுகணைகளை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

'சாய்' என்ற செயலியை, இந்திய ராணுவம் அறிமுகம்

No comments


பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்திற்கு, ராணுவ வீரர்களுக்காக, 'சாய்' என்ற செயலியை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது.

இந்திய - சீன எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, சீன ராணுவத்தினர், சமூக வலைதளங்கள் வாயிலாக, இந்திய ராணுவம் குறித்த தகவல்களை பெற முயற்சிகள் செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, நம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ராணுவ வீரர்களின் பயன்பாட்டிற்காக, பிரத்யேகமாக செயலி ஒன்றை, இந்திய ராணுவம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து, இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடியின், 'சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ், 'சாய்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும் ராணுவ வீரர்களும், அதிகாரிகளும், இந்த செயலியை பயன்படுத்தலாம்.

இந்த செயலி, மிகவும் பாதுகாப்பானது. அதன் வாயிலாக பகிரப்படும் தகவல்கள், 'ஹேக்' செய்ய முடியாத வகையில், தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில், 'ஆண்ட்ராய்டு' மொபைல் போனில் உள்ள, 'வாட்ஸ் ஆப், டெலிகிராம், சம்வத், ஜிம்ஸ்' மற்றும் 'மெசேஜ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ காலிங்' உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த செயலியின் செயல்பாடுகளை ஆய்வு செய்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த செயலியை உருவாக்கிய கர்னல் சாய் சங்கருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

10.58 கி.மீ., நீள கடற்கரை சாலை திட்டத்திற்கு நாக்பூர் வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி

No comments


மும்பையில் அமைய உள்ள 10.58 கி.மீ., நீள கடற்கரை ஒட்டிய சாலை திட்டத்திற்கு நாக்பூர் முதன்மை வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பகம் அனுமதி அளித்துள்ளது.

மும்பையில் பந்த்ரா மற்றும் வோர்லி இடையே அமையும் இச்சாலை ரூ 12,700 கோடி செலவில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சாலை அமையும் கடற்கரையை ஒட்டிய பகுதியில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. மிக அரிய வகை உயிரினமான இவற்றை பத்திரமாக வேறு ஒரு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் நவம்பர் மாதம் இரு தினங்களில் இந்த பவளப்பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பருக்குள் பவளப் பாறைகளை இடம் மாற்ற முடிவு செய்ய இருந்த நிலையில் அவற்றை நவம்பர் மாதத்திலேயே பாலம் அமைய உள்ள இடத்திற்கு அப்பால் இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. நவம்பர் மாதம் கடல் ஓதம் ஏற்பட்டு கடல் நீர்மட்டம் குறையும் போது அவற்றை மரைன் லைன்ஸ் என்ற பகுதிக்கு இடம் பெயர்க்க நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.

வானில், 'நீல நிலா' தோன்றும் அரிதான நிகழ்வு இன்று தோன்றுகிறது

No comments


வானில், 'நீல நிலா' தோன்றும் அரிதான நிகழ்வு இன்று(அக்.,31) நடக்கவுள்ளது.

வழக்கமாக, மாதந்தோறும் ஒரு பவுர்ணமி, ஒரு அமாவாசை ஏற்படும். எப்போதாவது, ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமி ஏற்படும். அந்த இரண்டாவது பவுர்ணமி, 'புளூ மூன்' எனப்படும், நீல நிற நிலா' என, அழைக்கப்படுகிறது. இது, நீல நிறத்தில் தெரிவதில்லை. மற்ற நாட்களை போலவே தெரியும். ஆனாலும், அறிவியல் ரீதியாக நீல நிலா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அக்., 1ல் பவுர்ணமி வந்தது. இரண்டாவது பவுர்ணமி, இன்று(அக்., 31) இரவு, 8:19 மணிக்கு தோன்றுகிறது. நிலவு தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்கு, 29.531 நாட்கள் அல்லது 29 நாட்கள், 12 மணி, 44 நிமிடம், 38 வினாடிகள் ஆகிறது. கூடுதல் நேரத்தைச் சேர்க்கும் போது, ஒவ்வொரு, 30 மாதங்களுக்கு ஒருமுறை, 'நீல நிலா' நிகழ்வு ஏற்படுகிறது. பிப்ரவரியில், 28 அல்லது 29 நாட்கள் என்பதால் வாய்ப்பே இல்லை. அடுத்த நீல நிலா, 2023 ஆக., 31ல் ஏற்படும்.

