Type Here to Get Search Results !

எஸ்.பி.யின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள்



பாடும் நிலாவாக பாடி பறந்த வானம் பாடி 'பாலு' எனும் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75) மண்ணை விட்டு மறந்தார். அவரின் நல்ல குணம் யாருக்கும் வராது. மிகச்சிறந்த மனிதர் அவர். யாரையும் கோபமாக கூட பேசாத பண்பாளர். அவரின் சாதனைகள் எண்ணிலடங்காதவை. பத்மஸ்ரீ, பத்மபூஷண், 6 முறை தேசிய விருதுகள், பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர், தனியார் அமைப்பு விருதுகள் என அவரின் இசை மகுடத்தை அலங்கரித்தன. அதைப்பற்றிய சிறு தொகுப்பு இதோ...

எஸ்.பி.பாலசுப்ரமணியம் பயோடேட்டா

இயற்பெயர் : ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்
சினிமா பெயர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிறப்பு: 04- ஜுன்- 1946
பிறந்த இடம் : நெல்லூர் - ஆந்திர மாநிலம்
சினிமா அனுபவம் : 1966-லிருந்து - 2020வரை
துணைவி : சாவித்ரி
குழந்தைகள் : எஸ்பிபி.சரண் (மகன்), பல்லவி (மகள்)
பெற்றோர் : எஸ்.பி.சாம்பமூர்த்தி (தந்தை)
சகோதரி: எஸ்.பி.சைலஜா(பின்னணி பாடகி)
புனைப்பெயர் : பாலு

எஸ்.பி.பி. பெற்ற விருதுகள்

1979 ஆம் ஆண்டு "சங்கரா பரணம்" தெலுங்கு திரைப்படத்தில் 'ஓம்கார நாதானு" என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
1981 ஆம் ஆண்டு "ஏக் துஜே கே லியே" ஹிந்தி திரைப்படத்தில் 'தேரே மேரே பீச் மே' என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
1983 ஆம் ஆண்டு "சாஹர சங்கமம்" தெலுங்கு திரைப்படத்தில் 'தகிட ததிமி' என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
1988 ஆம் ஆண்டு "ருத்ர வீணா" தெலுங்கு திரைப்படத்தில் 'செப்பாலனி உண்டி" என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
1995 ஆம் ஆண்டு "சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷர கவாய்" கன்னட திரைப்படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
1996 ஆம் ஆண்டு "மின்சார கனவு" தமிழ் திரைப்படத்தில் 'தங்கத் தாமரை மலரே' என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "தேசிய விருது".
2001 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் "பத்மஸ்ரீ" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் "பத்ம பூஷண்" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டு "மைனே பியார் கியா" ஹிந்தி திரைப்படத்தில் 'தில் தீவானா' என்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "பிலம்பேர்" விருது வழங்கப்பட்டது.
2007 ஆம் ஆண்டு "மொழி" தமிழ் திரைப்படத்தில் பாடியதற்காக சிறந்த பின்னணி பாடகருக்கான "பிலிம்பேர்" விருது வழங்கப்பட்டது.
1969 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான "தமிழக அரசு சினிமா விருது" 'அடிமைப் பெண்", 'சாந்தி நிலையம்' திரைப்படங்களில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1980 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான "தமிழக அரசு சினிமா விருது" 'நிழல்கள்' திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான "தமிழக அரசு சினிமா விருது" 'கேளடி கண்மணி" திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1994 ஆம் ஆண்டு சிறந்த பின்னணி பாடகருக்கான "தமிழக அரசு சினிமா விருது" 'ஜெய்ஹிந்த்' திரைப்படத்தில் பாடியதற்காக வழங்கப்பட்டது.
1978 முதல் 2012 வரை தெலுங்கு திரைப்படங்களில் சிறந்த பின்னணி பாடகருக்கான மற்றும் சிறந்த இசையமைப்பாளருக்கான "நந்தி விருது" பல்வேறு திரைப்படங்களுக்காக பலமுறை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1997--98 2004--05 மற்றும் 2007-08 ஆண்டுகளில் சிறந்த பின்னணி பாடகருக்கான "கர்நாடக அரசு சினிமா விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
1981 ஆம் ஆண்டு "கலைமாமணி விருது" வழங்கி தமிழக அரசால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஏனைய பல்கலைக் கழகங்களிலிருந்து "கௌரவ டாக்டர் பட்டம்" மற்றும் இன்னும் பிற ஏராளமான விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர்.
நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom