Type Here to Get Search Results !

நூற்றுக்கணக்கான பெண்களை வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்த காசி வழக்கில் ஏற்பட்டுள்ள திருப்பம்! நீதிமன்றத்தின் உத்தரவு



நூற்றுக்கணக்கான பெண்களை தனது வலையில் வீழ்த்தி ஆபாச படங்கள் எடுத்த காசி வழக்கில் அவர் நண்பருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

நாகர்கோவில் காசி பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. பெண்களை ஆபாசப் படம் எடுத்து அவர்களை மிரட்டிய விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த வழக்கில் காசியின் நண்பர் தினேஷ் என்பவரும் கைதானார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தினேஷ், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

தினேஷ் தாக்கல் செய்திருந்த மனுவில், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துவிட்டேன். சென்னையில் உள்ள சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறேன். என் மீது கொடுத்த பொய்யான புகாரின் அடிப்படையில் இந்த வழக்கைப் பதிவு செய்ததால் தொடர்ந்து சிறையிலிருந்து வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவானது நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், மனுதாரர் தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மனுதாரர் மற்றும் அவரது நண்பர் காசியிடம் இருந்து லேப்-டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் தவறாக நடந்தது பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிபல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் விசாரணை மந்தமாக நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வழக்கின் தீவிரத்தை அறியாமல் சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் விசாரணை அதிகாரி செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு இந்த நீதிமன்றத்தில் ஆஜராகி, வழக்கு விசாரணை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

லேப்டாப் வீடியோ ஆதாரம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியும் காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமின் கிடைத்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom