Type Here to Get Search Results !

மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்குமா....? எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அதிகாரம் முடிந்துவிட்டது....



தஞ்சையில் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பொதுப்பணித்துறை, 25 ஆண்டு பழமையான சிவலிங்கம் அமைந்துள்ள மாரியம்மன் ஆலயத்தை இடித்து அகற்றியது, ஆக்கிரமிப்பு செய்து கோவில் கட்டப்பட்டதாக தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பொதுப்பணித்துறை இந்த நடவடிக்கையை எடுத்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த மக்கள் கோவில் இடிக்கப்பட்டதை மிகவும் அபசகுனம் என்று கூறுகிறார்கள், சிவன் ஆலயம் ஒரு இடத்தில் அமைவது என்பது சாதாரண காரியமல்ல அப்படி இருக்கையில் சித்தர் சாமியார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் பிரமாண்டமாக அந்த கோவில் கட்டப்பட்ட போது தஞ்சை முழுவதும் பெரிய அளவில் மழை பொழிந்தது.

சிவன் ஆலயம் இடிக்கப்படுவது, லிங்கம் அகற்றப்படுவது ஆளும் தலைவர்களுக்கு நல்ல விஷயமல்ல இது எடப்பாடி பழனிசாமியின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சாபமிடுகின்றனர், அதே நேரத்தில் இந்து அமைப்புகள் இது தமிழக அரசின் திட்டமிட்ட சதி செயல் என குற்றம் சுமத்துகின்றனர்.

தமிழகத்தில் 732 சர்ச்சுகள் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதாக வழக்கு இருக்கிறது, 16 வழக்குகளில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது ஆனால் இன்று வரை ஏன் தமிழக அரசோ எடப்பாடியின் பொதுப்பணித்துறையோ, வருவாய் துறையோ ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, 2005 – ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றம் இனி பொது நிகழ்ச்சிகள் மசூதிகள் ஆகிய எந்த இடத்திலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது என உத்தரவு போட்டது.

அதே சட்டம் மீண்டும் 2016, 2017 ஆகிய காலங்களில் மீண்டும் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர்களுக்கு கண்டிப்புடன் உத்தரவு போட்டது, ஆனால் 15 ஆண்டுகள் ஆகியும் தற்போதுவரை தமிழகத்தில் உள்ள மசூதிகளில் இருந்து ஏன் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை இந்த அரசாங்கம் அகற்றவில்லை.

நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கோவிலை இடித்து தள்ளிய தமிழக அரசு ஏன் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றவில்லை, இங்கு ஏன் உங்கள் சட்டம் வேலை செய்ய வில்லை என சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர்.நியாமான கேள்வி தானே அரசாங்கம் ஏன் ஒரு தலை பட்சமான முடிவுகளை மட்டும் எடுக்கிறது? என நடுநிலையான சிலரும் கேள்வி எழுப்புவதை காணமுடிகிறது.

அதே நேரத்தில் சட்டத்தை காரணம் காட்டி கோவிலை இடித்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு கூம்பு வடிவ ஒலிபெருக்கியை அகற்றாத மசூதிகள் மீது நடவடிக்கை எடுக்குமா? தீர்ப்பு வந்த ஆக்கிரமிப்பு சர்ச்சுகளை அகற்றுமா?

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom