பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது 98.1% தேர்ச்சியுடன் கோவை முதலிடம்பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 98.1 சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடத்தை பிடித்தது.

தமிழகம் முழுவதும் 8.30 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில், தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களின், மொபைல் போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. இன்று வெளியான முடிவுகளில் மாணவர்கள் 94.38 சதவீதமும், மாணவிகள் 97.49 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்தத்தில் 96.04 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1 சதவீதம் அதிகமாகும்.

மாவட்ட அளவில் தேர்ச்சி விகிதம்:

கோவை - 98.10 சதவீதம்
விருதுநகர் - 97.90 சதவீதம்
கரூர் - 97.51 சதவீதம்

பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி விகிதம்:
 
அறிவியல் பாடப் பிரிவுகள் - 96.33 சதவீதம்
வணிகவியல் பாடப் பிரிவுகள் - 96.28 சதவீதம்
கலைப் பிரிவுகள் - 94.11 சதவீதம்
தொழிற்பாடப் பிரிவுகள் - 92.77 சதவீதம்

முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்:

இயற்பியல் - 96.68 சதவீதம்
வேதியியல் - 99.95 சதவீதம்
கணக்குப் பதிவியல் - 98.16 சதவீதம்
உயிரியல் - 97.64 சதவீதம்
கணிதம் - 98.56 சதவீதம்
தாவரவியல் - 93.78 சதவீதம்
விலங்கியல் - 94.53 சதவீதம்
கணினி அறிவியல் - 99.25 சதவீதம்
வணிகவியல் - 96.44 சதவீதம்

பள்ளிகள் தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள் - 92.71 சதவீதம்
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 96.95 சதவீதம்
தனியார் பள்ளிகள் - 99.51 சதவீதம்
பெண்கள் பள்ளிகள் - 97.56 சதவீதம்
ஆண்கள் பள்ளிகள் - 91.77 சதவீதம்

Post a comment

0 Comments