மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமித்ஷா
உடல்நலன் தேறியதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

கடந்த ஆக.,2ம் தேதி கொரோனாவினால் பாதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஹரியானா மாநிலம் கூர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கடந்த 18 ம் தேதி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு காரணமாக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா அல்லாதவர்களுக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் குணமடைந்துவிட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என நேற்று முன்தினம் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தது.இந்நிலையில், இன்று காலை அமித்ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Post a comment

0 Comments