Type Here to Get Search Results !

நாளை வரலட்சுமி விரதம் 2020: மாங்கல்ய வரம், மங்களம் தரும் நாள்...



வரலட்சுமி விரதம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத பெளர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வெள்ளிக்கிழமை இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

சுமங்கலி பெண்கள், மகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமிக்கு செய்யும் சிறப்பான வழிபாட்டு பூஜை இந்த வரலட்சுமி விரதம் ஆகும்.

விஷ்ணு என்பதற்கு எங்கும் நிறைந்திருப்பவர் என்றும், லட்சுமம் என்றால் குறிப்பு அல்லது அடையாளம் என்று பொருள். விஷ்ணு தான் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்தும் வகையில் உலகில் உள்ள அனைத்து அழகுகளையும் ஒன்றாக ஒருங்கிணைத்து உருவாக்கிய அடையாளம் தான் மகாலட்சுமி.

பொதுவாக ஆடி மாதம் 3 அல்லது 4வது வெள்ளிக்கிழமைகளில் வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
சுமங்கலிகள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் குடும்பம் தலைத்தோங்கும். கன்னிப்பெண்கள் மேற்கொள்வதால் சிறப்பான குடும்ப வாழ்க்கை அமைய பெறுவர்.

வரலட்சுமி விரதத்திற்கான அலங்காரம் எப்படி செய்வது? எதை எல்லாம் பயன்படுத்தலாம்

வரலட்சுமி விரதம் கடைப்பிடிகும் முறை:
வீடு அல்லது அலுவலகத்தில் தென் கிழக்கு மூலையில் சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் அம்மன் முகம் எழுப்ப வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைத்து வணங்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து பின் அதை ஒரு பலகை மீது வைக்கவும்.

வரலட்சுமி விரத பூஜைக்கு தேவையான பொருட்கள்
சின்ன வாழைக்கன்று இரண்டு
தோரணம் (கிடைத்தால்)
மாவிலை தோரணத்திற்கு.
முகம் பார்க்கும் கண்ணாடி (அம்மனின் பின் அலங்காரத்தை ரசிக்க)
பூச்சரம் அம்மன் அலங்காரத்திற்கு
அம்மனை வைக்க சொம்பு.

காதோலை இரண்டு பக்கமும் வைக்க
கருக வளையல் இரண்டு பக்கமும் வைக்க
மாவிலைக்கொத்து, தேங்காய் மற்றும் அம்மன் வைக்க
தாழம்பூ
சிறிய வாழை இலை. அதில் அரிசியை பரப்பி, அம்மனை வைக்க
புதிய ரவிக்கை துண்டு (அம்மனுக்கு சாத்த)

பூஜைக்கு தேவையான பொருட்கள்
திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
பூமாலை மற்றும் உதிரிப்பூக்கள் (அர்ச்சனைக்கு)
பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
மஞ்சள் தூள், சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
பஞ்ச பாத்திரம், உத்தரினி.
இழை(மா)க்கோலம் போட தேவையான பொருட்கள்
மஞ்சள் சரடு அதற்கு கட்ட பூ.
அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்தியங்கள்
இட்லி
அப்பம்

வடை (உளுந்து வடை)
கொழுக்கட்டை
வெல்ல பாயசம்
கொத்துக்கடலை சுண்டல் (சாயந்திரம் நைவேத்தியத்திற்கு)
இதற்கு தேவையான தேங்காய், வெல்லம் மற்றும் தேவையான மளிகை சாமான்கள்

>> பின் சிலை முன் ஒரு வாழையிலை போட்டு, ஒரு படி பச்சரிசி பரப்பி, மாவிலை, தேங்காய், எலுமிச்சை, பொன், பழங்கள் வைத்து, சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.

>> ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிரப்பி (புனித நீர் இல்லாவிட்டால் தூய நீரை வைக்கலாம்), மாவிலையுடன் தேங்காயை, அரிசின் நடுவில் வைக்க வேண்டும்.

>> பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டு வைத்து சுவாமியை பூஜை செய்ய வேண்டும்.

வரலட்சுமி விரதம் எப்படி வந்தது... அதன் வரலாற்று கதை, ஆன்மிக பின்னனி இதோ

>> கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். அஷ்ட லட்சுமிகளுக்கு பிடித்தமான அருகம் புல் தூவி பூஜை செய்யலாம்.

>> பூஜையின் போது மகாலட்சுமி ஸ்தோத்திரம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஆகியவற்றை படிக்கலாம்.


>> வரலட்சுமி விரத பூஜைக்காக வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுக்க வேண்டும். நெய்வேத்தியமாக கொழுகட்டை படைக்கலாம்.

>> பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதன் மூலம் அன்னபூரணியின் அருள் நமக்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

>> சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.


வரலட்சுமி விரதத்தின் பலன்கள்:
வரலட்சுமி விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்.
செல்வம் வளரும், மங்கல வாழ்க்கை அமையும், கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். சுமங்கலி பெண்கள் இந்த பூஜையின் போது மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்து அதை அணிந்து கொள்வார்கள். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom