Ads Area

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி




தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கடலூரில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகு முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. நோய் தொற்று ஏற்படுத்தும் பகுதிகளுக்கு நடமாடும் பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து இல்லாமல், டாக்டர்கள் சிறப்பாக செயல்பட்டு நோய் தொற்றை குணப்படுத்துகின்றனர்.

சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை திட்டம், வீட்டு மனை திட்டம், குடிமராமத்து திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் கடலூரில் சிறப்பாக செயல்படுகிறது. கடலூரில் காய்ச்சல் முகாம் மூலம் 3.25 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,114 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கடலூர் வந்த முதல்வர் இ.பி.எஸ்., 32 கோடி மதிப்பிலான 22 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் பயனாளர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், கொரோனா நோயாளிகளுடன், முதல்வர் இபிஎஸ், வீடியோ கான்பரன்சிங் முறையில் பேசினார். அப்போது, அவர்களின் நலன் விசாரித்தார்

Post a comment

0 Comments