Type Here to Get Search Results !

அடுத்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தயாராக உள்ளது! திமுகவின் முக்கிய பிரமுகர்கள் அவுட்


தமிழகத்தில் பாஜக முழு அளவில் களம் இறங்கி தேர்தல் பணிகளை செய்து வருகிறது, எந்த ஆண்டும் இல்லாத அளவாக இந்த முறை பாஜக கிளை அளவில் நிர்வாகிகளை சந்தித்தல், பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்தி வருகின்றனர், பாஜக மாநில தலைவர் முருகன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அண்ணாமலை மற்றொரு புறம் கொங்கு பகுதி முழுவதும் பாஜகவினரை சந்தித்து வருகிறார், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறார், இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவாக பாஜகவை நோக்கி திமுகவினர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

VP துரைசாமி, குக.செல்வம், இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகி கதிரவன், கோயம்புத்தூர் திமுக நிர்வாகிகள் என தலைமை கழக நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக நிர்வாகிகள் வரை பாஜக நோக்கி இணைந்து வருகின்றனர், இந்நிலையில் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,

அடுத்த ஒரு வாரத்தில் பாஜகவில் மிக பெரிய நபர்கள் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார், இதற்கு முன்னர் கு.க.செல்வம், அண்ணாமலை போன்றோர் பாஜகவில் இணையும் முன்பு சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் வினோஜ், எனவே இன்றைய அவரின் ட்விட்டர் பதிவு முக்கிய கவனம் பெறுகிறது.



பாஜக வட்டாரத்தில் நாம் விசாரணை செய்த வரையில் திமுகவில் உதயநிதி வருகையால் ஓரம்கட்டபட்ட திருச்சியை சேர்ந்த மூத்த திமுக தலைவரும், இன்னும் பிற திமுக எம்.பி-கள் மற்றும் பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற பல்வேறு திமுக ஒன்றிய நிர்வாகிகள் கூண்டோடு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையலாம் எனவும் அந்த நாள் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கும் எனவும் பாஜக தரப்பில் திடமாக நம்பப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom