Type Here to Get Search Results !

காலத்திற்கேற்ப ஐ.நா.,சபையிலும் மாற்றம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி



காலத்திற்கேற்ப ஐ.நா.,சபையிலும் மாற்றம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஐ.நா., பொதுசபையின் 75 ஆண்டு கால வரலாற்றில், முதல் முறையாக ஆண்டுப் பொதுக் கூட்டம் உலகத் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய் நிகர் முறையில் நடைபெற்றது. அதாவது உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை முன்கூட்டியே விடியோவில் பதிவிட்டு அனுப்பி, அதனை கூட்டத்தின் போது ஒளிபரப்பும் வகையில் நடத்தப்பட உள்ளது.

பொதுக் கூட்டத்தின் நிகழ்ச்சிப்படி, இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது: காலத்திற்கேற்ப ஐ.நா.,சபையும் மாற வேண்டிய நிலை வந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஐ,நா., பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. ஐ.நா சபை நிறுவிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமை கொள்கிறது. நமது தேவைகளும் சவால்களும் இன்று புதியவையாக உள்ளன. 130 கோடி மக்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் பேசுகிறேன்.

உலக அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது. ஐ.நா சபை சீர்திருத்தங்களுக்காக இந்தியா எவ்வளவு நாள் காத்து கொண்டிருப்பது. கொரோனாவுக்கு எதிரான போரில் ஐ.நா.சபையின் நாடுகளின் பங்கு என்ன ? கொரோனாவை எதிர்கொள்ள உலகளாவிய ஒற்றுமை தேவை. கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா மூன்றாம் கட்டத்தில் உள்ளது. கொரோனாவால் ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 150 நாடுகளுக்கு கொரோனா தடுப்பு மருந்துளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா தனது கடமையை சிறப்பாக செய்துவருகிறது. மனித குலத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்க இந்தியா ஒரு போதும் தயங்கியதில்லை. சுயநலம் கருதாது மனித வள மேம்பாட்டிற்காக இந்தியா பாடுபடுகிறது. உலக அளவில் அமைதியை நிலைநாட்ட அதிக உயிர்தியாகம் செய்தது இந்தியா தான். அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை அளிப்பதில் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. பெண்களுக்கான பேறுகால விடுப்பு 26 வாரங்களாக அறிவித்துள்ளது. உலகளவிய கொள்கைக்குஇந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom