Type Here to Get Search Results !

வந்த விஷயத்தை மட்டும் பேசுங்கள் விரட்டிவிட்ட பிரதமர் மோடி ! அதிர்ச்சியில் கனிமொழி!



கடந்த மாதம் ஆகஸ்ட் – 4 ம் தேதி பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார், ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்

ஆனால் பின்னணியில் 2ஜி வழக்கு மறுவிசாரணை குறித்து ஸ்டாலின் பிரதமரிடம் பேச முயன்றதாகவும் அப்போதே சட்டம் தன் கடமையை செய்யும் என மோடி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகின, இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து பாஜக மீது சரமாரியாக குற்றம் சுமத்தும் திமுக இன்று பிரதமரை மாநில நலனை முன்னிறுத்தி சந்திக்க வேண்டும் என நேரம் கேட்டது பிரதமர் உடனடியாக நாடாளுமன்ற பிரதமர் அலுவலகத்தில் தன்னை சந்திக்க 15 நிமிடம் ஒதுக்கினார்.

பிரதமரை சந்திக்க சென்ற திமுக எம்.பி-கள் பாலு, கனிமொழி, தயாநிதி, சிவா உள்ளிட்டோர் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும், இந்த நேரத்தில் நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் அமிட்ஷா விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என்பது தலைவரின்(ஸ்டாலின் ) விருப்பம் என பேசிவிட்டு. கையில் ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை பிரதமரிடம் கொடுத்துள்ளனர், பிரதமர் அதனை வாங்கி படித்தார்.

மேகதாதுவில் அணை கட்ட , கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தது, இதனை படித்த பிரதமர் எந்த மாநிலத்திற்கும் விரோதமான செயலை அரசு நிச்சயம் எடுக்காது என தெரிவித்தார், அதுவரை அமைதியாக இருந்த தயாநிதி மாறன் மெல்ல 2ஜி வழக்கு விசாரணை குறித்து பேசியிருக்கிறார் அதற்கு சட்டென மறுத்த பிரதமர், நீங்கள் நேரம் கேட்டது எதற்கு இப்போது எந்த விவகாரம் பேசுகிறீர்கள்?

நிச்சயம் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறி நன்றி என முடித்து கொண்டார், இதனால் திமுக எம். பி கனிமொழி கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார், திமுக பிரதமரை சந்திக்க சென்றதே மத்திய அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு நாங்கள் மாநிலங்களவையில் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் அதற்கு பலனாக எங்களுக்கு சில உதவிகள் மத்திய அரசு தரப்பில் தேவை என்ற ரீதியில் பிரதமரிடம் கேட்கலாம் என அணுகி இருக்கின்றனர்.

ஆனால் பிரதமரோ கொடுத்த நேரம் முடிந்தது என கூறி விரட்டி விடாத குறையாக அனுப்பியிருக்கிறார், இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாலு, திமுக தலைவர் ஸ்டாலின் கொடுத்த மனுவை பிரதமரிடம் கொடுத்து பரிசீலனை செய்ய சொன்னோம் என கூறிவிட்டு சென்றுவிட்டார், ஆனால் கனிமொழி தற்போதுவரை தலைக்கு மேல் தொங்கும் 2ஜி கத்தி குறித்து கவலையில் இருக்கிறாராம்.

நாடாளுமன்றம், ஊடகங்கள் என பாஜக மற்றும் பிரதமர் குறித்து மிகவும் தவறான புள்ளிவிபரங்கள் கூறி அரசியல் செய்த திமுக பற்றி மோடிக்கு தெரியாதா? என்ன அதுதான் விரட்டியடித்து இருக்கிறார் என பாஜகவினர் திமுக எம் பி கள் காது படவே டெல்லியில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom