Type Here to Get Search Results !

பல மாத திட்டமிடலுக்கு பின்னரே காங்., தலைமைக்கு எதிராக கடிதம் அளித்ததாக தகவல்




காந்தி குடும்பத்தினரின் தலைமைக்கு சவாலாகக் கருதப்பட்ட 23 காங்கிரஸ் தலைவர்களின் "கருத்து வேறுபாடு கடிதமானது, பல மாதங்கள் திட்டமிடப்பட்டதாகவும், முக்கிய குழுவினரின் கலந்துரையாடல்களுக்குப் பின்னர் உருவானதாகவும், கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான மூத்த காங்கிரஸ் தலைவர் என்டிடிவிக்கு தெரிவித்துள்ளார். 
கட்சிக்கு இடைக்கால தலைவர் இல்லாமல், நிரந்தர தலைவர் வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அளிக்கப்பட்ட கடிதம் காரணமாக கட்சியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு, தற்போது நிலைமை இயல்புக்கு திரும்பி வருகிறது. எனினும், இந்த கடிதத்தை அளிப்பதற்கு 5 மாதங்கள் திட்டமிடப்பட்டதாக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 

ஆரம்பத்தில் 5 பேருக்குள் சிறு குழுவினர் மத்தியில் மட்டுமே இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக இந்த சந்திப்புகள் அனைத்தும் குலாம் நபி ஆசாத், கபில் சிபில் மற்றும் ஆனந்த் சர்மா உள்ளிட்டோர் வீடுகளில் வைத்து நிகழ்ந்துள்ளது. 

கலந்துரையாடல்கள், கையொப்பமிட்டவரின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கி, மத்திய பிரதேச படுதோல்விக்குப் பிறகு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, கமல்நாத்தின் காங்கிரஸ் அரசை வீழ்த்திய பாஜகவுக்கு ராகுல் காந்தியின் விசுவாசி ஜோதிராதித்யா சிந்தியா மாறியது கட்சிக்குள்ளேயே பலரைத் திணறடித்தது.

இந்த விவகாரங்களின் நிலை குறித்து கவலைப்பட்ட குழு, சோனியா காந்தியுடன் ஒரு சந்திப்பு மேற்கொள்ள அனுமதி கேட்டுக்கொண்டே இருந்தது. இடைக்கால காங்கிரஸ் தலைவர் நியமனம் வழங்காதபோது, கடிதத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இது ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கடிதத்தின் நகல் யாருக்கும் வழங்கப்படவில்லை; வரைவு ஒவ்வொரு நபருக்கும் வாசிக்கப்பட்டது. தொடர்ந்ந்து அவர்கள் பல மாதங்களாக ஒரு குழுவாக இருந்தது இப்படித்தான்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom