Type Here to Get Search Results !

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் : எதிர் வாதத்தை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பு




பாபர் மசூதி இடிப்பு வழக்கில், எதிர் தரப்பு வாதங்கள் தாக்கல் செய்ய, நாளை மறுதினம் இறுதி அவகாசம் வழங்கி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இது குறித்த வழக்கில், பா.ஜ., மூத்த தலைவர்கள், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், உமா பாரதி, வினய் கத்தியார் உட்பட, 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தலைவர்கள் மீது தனி வழக்கு, லட்சக்கணக்கான கரசேவகர்கள் மீது தனி வழக்கு என, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தலைவர்கள் மீதான வழக்கு, உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்திலும்; கரசேவகர்கள் மீதான வழக்கு, லக்னோ சிறப்பு நீதிமன்றத்திலும் நடந்து வந்தன. ரேபரேலி சிறப்பு நீதிமன்றம், 2001-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில், அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் உறுதி செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.ஐ., சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 'இந்த வழக்கை, லக்னோ, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரித்து, இரண்டு ஆண்டுக்குள், தீர்ப்பு வழங்க வேண்டும்' என, 2017ல் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக, எஸ்.கே.யாதவ் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், செப்., 30க்குள் இரு தரப்பு விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்க, உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்தரப்பு வாதங்களை தாக்கல் செய்ய, மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், இந்த வழக்கில், அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இரண்டுமுறை அவகாசம் அளித்தும், எதிர்தரப்பு வாதங்களை தாக்கல் செய்யாதது, கவலை அளிக்கிறது' என கூறினர். பின்னர், கடைசி வாய்ப்பாக, நாளை மறுதினம், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யுமாறு, எதிர்தரப்புக்கு உத்தரவிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom