சீன வண்ண தொலைக்காட்சி இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதிக்கிறதுலடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த மோதலை தொடர்ந்து சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக அந்நாட்டு கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

கல்வான் மோதலைத் தொடர்ந்து சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதையடுத்து சீனாவில் இருந்து மின்கருவிகள் எதுவும் இறக்குமதி செய்ய வேண்டாம் என மின்நிறுவனங்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ரயில்வே துறைகளிலும் நெடுஞ்சாலைத் துறைகளிலும் சீனாவுக்கு அளிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சீன கலர் டிவி இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு முன் கட்டுப்பாடு இல்லாமல் இருந்த நிலையில் சீனாவில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்ய தற்போது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' தற்போது கலர் டிவிக்கான இறக்குமதி கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டியது அவசியம். சீனாவின் கலர் டிவி வர்த்தகத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை' இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் டிவி வணிகம் நடக்கிறது. இதில் 36 சதவீதம் சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Post a comment

0 Comments