நிதி பற்றாக்குறை இருந்தாலும் சலுகைகள் வழங்க அரசு தயங்கவில்லை: குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கம்

No comments


கொரோனா ஊரடங்கு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வந்த போதிலும், நாட்டின் பொருளாதார நிலை இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. பெரும்பாலான துறைகள் அரசின் உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. சலுகைகள் அளிப்பதால் அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் என்ற அச்சமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அரசு அளிக்கும் சலுகைகளையும், நிதிப் பற்றாக்குறையையும் சரியான விகிதத்தில் கையாள முடியும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அனைத்து துறைகளுடனான கலந்தாய்வு அணுகுமுறை காரணமாக அனைத்துத் தரப்பினரின் குரலுக்கும் செவிமடுக்கும் அரசாக இது செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். காணொலி மூலம் ‘பிசினஸ் லைன்’ நாளிதழுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியின் சுருக்கமான விவரம் வருமாறு:

மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு நலிந்து வருவதாகவும் கூட்டாட்சி தத்துவத்துக்கு மிகப்பெரும் நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது ஏற்புடையதல்ல. நாம் ஒருபோதும் கூட்டாட்சி குறித்து விவாதித்ததே கிடையாது. ஆனால், ஒவ்வொரு விஷயத்துக்கும் அதை தொடர்புபடுத்துவது கூட்டாட்சி தத்துவமாகாது. உண்மையில் கூட்டாட்சி தத்துவம் வலுவாகவே உள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதை கூட்டாட்சி தத்துவத்துடன் ஒப்பிடுவது ஏற்புடையதாக இருக்குமா?

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் விஷயத்தில் கூட்டாட்சி முறைக்கு பங்கம் வந்துவிட்டதாக கருத வேண்டியதில்லை. மத்திய, மாநில அரசுகள் இடையிலான உறவு மிகவும் வலுவாகவே உள்ளது. ஒருங்கிணைந்த முடிவுகளின் அடிப்படையில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுகிறது.

செப்டம்பர் மாதம் சில துறைகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையின் பலன் அக்டோபரில் தெரிந்தது. அனைத்துத் துறைகளிலும் மீட்சி தெரிகிறது. ஒவ்வொரு துறையும் அதற்குரிய கால நேரத்தில் நிச்சயம் மீட்சியடையும். உற்பத்தித் துறையுடன் ஆலோசனை நடத்தினேன். ஊரடங்கு காலத்திலும் இதுபோன்ற ஆலோசனைகள் நடைபெற்றன. தேவை அதிகரிக்கும் போது அவர்கள் முழு உற்பத்தித் திறனை எட்டுவதாக தெரிவித்துள்ளனர். எதிர்வரும் பண்டிகைக் காலத்துக்குப் பிறகும் நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை அடிப்படையிலான சப்ளை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். இது ஸ்திரமான மீட்சியாக இருக்கும்.

2021-22-ம் ஆண்டில் இந்தியாவுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளின் பலனாக மட்டுமல்ல தொழில் துறை எடுக்கும் நடவடிக்கைகளாலும் உற்பத்தி அதிகரிக்கும். புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் உருவாகும். ஒரு சில பொருட்களை வாங்குவதற்கு இந்தியாவும் சிறந்த நாடாக உருவாகும். கொரோனாவால் பாதிப்பு என்பதை மறுக்க முடியாது. அதேசமயம் அது சில வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்காக அரசு சலுகைகளை வழங்க தயங்குவதாகக் கூறுவது வியப்பான விஷயம். அனைத்துத் துறைகளையும் கருத்தில் கொண்டுதான் மானிய சலுகைகள், ஊக்க சலுகைகள் அளிக்கப்படுகின்றன. சலுகைகள் வழங்குவதற்கு முன்பு பல்வேறு கட்ட பரிசீலனைகள் செய்யப்படுகின்றன. வழங்கப்படும் சலுகைகள் எந்த நோக்கத்துக்காக அளிக்கப்படுகிறதோ, எவரிடம் சென்று சேர வேண்டும் என்று அரசு கருதுகிறதோ, அந்த கடைக்கோடி பொதுமக்களும் அதனால் பயன்பெற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அனைத்து முயற்சிகளுக்கும் ரிசர்வ் வங்கி முழுமையான ஒத்துழைப்பை அளிக்கிறது. அரசும் ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்தே பல முயற்சிகளை மேற்கொள்கின்றன.

