Type Here to Get Search Results !

அண்ணாமலை பாஜகவில் இணைந்ததும்.... கதிகலங்கி போயிருக்கும் ஸ்டாலின்.....! காரணம் இதோ......




திமுக தலைவர் ஸ்டாலின் நான்கு விஷயங்களை நினைத்து மிகவும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது, ஒன்று அதிமுக தன்னை அனைத்து மதங்களுக்கும் பொதுவான கட்சியாக நிலை நிறுத்தி, அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லி தனது நிலையை உறுதிப்படுத்தி கொண்டுள்ளது, ஆனால் திமுகவால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லக்கூட முடியாத நிலையில் சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு உள்ளது.

இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் வளர்ந்து வரும் இந்துக்கள் வாக்கு வங்கி தேர்தலில் திமுகவின் வெற்றியை பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம், அதோடு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் என ஸ்டாலின் கணக்கு போடவில்லை, ஆனால் முடிவு ஆச்சர்யத்தை கொடுத்தது.

இதற்கு காரணம் கொங்கு பகுதியில் அதிகமாக இருக்கும் மற்றொரு சமூகமான அருந்ததியர் சமூகம் முதல் முறையாக அதிமுகவை தவிர்த்து முழு அளவில் திமுக கூட்டணிக்கு வாக்குகளை செலுத்தியுள்ளது, ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அருந்ததியர் வாக்குகள் திமுகவிற்கு வருமா என்பது சந்தேகம் காரணம் பாஜக தலைவராக அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த முருகன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டது.

மற்றொன்று கொங்கு மண்டலத்தில் திமுகவின் அருந்ததியர் சமூகத்தின் முகமாக இருந்த வி பி துரைசாமி பாஜகவில் இணைந்தது போன்ற காரணங்களால் வாக்குகள் எங்கு பாஜக பக்கம் சென்றுவிடுமோ என நினைத்து என்ன செய்வது என கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாராம் ஸ்டாலின்.

அதோடு மிக முக்கியமாக 2ஜி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துவிட்டது, வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் என்பதால் அதன் வழக்கு செல்லும் நிலையை தினமும் கனிமொழியிடம் கேட்டு வருகிறாராம், சமீபத்தில் ஸ்விக்கி ஊழியர்கள் ஸ்டாலினை சந்தித்து முறையிட்டதற்கு பின்னர், கனிமொழியிடம் வழக்கு செல்லும் நிலை குறித்து கேட்டு அறிந்திருக்கிறார்.

இவை அனைத்தையும் விட பாஜகவில் முக்கிய நபர்கள் தொடர்ச்சியாக இணைந்து வருவதும், திமுகவில் அதிருப்தியில் இருக்கும் நபர்கள் பலர் பாஜகவில் இணைவார்கள் என ஸ்டாலின் நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது, மேலும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் இருக்கும் திமுக முக்கிய தலைவர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் கட்சி மாறிவிட்டால் முதலமைச்சர் பதவி கனவு கனவாக போய் விடுமோ என கடும் கலக்கத்தில் தினமும் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்திடம் தற்போதைய நிலவரம் என்ன என அறிக்கை கேட்டு கவனமாக பார்த்து வருகிறாராம்.

இதற்கிடையில் அண்ணாமலை பாஜகவில் இணைந்ததும், தங்கள் ஆதரவு ஊடகங்களே அண்ணாமலை செய்தியாளர் சந்திப்புகளை நேரலை செய்வதை பார்த்து என்ன நடக்க போகிறது என தெரியவில்லையே என புலம்பி வருகிறாராம் !!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom