தமிழகத்தில் இன்று (செப்.,30) ஒரே நாளில் 5,610 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5.41 லட்சத்தை கடந்தது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 5,659 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 5,646 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 13 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 186 ஆய்வகங்கள் (அரசு-66 மற்றும் தனியார்-120) மூலமாக, இன்று மட்டும் 86,928 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 73 லட்சத்து 54 ஆயிரத்து 050 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,476 பேர் ஆண்கள், 2,183 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 3,60,729 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 2,36,842 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 67 பேர் உயிரிழந்தனர். அதில், 21 பேர் தனியார் மருத்துவமனையிலும், 46 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 9,520 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,263 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.