Ads Area

உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, ரஷ்யா அறிமுகப்படுத்தியது




உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை, ரஷ்யா தன் நாட்டிற்குள் அறிமுகப்படுத்தி உள்ளது. ஸ்புட்னிக்-5 (Sputnik-V) என்ற அத்தடுப்பூசி, ரஷ்ய ணுவ அமைச்சகமும், கமாலேயா தொற்றுநோய் மற்றும் நுண்ணுயிரி அறிவியல் ஆராய்ச்சி நிலையமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் பலனாக உருவானது.

அதிவிரைவாக, அதிரடியாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-5ன் தரம் பற்றி கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றை அடக்க, இந்த ஊசியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகளுக்கே போட்டுவிட்டோம் என மருத்துவர்கள், ரஷ்ய செய்தி முகமைகளிடம் தெரிவித்துள்ளனர். தவிர, 100 பேருக்கு, ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்தை கொடுத்து சில மாதங்கள் நடத்திய சோதனையில், அவை கொரோனா வைரசை உடலில் பரவாமல் தடுத்தன என்றும் ரஷ்ய மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதே ரஷ்யாவில், இரண்டாவது தடுப்பூசியும் உருவாக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய செய்தி முகமைகள், அண்மையில் அறிவித்துள்ளன. எபிவாக்கொரோனா (EpiVacCorona) என்ற அந்த தடுப்பூசியை, 'வெக்டார்' வைரசியல் மற்றும் நுண்ணுயிரியியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. எபிவேக்கொரோனா ஊசியை, சோதனைக்கு முன்வந்தோருக்கு 14 முதல் 21 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை போட்டதில், எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்பதோடு, அவர்கள் கொரோனா தொற்றின்றி நலமாக இருப்பதாக ரஷ்ய செய்தி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஸ்புட்னிக்-5 மற்றும் எபிவேக்கொரோனா ஆகிய இரு தடுப்பூசிகளும் மிக குறுகிய காலகட்டத்திற்குள் ரஷ்ய அரசின் அங்கீகாரத்தைப் பெற்று அங்கு மக்களுக்கு போட அனுமதிக்கப்பட்டுள்ளன. இது, ஒருபக்கம் நம்பிக்கையை தந்தாலும், மறுபக்கம், இரு தடுப்பூசிகளும் உருவாக்கப்பட்டு, சோதிக்கப்பட்ட விதம், மருத்துவ உலகின் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

Post a comment

0 Comments