Type Here to Get Search Results !

இறந்தும் இருக்கிறார் சுஷாந்த் சிங் 2000 கோடியை வசூலித்து அவருடைய திரைப்படம் சாதனை



பல விந்தைகளும், புதிர்களும், காட்சிகளும், சாட்சிகளும், ஆசைகளும், நிராசைகளும், கனவுகளும் நிஜங்களும் நிறைந்தது சினிமா உலகம். இந்திய மக்கள் சினிமாவை விரும்பும் மக்கள். இங்கு சினிமா வாழ்வின் ஒரு அங்கமாக உள்ளது. இதில் நடக்கும் நல்ல விஷயங்களால் நாம் மகிழ்ச்சியடைகிறோம். தகாத நிகழ்வுகளால் மன வேதனைக்கு ஆளாகிறோம்.

அவ்வகையில், கடந்த மாதம், இந்திய திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய ஒரு செய்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங்கின் (Sushant Singh) மரணம். அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து சினிமா ரசிகர்களும் இந்த செய்தியால் அதிர்ச்சியடைந்தார்கள். ‘எம்.எஸ். தோனி’ படத்தில் அவர் தோனியாக நடித்த பிறகு, அவருக்கு தமிழிலும் ரசிகர் கூட்டம் அதிகரித்தது.

அவர் நடித்த இறுதிப் படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர் மரணமடைந்தார். மேலோட்டமாக அது தற்கொலையாகத் தோன்றினாலும், இந்த மரணம் குறித்து நாள்தோறும் புதுப் புது செய்திகள் வெளி வரும் நிலையில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சுஷாந்த் சிங் கடைசியாக நடித்த Dil Bechara படம் OTT தளத்தில் வெளிவந்தது.

Mukesh Chhabra இயக்கி இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான இப்படம் OTT தளத்தில் வெளிவந்த அன்றே அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. இப்படம் வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் இந்த படத்தை OTT தளத்தில் பார்த்துள்ளனர்.

அதாவது, இதை கணக்கீடு வசூலில் ஒப்பிட்டு பார்த்தால் ஒரே நாளில் ரு 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து உலக சாதனை படைத்ததுள்ளது. அவ்வகையில் வசூலை அள்ளிய பாகுபலி, தங்கல் போன்ற படங்களை இது பின்னுக்குத் தள்ளி விட்டது. 

இப்படத்திற்கு இசை அமைத்த இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான் இதனை அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத், Kai Po Che, M.S.Dhoni, Chichchore உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Sonchirya என்ற அவரது படம் 2019 ஆம் ஆண்டில் வெளி வந்த போது, சில தனிப்படட் காரணங்களால் அப்படம் வியாபார ரீதியாக பல சவால்களை எதிர்கொண்டது. அப்போது, தன் படத்தை சென்று பார்க்குமாறு அவர் அனைவரையும் வருந்திக் கேட்டுக்கொண்டதாக சுஷாந்தே பகிர்ந்துள்ளார்.

ஆனால், இன்று அவர் படம் செய்துள்ள மகத்தான சாதனையை அவரால் காண முடியவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயமாகும். 


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Bottom