விவசாய மசோதாக்களை சில மாநிலங்கள் எதிர்த்து தங்கள் மாநிலத்துக்கேற்ப சட்டம் இயற்றியுள்ளன. இந்த மசோதாவை செயல்படுத்துவதைத் தடுக்கும் என்று கருத முடியாது.

முன்பு மண்டியில் விவசாயி தனது விளைபொருளை விற்பதாயிருந்தால் விற்பனை செய்யப்படும் தொகையில் 3 சதவீத வரியை அப்பகுதி மேம்பாட்டுக்கு அளிக்க வேண்டும். அத்துடன் 3 சதவீதத்தை மண்டி கட்டணமாக செலுத்த வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட தொகையை தரகருக்கு அளிக்க வேண்டும். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பல முறை அரசு பதில் அளித்துவிட்டது. தற்போது இதை எதிர்ப்பவர்கள் ரயில் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதுவும் நிலக்கரி, உரம் உள்ளிட்டவற்றை எடுத்து வரும் சரக்கு ரயிலை தடுத்து நிறுத்துகின்றனர். இதில் இருந்தே அவர்கள் போராட்டமே அரசியலாக்குவதற்குதான் என்பது புரியும்.

அறிவிக்கப்பட்ட துறைகளுக்கு மானிய சலுகை சென்றடைவதற்கு போதிய அவகாசம் தேவை. அதேசமயம் நிதிப் பற்றாக்குறையைப் பற்றி கவலைப்படாமல் பல்வேறு துறைகளும் செலவினங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளதைப் பார்க்கும் போது பல நாட்கள் தனக்கு தூக்கம் தொலைந்துபோனதாக முன்னாள் பிரதமர் கூறியிருப்பது ஏற்புடையதாக இல்லை. கொரோனா ஊரடங்கு காலத்திலும் வேறு உலகம் உள்ளது என பலர் கூறுகின்றனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும், வளமான எதிர்காலம் தெரிகிறது. ஊரடங்கு காலத்தில் 10 லட்சம் டி-மேட் கணக்குகள் தொடங்கப்பட்டதில் இருந்தே பங்குச் சந்தை சரிவு தொடரும் அல்லது இதனால் தூக்கம் தொலையும் என்பதை எப்படி ஏற்பது? இந்திய முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடையவர்கள். நிரந்தர சேமிப்பு அல்லது தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில்தான் முதலீடு செய்வார்கள். தங்களது முதலீடு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். தற்போது பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். தற்போது நேரடியாகவே பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றமே.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

உங்களுடைய இந்த நாள் எப்படி இருக்கும்? 12 ராசி பலன்கள்

No comments


மேஷம்:
இன்று இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். மாணவர்கள் சகமாணவர்களை  அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.

ரிஷபம்:
இன்று நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.

மிதுனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம்.

கடகம்:
இன்று குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள். எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன்  செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள்.

சிம்மம்:
இன்று மாணவர்கள் கூடுதல் நேரம் ஒதுக்கி நம்பிக்கையுடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தடைதாமதம் ஏற்படும். வீண் வழக்குகள் வரலாம். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனம் தேவை. அலைச் சலை சந்திக்க நேரிடும். 

கன்னி:
இன்று பயணம் செல்ல வேண்டி இருக்கும். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது கவனம் தேவை. விருப்பத்திற்கு மாறான சம்பவங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் குறிப்பாக கூட்டு தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.

துலாம்:
இன்று வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது வியாபார மேன்மைக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம்:
இன்று குடும்பத்தில் திடீரென்று பிரச்சனைகள் தோன்றலாம். கணவன், மனைவிக்கிடையே  மனவருத்தம் ஏற்படும்படி சம்பவம் நிகழலாம்.  பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்தி தருவதாக இருக்கும்.

