Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

டி20 கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்… அசாத்திய சாதனை புரிந்த பிராவோ!




வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ, டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். தற்போது கரீபியன் பிரீமியர் லீக் 2020 தொடர் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் செயின்ட் லூசிஆ சவுக்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் நடந்தப் போட்டியில் பிராவோ, நைட் ரைடர்ஸ் அணிக்காக களமிறங்கினார். அவர் சவுக்ஸ் அணியில் ரகீம் கோர்ன்வாலின் விக்கெட்டைக்கை கைப்பற்றியபோது, டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்தவர் என்கிற பெருமையைப் பெற்றார். 

இதுவரை ஒரு பவுலர் கூட, டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகள் மைல்கல்லையே எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கெட் அணியில் டி20 கேப்டன் லசித் மலிங்கா, பிராவோவுக்கு அடுத்தபடியாக 390 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிக டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சாதனையைப் பொறுத்தவரை பிராவோ, இரண்டாவது இடத்தில் உள்ளார். கீரோன் பொலார்டு, அதிக ஆட்டங்கள் விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் பிராவோ. இதுவரை சென்னை அணிக்காக அவர் 118 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

சிஎஸ்கே அணி, பிராவோவைப் பாராட்டி, “ஒரு சாம்பியனுக்கு இது ஒரு சாதாரண மைல்கல். டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஒரே வீரரான பிராவோவுக்கு விசில் போடு” எனப் பதிவிட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர், வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியே நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை அணிக்கும் இடையில்தான். அந்தப் போட்டியில் பிராவோவும் பங்கேற்க உள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.