தனுசு:
இன்று மனக்கவலை ஏற்படலாம். முயற்சிகளில் தடை ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கை தேவை. மாணவர்கள் மிகவும் கவனத்துடன் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பாடங்களை படிப்பது நல்லது.  விளையாட்டு  போட்டிகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.

மகரம்:
இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம்.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.

கும்பம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வீண் அலைச்சல், பண வரத்தில் தாமதம் போன்றவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை இருக்கும். அலுவலகம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டிவரும். எந்திரங்களை கையாளும் போது கவனம் தேவை.

மீனம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் நலனில் கூடுதல் கவனம் செலுத்து வது நன்மை தரும்.

வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை வாய்ப்பு

No comments


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு : தமிழக கடற்கரை மற்றும் அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலில், வளிமண்டல சுழற்சி காரணமாக, வடக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில், சில இடங்களில் லேசான மழை பெய்யும். தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களிலும், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், இன்று சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் மேக மூட்டமாக காணப்படும். சில பகுதிகளில், லேசான மழை பெய்யும். அதிக பட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும். மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:சென்னை மயிலாப்பூர் டி.ஜி.பி., அலுவலகம், 11; ராமநாதபுரம் மண்டபம், சென்னை அண்ணா பல்கலை, 6; எண்ணுார், வாலிநோக்கம், பெரம்பூர், ஆலந்துார், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, 5.பெரியகுளம், சோழிங்கநல்லுார், சோழவரம், சென்னை எம்.ஜி.ஆர்.நகர், கூடலுார், 4; வானுார், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், ராதாபுரம், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியத்தில் உலகளாவிய ஆர்வம்

No comments


எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியத்தில் உலகளாவிய ஆர்வத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா, ஆயுர்வேதா மற்றும் இயற்கை வைத்தியம் ஆகியவற்றின் மீது உலகளாவிய ஆர்வத்தை கோவிட் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

உலகளாவிய ஆயுஷ் மேளா என்ற காணொலி காட்சி நிகழ்ச்சிக்கு இந்திய வர்த்தக சபை அசோசெம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியதாவது:

மாற்று மருத்துவ முறைகளை ஆராய்வதற்காக, மேற்கத்திய உலகம் கடந்த 4-5 மாதங்களாக இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. புதிய இந்தியா, சுகாதாரத்துறையிலும் தற்சார்பு இந்தியாவாக மாறும். பாரம்பரிய மருந்துகள் வாயிலாக, எதிர்ப்பு சக்தி ஊக்குவிப்பு முறைகளை உலகத்துக்கு இந்தியா வழங்கும். ஒருங்கிணைந்த மருத்துவத்தின் நற்குணங்களை கொவிட் வலியுறுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்த மருத்துவத்தை, உலக சுகாதார நிறுவனம் உட்பட உலகளாவிய மருத்துவ முறைகளில் ஒரு பகுதியாக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்றது முதல், மருத்துவ நிர்வாகத்தில் சுதேச முறையின் நன்மைகளை மைய நிலைக்குக் கொண்டு வந்தார். ஐ.நா சபையால், சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கும் வகையிலான ஒருமித்த தீர்மானத்தை திரு.மோடி கொண்டுவந்ததன் பலனாக, உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வீட்டையும் யோகா சென்றடைந்தது. மீண்டும் திரு.நரேந்திர மோடி, சுதேசிய மருத்துவ மேலாண்மை முறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு ஆயுஷுக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கினார்.

இமயமலை, இந்தியாவின் மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மருத்துவ குணமுள்ள மூலிகைகள் மற்றும் தாவரங்கள் மிக அதிகமாக நிறைந்த களஞ்சியமாக இருக்கின்றன. அனைத்து பங்குதாரர்களும் அதனை உபயோகித்து, சர்வதேச அளவுக்கு முன்னெடுக்க வேண்டும்.

இவ்வாறு மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறி உள்ளார்.
Don't Miss
© 2017 -2021 AthibAn Tv Network Pvt Ltd